பெண் கவிஞர்களுக்கு ஒரு செய்தி...

அன்புடைய பெண் கவிஞர்களே... என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு  இரா.பிரேமா என்கிற பேராசிரியர் ஒரு மெயில் அனுப்பியிருந்தார். அது கீழ்வருமாறு; ...

காலங்களில் ‘அவர்' என் வசந்தம் (நிறைவு பகுதி)

முதல் பாகத்தை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்- காலங்களில் ‘அவர்' என் வசந்தம் பாகம் 1 “எனக்கு கல்யாணம் செய்யும் போது 16-17வயசு. அபூர்வமான மனிதர் என் கணவர். சோர்வில்லாதவர். நகைச்சுவையாளர். யாரையும் கடிந்து பேசமாட்டார். எல்லாருக்கும் தன்னாலான நல்லதை செய்யப் பிரயாசைப்பட்டவர். ருசித்து சாப்பிடுவார்....

காலங்களில் ‘அவர்' என் வசந்தம்

கவிஞர்.மீராவின் மனைவி இரா.சுசீலாவிடம் ஒரு நேர்காணல்...      தமிழ்மொழி, பொதுவுடமை, சமுதாய சீர்திருத்தம், தொழிலாளர் முன்னேற்றம் இவற்றில் பாரதி, பாரதிதாசனையொத்த எழுச்சிக் கவிஞர் தமிழுலகில் ‘மீரா' என்றறியப்படும் மீ. ராசேந்திரன்! பாவேந்தர் பாரதிதாசன் ... என் குரு! மகாகவி பாரதி... என் தெய்வம்! என்று தன்...

அசைதலின் பெரு வலி

தோட்டத்தில் கிளைபரப்பி நிற்கும் மாமரப் பொந்தில், உச்சிப் பொழுதின் வெம்மையடங்கக் கரையும் ஒற்றைக் குயிலின் மென் சோகம்... நடுநிசியில் அழுகையோய்ந்து கிடக்கும் சாவு வீட்டின் ஒற்றை விசும்பலாய் மனதைப் பிசைகிறது... ஞாபக அடுக்குகளின் அடியாழத்தில் அமிழ்ந்து போன பலப்பல துயரங்களை அசைத்து அசைத்து மேலெழுப்பப் போதுமானதாகிறது...

கடும் வெயிலையும் தாங்கிப் பலனளிக்கும் திணைப் பயிர்கள்

நிச்சயதார்த்தம்... 1938-ம் ஆண்டு ‘பூலச்சாப்' எனும் இதழில் தொடர்கதையாய் வந்து, நூல் வடிவமான நாவலிது. மும்பையிலும் அதைச் சார்ந்த செளராஷ்ட்டிர தேசத்துக் கிராமங்களிலும் வாழ்ந்து வந்த குஜராத்தி மக்களின் வாழ்வியல் புனைவு. நம் இந்திய சமூகத்தில் மிக மிக இரக்கப்படத் தக்கவர்கள், தங்களது பெண்ணிற்கு திருமணம்...

பகிர்வு

 தினம்தோறும் பிச்சையில் வயிறு கழுவும் வாழ்வு இவளுக்கு. அடைமழையோ உடல் நோவோ ... அத்தி பூத்தார்போல் பொங்கித் தின்பதுமுண்டு. வெஞ்சனத்துக்கு குப்பைக் கீரையும், குழம்பு செலவுக்கு முந்தின நாள் வரும்படியும், 'கோடி' வீட்டம்மாவின் இரக்கத்தில் கிடைத்த இரண்டு பிடி நொய்யரிசியும் இருக்கும் தெம்பில் இன்று அடுப்பெரிக்க...

சுவாமியின் வாக்கு

1. மனிதனின் இலட்சியம் இன்பமல்ல... ஞானமடைதல். எந்த சூழலிலும் யாருடைய குணம் எப்போதும் உயர்ந்ததாகவே இருக்கிறதோ அவனே உண்மையில் சிறந்த மனிதன். நம் ஒவ்வொரு எண்ணத்திலும் நமது குணம் படிந்திருக்கிறது. தொடர்ந்த பழக்கங்கள் மட்டுமே குணத்தை மாற்றியமைக்க முடியும். குணத்தை உருவாக்குவதிலும் செப்பனிடுவதிலும் நன்மை தீமைகளுக்கு...

பொக்கிஷமாய் ஒரு சித்திரம்

    வந்ததும், சென்றதும்... 28.6.1916--23.11.1985      எனது தலைஎழுத்தை உருவாக்கியவரின் கையெழுத்து இது. ஒரு சகாப்தமாய் வாழ்ந்தவரின் சித்திரமாய் என் பொக்கிஷ இருப்பு.      தன் பெண்டு, தன் பிள்ளை, தன் சுகமே பிரதானம் என்று பெரும்பாலோர் வாழ்ந்திருக்க, ஊர் உலக நலனுக்கும் உழைத்துக் களைத்த உத்தம வாழ்வை கண்டு வளர்ந்த எங்களுள்ளும் செழித்திருக்கிறது சமூகத்தின் மீதும் சக உயிர்கள் மீதும் நேசமிக்க காருண்யம்!      அப்பா...!...

சாவே உனக்கொரு சாவு வாராதோ ...!

      மருமகளை தனது மூன்றாவது மகளாகவே பாவித்த இவர் எனது மாண்பு மிகு மாமனார்! பதின்ம வயதில் தந்தையைத் தக்க வைத்துக் கொள்ளாமல் யமனுக்கு வாரி வழங்கிய வள்ளல் நான்!! புதுப்பித்துக் கொண்டேன் இவரிடம் என் தந்தையின் மறு உருவை... ஈடில்லா பாசத்தை.... இறை மேல்...

1910-ம் , 2010-ம்

                 ஈடு இணையற்ற மாபெரும் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர்(1861), இறைத் தத்துவத்தின் மேன்மையை ஆராதனை செய்த கவிதாஞ்சலியாம் கீதாஞ்சலியை 1910-இல் வங்க மொழியில் வெளியிட்டு, 1912-ல் அதிலிருந்து 103 தத்துவங்களை ஆங்கில மொழிபெயர்ப்பாக அளித்தார். 1913-ல், ஆசியாவிலேயே முதன் முறையாக இலக்கியத்துக்கான நோபல் பரிசை இந்நூல் இவருக்குப்...

இலகுவானதெல்லாம் இலேசானதல்ல...

இலக்கியக் கூட்டமொன்று... சிறப்புப் பேச்சாளரின் ஓங்கிய குரலில் வெள்ளமெனப் பெருகியது தமிழமுது கட்டுண்டது காற்றும்... விட்டுவர ஆளற்ற தம்பதியருடன் வந்த சிறுபிள்ளை காற்றுக்கு மாற்றாய் ...

தாகூரின் மின்மினிகள் (Fire Flies)

என் வாழ்வைக் கனிய வைத்தமைக்காக நான் நன்றி சொன்னேன் மரத்திற்கு- ஆனால் என் வாழ்வை எப்போதும் ...

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...

குழந்தைகள் உலகம்

விடுமுறையைக் கழிக்கஉறவினருடன்ஊருக்குக் கிளம்பும்சேட்டைக்காரக் குழந்தையிடம்எச்சரிக்கிறேன்...“அங்கு யாரிடமும் சண்டை போடக்கூடாது” தீவிர முகபாவனையுடன் ...

**வாழ்த்துக்கள்**

http://www.bharathikumar.blogspot.com/     நலமும் வளமும் நிலைபெற்று நீடு வாழ்க!!! ...

உடம்புக்குத்தான் வயசு

ஆமாம். எனக்கு வயதாகி விட்டது- அதனாலென்ன...?! எட்டும் தொலைவில் வடுமாங்காயென்றால் ...

குறுங்கவிதைகள்

போகுமிடம் பயணங்களில் பிரம்மிப்பூட்டும்கட்டிடங்களின் கண்காட்சி!ஆங்காங்கு அடக்கமாய்...மயான கொட்டகைகள். ...

முருகனும் முத்தையா பிள்ளையும்

பட்டை பட்டையாயப் பழனி விபூதியைநெற்றியில் பூசி நெஞ்சில் பூசிசெவியில் பூவைச் செறுகிப் பூசைஅறையை விட்டே அசைந்து வருகையில்முத்தையா பிள்ளை ‘முருகா!' என்றார். உடனே அவர்முன் ஓடோடி வந்து“என்ன எசமான் கூப்பிட்டீர்களா?”என்று கேட்டான் ஏவ லாளன்;முத்தையா பிள்ளையின் முகமோ சிவந்தது!“விடியா மூஞ்சிப் பயலே! விடிந்ததும் ...

இது எப்படியிருக்கு...?!!!

      எங்க வீட்டுகிட்ட செல்வ வினாயகர் கோயிலும், பெருமாள் கோயிலும் ஒரே இடத்துல பக்கம் பக்கமாயிருக்கு. தினசரி கோயிலுக்கு வர்றவங்களும், நாள்-கிழமையில வந்து தரிசிக்கிறவங்களும், மழைக்கு ஒதுங்குறவங்களுமா எப்பவும் நடமாட்டம் இருந்து கிட்டே இருக்கும். ...

தொடர்பு எல்லைக்கு வெளியே...

உன் ஊருக்கு அரை மணிக்கொரு பேருந்து... உன் வீட்டில் ஆளுக்கொரு கைபேசி ... ...

கவிதையாவது கழுதையாவது

 கலாசாரப் பொருளாதாரச் சீரழிவுகள் சாமான்யன் வாழ்வை அசாதாரணமாக்கி, சிரமத்துக்குள்ளாக்கி விட்ட காலம் இது. சாதியம், வறுமை, பொருளாதாரப் பாகுபாடு போன்றவை ஆவேசம் கிளப்பியபடி... கைக்கும் வாய்க்கும் எட்டாமல் கழுத்தை நெரிக்கும் வாழ்க்கைச் சுமையில் கவிதையாவது கழுதையாவது... ...

தும்பைப் பூ சட்டை

பனித்துளி தாங்கிய பூக்களைப் போல் காதல் தாங்கிய மனம் பேரழகாகிறது. அதனால்தானோ கவியெழுதப் பழகிய பெரும்பாலோர் தத்தமது அனுபவக் காதலை தொகுப்பாக்கத் தவறுவது இல்லை. அவரவர் கைப்பக்குவத்துக்குப் பிரத்யேக ருசி இருப்பதையும் மறுப்பதற்கில்லை. நமது இன்பங்களின் சாவியாகவும், சில துன்பங்களின் பூட்டாகவும் காதலே காரணமாவது வியப்புக்குரியது....

எல்லோருக்கும் உண்டு நல்ல காலம்

பிரெஞ்ச் அரசின் இலக்கியத்துக்கான ‘ஷெவாலியே' விருதை 1998-ம் ஆண்டு பெற்ற சிறந்த மலையாளப் படைப்பாளி எம்.முகுந்தன். இவரது தேசிய சாகித்ய அகாடமி விருது பெற்ற ‘தெய்வத்திண்டெ விக்ருதிகள்' நாவலின் தமிழாக்கமே இப்புதினம். ...

வெளியில் இல்லை மழை...

கண்ணை அழுத்தும் காலைத் தூக்கம் கிளம்பும் பொழுதை நெருக்கடி ஆக்க சுடுசொல் கிளப்பும் கண்ணில் மழையை... பலநாள் பயின்றும் பந்தயக் கோப்பையை தோற்றவன் கண்களில் கோடை மழை... வென்றவன் கண்களில் மகிழ்வெல்லாம் மழையாய். நெருங்கிய உறவோ இனிய நட்போ மரணம் தழுவிய தகவல் தெரிய மழைபோல்...

‘ட்ரையாம் பக்'....

         எப்போதும் போல் எழுந்ததும் அடுக்களைப் பிரவேசம் எனக்கு. மாமரக் காற்று முகம் வருடியது சாளரம் வழியே... ஊறிக்கிடந்த ‘பத்துப்' பாத்திரங்களை ‘ஒருகை' (இரண்டு கைகளாலும் தான்) பார்த்தேன். தலைக்கு மேல் பலகையில் கவிழ்ந்து கிடந்தன உபயோகம் குறைந்த பித்தளை அண்டா...

பருவம் தப்பிய மழை

தட்டு முட்டுச் சாமானெல்லாம் சொட்டும் மழை தேக்கி நிற்க கொட்டும் விடா மழையால் கூரை நைந்து கீழே விழ ஒட்டுத்துணியும் விடாமல் ஈரம் தேக்கிப் பூஞ்சை பூக்க ஈர விறகால் புகை பெருக்கி உலையரிசி வேகாதிருக்க ஆடு மாடு கோழியெல்லாம் அடைமழையால் விரைத்துக் கிடக்க வயக்காட்டில்...

மழை

வாசலில் வந்த தூறல் என்னை வா வா என்றது... நீட்டிய கையில் பொட்டென ஒரு துளி படியிறங்கிய போது கழுத்தில் கையில்... சிலிர்த்துச் சிரித்தேன் மகிழ்வாய்... தலையுயர்த்தி வாய் திறக்க தாகமற்ற தொண்டையில் துளிகளின் பரவசம் வலுத்த மழையில் நனைந்தன துணிகள் கும்மாளமாய்க் குதித்து ஆடினேன்...

தாய்மை நனைந்த தருணங்கள்

பேருந்து வேகத்தில் தூக்கத்தில் சாமியாடும் தோழனை ஆதரவாய்த் தோளில் சாய்த்துக்கொள்ளும் நண்பனின் பரிவில்... மிதிவண்டி சக்கரத்தில் முந்தானை மாட்டி தடுமாறி விழுந்த பெண்ணுக்கு பாதையோர குடிசைவாசி மாற்றுத் துணி தந்து துணிவூட்டி வீடனுப்பும் பெருந்தன்மையில்... பிதுங்கும் கூட்டத்தில் சிணுங்கும் குழந்தையோடு கால்மாற்றித் தவிக்கும் சபிரயாணிக்கு எழுந்து...

கடவுளும் காருண்யமும்

எரியும் ஊதுபத்திப் புகையில் நெளிகிறது பார்வையற்ற விற்பனையாளனின் தீனக்குரல் சூம்பிய ஒற்றைக் கையில் மாட்டவியலா சூடத் தட்டை கழுத்தில் மாட்டி விற்றுப் பிழைக்கும் சிறுமியின் தன்மானத்தில் ஒளிர்ந்து மினுக்குகிறது தீப ஆராதனை வெளியே பலருக்கு உழைப்பே தெய்வம்... உட்கார்ந்த வாக்கில் உண்டி நிரப்பும் பூசாரிக்குப் பிழைப்பே...

எழுத்துக்காரத் தெரு

வகைப்பாடு ; கவிதைத் தொகுப்பு படைப்பு : தஞ்சாவூர்க் கவிராயர் வெளியீடு : அனன்யா,8/37.B.A.Y.நகர்,புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர். விலை : ரூ.60/- ` கவிதைத் தொகுப்புகள் பெரும்பாலும் கவிஞரின் ஒட்டுமொத்தப் படைப்புகளையும் அச்சிலேற்றியதாயிருக்கும். வாசகப் பரப்பில் கொள்ளத் தக்கதாயும் தள்ளத் தக்கதாயும் கலந்திருக்கும். தொகுப்பின் மொத்தக்...

மகிழ்தலும் மகிழ்வித்தலும்

பண்டிகைகளும் கொண்டாட்டங்களும், விருந்துகளும் கேளிக்கைகளும் நம் சலிப்பூட்டும் தினசரி நடவடிக்கைகளின் மாற்றாக நம்மிடையே அமைந்துள்ளன. மகிழ்தலும் மகிழ்வித்தலுமே கொண்டாட்டங்களின் அடிப்படை. சமீப காலமாக புத்தாண்டு, தீபாவளி, பிறந்தநாள் கொண்டாட்டங்கள், தேர்தலில் வெற்றியடைந்த கட்சிக் கொண்டாட்டங்கள் போல மனம் போனவாறு ஆடம்பர ஆர்பாட்டங்களோடு, அடுத்தவர்களின் அவஸ்தைகளை பொருட்படுத்தாது,...

நீத்தார் நினைவு

கைத்தடி சின்ன மகனுக்கு மூத்த பெண்ணுக்கு மூக்குக் கண்ணாடி காவியேறி நைந்த வேட்டி ரெண்டும் கேட்பாரற்று மேல் துண்டு சுருணையானது அடுக்களையில் போகவர போடும் டெரிலின் சட்டை ரெண்டும் பெரிய மனசோடு சின்ன தாத்தாவுக்கு இவ்வளவும் அடக்கி இத்தனை காலமும் கைத்தடியில் மாட்டிவந்த மஞ்சள் பை...

தானம்

குச்சி வீடும் காரை வீடும் மச்சு வீடும் எதிரொலித்தது நல்ல காலம் பொறக்குது! குறி சொன்ன வாயும் குடுகுடுப்பை ஆட்டிய கையும் அலுத்துப் போன கோடங்கியொருவன் தளர்வாய்ச் சாய்ந்தான் ஊர்ப் பொது மரத்தடியில்... அன்றைய வரும்படி அரை வயிறு உணவும் ஐந்தேகால் ரூபாயும் தான். இல்லத்தரசிகளின்...

எரியூட்டிய இரவு

வீடு முழுக்க சிதறிக் கிடந்த உறவுக் கூட்டம். சொல்லவும் கேட்கவும் தத்தம் செய்திகளோடு. யார் யாரோ வந்து என்னென்னவோ பேச்சு... எனக்கோ கழுவி விட்ட வீட்டின் தரையாய் வெறிச் என மனசு. காதுகளின் வழி புத்தியில் தங்காத குரல்கள் வீட்டின் கட்புலன் மீறிய சூனியத்தை நிரப்பவியலாமல்...

ஜென் குழந்தைகள்

அரங்கை நிறைத்தது அமைதி ஜென் தத்துவம் பற்றிய தெளிவுரை உனக்குள் ஒடுங்கு மனமற்ற மனம் கொள் ஒருகை ஓசை உணர் வெளியேறும் போது புரிந்தாற்போலொரு உவகை வீட்டுள் நுழைந்ததும் வழக்கம் போல குழந்தைகளுக்குள் பூசல் ஒருவருக்கொருவர் சைகையில் சாடினர் அடங்கு! என கிளர்ந்த எரிச்சல் தணிந்தது...

சந்தை முடிந்த மறுநாள்

அழுகிய தக்காளிகள், காய்கறித் தோல்கள், உரித்தெரிந்த தேங்காய் நார்கள், விட்டெறிந்த முற்றல்கள், சொத்தைகள், வியாபாரிகளின் பசிதின்ற பஜ்ஜி, போண்டா மடித்த காகிதக் குப்பைகள் உடைந்து கிடக்கும் பழமடுக்கிய குழித் தட்டுகள் ஏலம் போன வாழைப்பழங்களின் வெற்றுத் தார்கள் கிழங்குகளை போர்த்தி வந்த இலைதழைக் குவியல்கள் சணல்...

பறத்தல்-பறத்தல் நிமித்தம்

எழுந்தவுடன் பெருக்கி ஈரத்துணியால் தரை துடைத்து தெருவடைத்துக் கோலமிட்டு துவக்கி வைத்தாள் அம்மா காலைப் பொழுதை தேய்த்து தேய்த்து துடைத்த தன் காலணிகள் பளபளப்பை தள்ளி நின்று ரசித்திருந்தார் இராணுவத்திலிருந்து மீண்டிருந்த அப்பா. காற்றடித்து எண்ணெய் போட்டு முன்னும் பின்னுமாக மாய்ந்து மாய்ந்து துடைத்து வைத்த...