என் சுவாசக் காற்றிலும்
நான் பருகும் நீரிலும்
உலகை தினந்தினம்
ஒளியூட்டும் பகலவனிலும்
கண்ணுக்கெட்டா தொலைவிலிருந்தும்
காதுக்கெட்டும் கோயில் மணியின்
ஓம்கார ஒலியிலும்
பாதையெங்கும்
மிதிபடும் மண்ணிலும்
அணுத்தொகுப்பாய்
அடிமனசில் அருவுருவாய்
உயிர்த்திருக்கிறாய் அம்மா...
என்னுயிர் உள்ள மட்டும்
உயிர்த்திருப்பாய்!
பிறகும் என் வாரிசுகளுள்!!
***************************
படக் கலவைக்கு நன்றி: S .சிபிக்குமார்
சிபியிடமிருந்து எனக்கு வந்த வாழ்த்துச் செய்தி இது! மின்னஞ்சல் வாழ்த்துக்கு நன்றி மகனே... |