*மிகப் பெரியதாக வாய் திறக்கும் உயிரினம் நீர் யானை தான் என்கிறேன் நான். ஒப்புக் கொள்கிறீர்களா?
இல்லீங்க! தவளை மீன் (Frog Fish) என்றொரு வகை உண்டு. தன் வாயைப் பன்னிரண்டு மடங்கு அளவுக்குப் பெரிதாக்கிக் கொள்ளும். உயிரினங்களில் உலக ரெக்கார்ட் என்று சொல்லலாம்! வாயை மூட அது எடுத்துக்கொள்ளும் நேரமும் ஆச்சர்யமானது. ஒரு வினாடியில் ஆறாயிரத்தில் ஒரு பகுதி! சின்னக் கூட்டமாக மீன்கள் போகும் போது கண் மூடித் திறப்பதற்குள் பல மீன்கள் தவளை மீன் வாய்க்குள் காணாமல் போய், மற்ற மீன்கள் 'எங்கேடா அத்தனை பேரும்?!' என்று திகைக்கும். அதே போல், 'காமெர்சன்' என்று அழைக்கப் படும் இன்னொரு தவளை மீன், தன்னைவிட இருமடங்கு பெரிய நீளமான இரையை விழுங்கக் கூடியது. அதற்கேற்றார் போல் அதன் உடல் எலாஸ்டிக் போல் நீண்டு கொள்ளும்! நாம் சாப்பிட சாப்பிட வயிறும் பெரிதாகிக் கொண்டே போனால் எப்படி இருக்கும்! இதையெல்லாம் விட பெரியதாக வாயைத் திறந்து விழுங்கும் உயிரினம் ஒன்று உண்டு.
அது அரசியல்வாதி!
** டார்ச் லைட்டின் உண்மையான பெயர் சர்ச் லைட் என்பது சரியா ? தவறா ?
எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். இரண்டும் ஒன்றே. 'டார்ச்'சை விட 'சர்ச் லைட்'டுக்கு வீச்சு அதிகம். டார்ச் லைட் வட்டச் செயலாளர் என்றால், சர்ச் லைட் பெரிசு. எம்.எல்.ஏ. மாதிரி! (லைட் ஹவுஸ் தான் சி.எம்.! தொண்டர்- ட்யுப் லைட்!)
நன்றி:
'ஹாய் மதன்' தொகுதி- 2,
கிழக்குப் பதிப்பகம்,
முதல் பதிப்பு: நவ.2006.