நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ளப் படுகின்றன. அவை தோலின் மேற்புறத்துக்கு வந்து படிப்படியாக மாள்கின்றன. ஆனால், இந்த இறந்த எபிடெர்மிஸ் மண்டை செல்கள் பெரிய அளவான கட்டிகளாகப் பரவிக் காணப்படும்.
இவையே பொடுகு எனப்படுகின்றன.
பொடுகு வரக் காரணங்கள்:
புறக்காரணம் மற்றும் பருவநிலைக் காரணம்:
குளிர்காலம்
ஹேர் ஸ்ப்ரேயை மிதமிஞ்சிப் பயன்படுத்துதல்
நிறம் மாற்றுவதற்குரிய டை போன்றவற்றை முறைதவறிப் பயன்படுத்துதல்
முடிச்சுருள் (Hair curl) வருவதற்காக மின் கருவிகள் பயன்படுத்துதல்
உலர்ந்த வெப்பநிலை
தலைமுடியைக் கசக்கிக் கழுவுவதில் காலம் தாழ்த்தல்(அழுக்கு சேர விடுதல்)
ஈரத் தலையை சரியானபடி காய வைக்காமல் முடிந்து வைத்தல்
மன அழுத்தம் மற்றும் கவலைகள்
உடலுள் ஏற்படும் காரணங்கள்:
சுரப்பிகளில் ஏற்படும் சமச்சீரின்மை
சுகாதாரமின்மை
அலர்ஜியினால் ஏற்படும் மிகு உணர்நிலை
ஓய்வின்மை
மிதமிஞ்சிய அளவிலான சர்க்கரை, கொழுப்பு, மாவுப் பொருள் உண்ணல்
சத்துணவுப் பற்றாக்குறை
மரபியல் காரணங்கள்
அதிக வியர்வை
எண்ணெய்ச் சுரப்பிகளின் அதீதச் செயல்பாடு
வியாபாரிகளுக்குக் கொண்டாட்டம்:
இன்றைய கிளாமர் உலகில் ஹெல்த் சென்டர்கள், ஹெல்த் க்ளினிக்குகள், முடி வளர்க்கவும் பராமரிக்கவும் சந்தையில் கிடைக்கும் புதுப்புது எண்ணெய், ஷாம்பு தயாரிப்புகள், அவற்றின் அனாயச விலை, அப்பொருள்களுக்கான பரவலான விளம்பர மாயைகள் எல்லாமே முடி உதிரத் தொடங்கியதும் எதையாவது செய்து பழைய நிலையை மீட்டெடுக்க வேண்டுமென்ற மனோபாவத்தை அடியுரமாகக் கொண்டு தழைக்கிற கண்துடைப்புகள் தான்.
சில எளிய வைத்தியக் குறிப்புகள்:
1. சின்ன வெங்காய சாற்றை பஞ்சில் நனைத்து மயிர்க்கால்களில் படும்படி தடவி ஊற விட்டு தலையை அலசுவது. இது பொடுகைப் போக்குவதுடன் முடி வளர்ச்சிக்கும் துணையாகும்.
2. சிறிதளவு புளித்த தயிரை தலை முழுதும் பரவலாகத் தடவி ஊற விட்டு கழுவலாம்.
3. கொதிக்கும் வெந்நீரில் வேப்பிலை போட்டு தலை தாங்குமளவு சூட்டோடு முடியைக் கழுவலாம்.
4. இதமான வெந்நீரில் சிறிதளவு உப்பு போட்டும் கழுவலாம்.
எலுமிச்சம்பழச் சாறு அல்லது வெள்ளை வினிகரை மண்டையில் அழுந்தத் தேய்த்து ஊறவிட்டு அலசலாம்.
5. பசலைக்கீரையை அரைத்து தலையில் தேய்த்து வைத்துக் குளிக்கலாம். பொடுதலை என்றொரு கீரையும் கிடைத்தால் உபயோகிக்கலாம்.
6. முடி உதிர்வதைத் தடுக்க தினசரி தலைக்கு எண்ணெய் வைத்து கை சளைக்காமல் மசாஜ் செய்யவும். அன்றாடம் 3-5 பாதாம் பருப்பு மற்றும் காலைச் சிற்றுண்டியோடு பேரீச்சம்பழம் 2 உட்கொள்க. கொலஸ்ட்ரால் பிரச்சினை இல்லாதவர்கள் உணவில் தேங்காய் அதிகம் சேர்க்கலாம்.
7. முடி ஈரமாக இருக்கும் போது தலை வாருவதைத் தவிர்க்கவும்.
அரை கப் தேங்காய் எண்ணெய் அல்லது வேப்பெண்ணையில் ஒரு டீஸ்பூன் கற்பூரத்தைப் போட்டு வைத்துக் கொண்டு தினசரி படுக்கப் போகும் முன் சிறிது எடுத்து மசாஜ் செய்து கொள்ளவும்.
8. காய்ச்சி வடிகட்டி குளிர வைத்த தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தடவிக் குளிக்கவும்.
9. விளக்கெண்ணெய் 1 டீஸ்பூன், கடுகு எண்ணெய் ஒரு டீஸ்பூன் மற்றும் தேங்காய் எண்ணெய் ஒரு டீஸ்பூன் கலந்து வாரம் இருமுறை மசாஜ் செய்யவும்.
10. ஒரு பங்கு எலுமிச்சை சாறுடன் இரண்டு பங்கு தேங்காய் எண்ணெய் சேர்த்து குறிப்பிட்ட கால இடைவெளி தவறாது மயிர்க்கால்களில் படுமாறு நன்கு மசாஜ் செய்யவும்.
11. ஒரு டீஸ்பூன் கசகசாவை காய்ச்சாத பசும்பாலில் ஊறவிட்டு அரைத்து தலையில் பூசி சிறிது நேரம் சென்று, முன்னிரவே வேப்பிலைகள் போட்டு வைத்திருந்த நீரை ஊற்றி அலசலாம்.
12. பச்சை இலையுள்ள காய்கறிகள், சாலட்கள், பால் பழங்கள் உணவில் அதிகமாக எடுத்துக் கொள்ளவும். பி விட்டமின்கள் முடி உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க அவசியம். அதிக அளவு புரோட்டீன்கள், பால், மோர், ஈஸ்ட், முளைகட்டிய கோதுமை, சோயா, முழு தானியங்கள், பருப்புகள் உணவில் பரவலாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
ஹோமியோ மருந்துகள்:
(இதற்கெல்லாம் ஹோமியோவில் மருந்திருக்கிறது என்ற புரிதலுக்காகவே கீழ்க்கண்ட பட்டியல். தக்க மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இவற்றை எடுத்துக்கொண்டால் அதிக பலன் கிடைக்கும். அதற்காகவே மருந்துகளின் வீரியத்தைக்(potentcy) குறிப்பிடவில்லை)
ஆர்னிகா(Arnica)-
முடி வேர்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். இதனால் முடி கொட்டுதல் தவிர்க்கப்பட்டு, முடி வளர்ச்சி அதிகரிக்கும். பொடுகுத் தொல்லை அறவே ஒழியும். இயற்கையாகவே மண்டையைக் குளிர்விக்கும் மருந்து.
நேட்.மூர்(Nat.Mur.)-
தொட்டவுடன் முடி உதிர்தல், குறிப்பாக தலையின் முன்புறம்,நெற்றி, மண்டை ஆகியவை பிசுபிசுப்பாகவும், தொடுவுணர்வு கூடுதலாகவும் இருத்தல்.
கார்போ-வெஜ்(Carbo-Veg.)-
கடுமையான நோய்களுக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வு, பாதரசம் பயன்படுத்தியதில் முறைகேடு, மண்டையை இலேசாக அழுத்தினாலும் வலித்தல், பின்னந்தலையில் அதிகமாக முடி கொட்டுதல்.
ப்ளு.ஆசிட்(Flour.Acid)-
ஆங்காங்கே தலையில் சொட்டை விழுதல், புதிதாக முளைக்கும் முடி வறண்டிருத்தல், பொடிந்து போதல், வழுக்கை.
லைகோபோடியம்(Lyco.)-
இளவயது நரை, வயிற்றுக் கோளாறு தொடர்பான நோய்களால் முடி உதிர்தல், மண்டையில் எரிச்சல்.
கால்சியம் கார்ப்.(Calc.Carb.)-
பிரசவத்துக்குப் பின் முடி உதிர்தல், வறண்ட முடி, மண்டையின் மீதுன் வெள்ளை அல்லது மஞ்சள் படர்ந்தது போன்ற நிறமாற்றம், மண்டையில் உணர்ச்சித் திறன் அதிகரித்தல், தலையின் வெளிப்புறம் சில்லிட்ட உணர்வு.
ஸ்டாபிசாக்ரியா(Staph.)
காதைச் சுற்றிலும் முடி உதிர்தல், தலையில் பொடுகு, சிறு அசைவுமின்றி எந்த வலியும் தெரியாது, முடியைத் தொட்டதும் உதிர்தல்.
ஆர்ஸ்.ஆல்ப். (Ars.Alb.)
தொட்டாலே வலிக்கும் முடி. ஏறு நெற்றியில் வழுக்கைத் திட்டு, மண்டை சொரி பிடித்தது போல் கரடுமுரடாகவும் அழுக்காகவும் தென்படல்.
முடி உதிர்தல், இளநரை, பொடுகு எல்லாம் கட்டுப்பட ஒரு எண்ணெய் காய்ச்சலாம் வாங்க:
தேங்காய் எண்ணெய் எடுத்துக்குங்க. சம அளவு கறிவேப்பிலைக் கொழுந்து மருதாணிக் கொழுந்து(100 மிலி எண்ணெய்க்கு ஒவ்வொரு கைப்பிடி தழை) கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளுங்க.
வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெயை சூடுபடுத்தி புகை வரும்போது அரைத்த கரைசலை பக்குவமாக ஊற்றிக் கைவிடாமல் கிளறுங்க.
மளமளப்பு அடங்கியதும் (வறுபட்ட இலைத் தூள் கையிலெடுத்து நிமிட்டினால் மொறுமொறுவென்று இருக்கட்டும்) அடுப்பிலிருந்து இறக்கிவிடலாம். எண்ணெய்க் கலவையில் கைபொறுக்கும் சூடு வந்தபின் அரை டீஸ்பூன் டீத்தூளைச் சேருங்க.
எண்ணெய் சுத்தமாக ஆறியதும் காற்றுப் புகாத மூடி கொண்ட டப்பாவோ பாட்டிலோ எடுத்து அதனடியில் சிறிதளவு வெட்டிவேர், வேம்பாளம்பட்டை(நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும்) போட்டு ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து பின் எண்ணெயை வடிகட்டிக் கொள்ளவும்.
அப்புறமென்ன... தினசரி உங்க அளவுக்கு எடுத்து (ஒரு ஸ்பூனாவது) மயிர்க்கால்களில் படும்படி நன்கு தேய்த்துக் கொள்ளவேண்டியதுதான்!

அனைவருக்கும் பயன்படும்
ReplyDeleteஅருமையான பதிவு
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
எளிய வைத்தியக் குறிப்புகளை வீட்டில் குறித்து வைத்துக் கொண்டார்கள்... நன்றி...
ReplyDeleteபயனுள்ள பகிர்வு.. பொடுதலை தான் என் மாமியார் பரிந்துரை செய்திருக்கிறார்...
ReplyDeleteகுறிப்புகளுக்கும், மருந்துகளுக்கும் நன்றி... கடைசியில் குறிப்பிட்ட எண்ணெயை காய்ச்சி வைக்கிறேன்...
தில்லியில் குளிர் காலத்தில் பலருக்கும் இருக்கும் பிரச்சனை இந்த பொடுகு.
ReplyDeleteஎளிய வைத்தியக் குறிப்புகளுக்கு நன்றி.
பயனுள்ள சிறந்த பகிர்வுக்குப் பாராட்டுக்களும் என் இனிய
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்களும் தோழி .
மிகவும் பயனுள்ள தகவல்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteபொடுகு எவ்விதம் உருவாகிறது?
ReplyDeleteஎனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி. நிலாமகள்
Sharing Options, Feed Burner உங்கள் பதிவில் இணைக்க வேண்டும்.
வாழ்த்துகள்.
அருமையான நல்ல குறிப்பு.
ReplyDeleteநன்றி.
ReplyDeleteவணக்கம்!
புத்தாண்டு வாழ்த்துக்கள்
பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
01.01.2014