'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன் குழந்தையின் தமிழறிவை வளர்க்க என்னைக் கிளறிவிட்டார் ஒரு இளைஞர். அதன் பயனாய் விளைந்தது கடந்த பதிவின் அசை. (நேரம் வாய்க்கும் போது 'அசை'த்துப் பார்க்கலாம் 'அந்த நாள் ஞாபகங்களை'.)
அந்தக் காலத் தமிழ்வழிக் கல்வியில் அனேகமாக இரண்டாம் மூன்றாம் வகுப்புகளில் ஆத்திசூடி, கொன்றை வேந்தன் போன்ற அறநெறி - நீதிபோதனைகள் குழந்தைகள் மனசில் உருவேற்றப் பட்டிருக்கும். அவற்றில் பலவற்றின் அர்த்தத்தை காலப் போக்கில் வாழ்வியல் சூழலில் உணர்ந்திருப்போம்.
நம் நண்பரின் கோரிக்கை என்னவென்றால், நீதி நூல்களையும் பழந்தமிழ் இலக்கியங்களையும் வரும் சந்ததியினருக்கு எடுத்துச் செல்வதில் பெற்றோராகிய நம் பங்களிப்பும் இருக்க வேண்டுமென்பதே. ஞிமிறென இன்புறு, இளைத்தல் இகழ்ச்சி போன்ற புதிய ஆத்திசூடி சுட்டும் கருத்தை இக்காலக் குழந்தைகளுக்கு போதிக்க உதவும்படி எழுதலாமே நாம்
நியாயம் தான். பள்ளியில் மனப்பாடம் செய்ய மட்டுமே கற்பிக்கப் படுகிறது. பொருள் புரிந்து படிக்கச் செய்வது பெற்றோரின் பொறுப்புதான் தாய்மொழியளவில்.
ஞமலி என்றால் நாய் என்பதும் ஞிமிறு என்பது பூச்சியில் ஒரு வகை என்பதும் இக்காலக் குழந்தைகளில் எத்தனை பேருக்கு தெரியும்? வழக்கொழிந்த தமிழ்ச் சொற்களை மறுபடியும் பயன்பாட்டில் கொண்டுவருவது தமிழ் நேயர்களின் பொறுப்பே.
நண்பருக்கான ஞிமிறு பற்றி விக்கிபீடியாவில் தேடியபோது இன்னும் பலதினுசு பூச்சிகளின் பட்டியல் வியப்பில் ஆழ்த்தியது என்னை. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
தேனீயின் கொடுக்கு ( http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%80) |
ஞிமிரென இன்புறு – ENJOY YOUR WORK LIKE BEES
தேனீயை சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி, தலைமைக்கு கட்டுப்படுதல் போன்றவற்றிற்கு உதாரணமாய் கூறுவார்கள்.( இதை வைத்தே பல கதைகள் சொல்லி குழந்தைகளை நெறிப்படுத்தலாம் போலிருக்கே)
வண்டு, தேனீ, ஞிமிறு, சுரும்பு இவை ஒன்றைக் காட்டிலும் ஒன்று பெரியவை
என்று ஒரு குறிப்பு தெரிவிக்கிறது.
Advisor, Adviser இரண்டுமே சரி என்று ஆங்கிலம் சொல்கிறது. இப்படி இரண்டு எழுத்தமைப்புகள் கொண்ட சொற்கள் எல்லா மொழிகளிலும் உள்ளன.ஆகவே, வல்லின இடையினங்கள் இரண்டு வடிவமுமே இச்சொல்லுக்கு உண்டு.
(இதுபோன்ற இன்னொரு சொல் வரள். நாக்கு வரண்டுவிட்டது; தொண்டை வறண்டுவிட்டது இரண்டுமே சரி. ஆனால் வறட்சி ஒப்புக்கொள்ளப்பட்ட ஆட்சி; வரட்சி பரவலாகாத ஒன்று.)
ஞிமிறென இன்புறு - இதனை இன்னும் எளிமையாகவும் செறிவாகவும் கற்பிக்க உங்கள் சிந்தனைகளையும் பின்னூட்டமாக எதிர்நோக்குகிறேன்.
நன்றி:
'மாமியாரே' தொனியில் 'தோழியாரே' என்று என்னை விளிக்கும் ஹரிக்ரிஷ் அப்பாவும் கிருஷ்ணப்ரியாவின்(http://krishnapriyakavithai.blogspot.in/) பாசக்கார தம்பியுமான கண்ணன் http://kannan2771.blogspot.in/
குறிப்பு : ‘http://nchokkan.wordpress.com/2013/02/25/ இந்தச் சுட்டியில் ஞகரம் பற்றிய சுவையான அலசல் இருக்கிறது. பாருங்களேன்...
குறிப்பு : ‘http://nchokkan.wordpress.com/2013/02/25/ இந்தச் சுட்டியில் ஞகரம் பற்றிய சுவையான அலசல் இருக்கிறது. பாருங்களேன்...
//ஞிமிறென இன்புறு - இதனை இன்னும் எளிமையாகவும் செறிவாகவும் கற்பிக்க உங்கள் சிந்தனைகளையும் பின்னூட்டமாக எதிர்நோக்குகிறேன்.//
ReplyDeleteமறந்துபோன இந்தச்சொல்லே ’ஞிமிறு’ கடித்தது போல இப்போது தான் இந்தப்பதிவின் மூலம் கொஞ்சம் ஞாபகம் வருகிறது.
அழகான படங்கள். அற்புதமான தகவல்கள். நல்லதொரு முயற்சி. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
/// ஞமலி என்றால் நாய் என்பதும் ஞிமிறு என்பது பூச்சியில் ஒரு வகை என்பதும் இக்காலக் குழந்தைகளில் எத்தனை பேருக்கு தெரியும்? ///
ReplyDeleteபெற்றோர்களுக்கு... அல்லது முதலில் ஆசிரியருக்கு...!
பெற்றோரின் பொறுப்பு வேறு விதமாகி பல காலங்கள் உருண்டோடி விட்டது... (சிலரைத் தவிர)
நல்லதொரு சிந்தனைப் பகிர்வுக்கு நன்றி... வாழ்த்துக்கள் பல...
\\ ஞமலி என்றால் நாய் என்பதும் ஞிமிறு என்பது பூச்சியில் ஒரு வகை என்பதும் இக்காலக் குழந்தைகளில் எத்தனை பேருக்கு தெரியும்?\\
ReplyDeleteகுழந்தைகளைப் பற்றி சொல்வானேன்? நானே இன்றுதான் அறிந்துகொண்டேன். ஞமலி மட்டும் தெரியும்.
பூச்சிகளில்தான் எத்தனை வகை! அம்மாடி அசந்துபோனேன். தும்பி என்று நாம் இப்போது தட்டான்பூச்சியைச் சொல்கிறோம். பழைய பாடல்களில் தும்பி என்பது வண்டைக் குறிக்கிறது. கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி என்று இறையனார் பாடிய பாடலை அனைவருமே அறிவோமே...
வரட்சியா வறட்சியா என்பதில் குழப்பமில்லை. கருப்பா கறுப்பா என்பதில் இன்னுமே குழப்பம் எனக்கு.
தாய்மொழியை முறையாகப் பிள்ளைகளுக்குப் பயிற்றுவிப்பது பெற்றோர்களின் பொறுப்பு மட்டுமல்ல கடமையும் கூட. நினைவுபடுத்தலுக்கு நன்றி நிலாமகள்.
அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க//
ReplyDeleteஉண்மை.
தன் குழந்தையின் தமிழறிவை வளர்க்க என்னைக் கிளறிவிட்டார் ஒரு இளைஞர்//
இளைஞருக்கு நன்றி.
அருமையான தகவல்கள் நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.
நன்றி.
மிக அருமை!
ReplyDeleteதோழியாரே,
ReplyDeleteஅக்காவிடம் உரையாடிய பிறகு உங்கள் பதிவை இன்றுதான் பார்த்தேன். அருமை. சிலகாலமாக எனது வேலைப்பளுவின் காரணமாக உங்கள் blogகுக்கு வரமுடியவில்லை. உங்களது இந்த பதிவு பல பெற்றோர்களின் சிந்தனையை தூண்டிவிடும் என்பது திண்ணம். எனது சந்தேகத்திற்கு மதிப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி.
என்னை இளைஞராக மாற்றியதற்கும் மிக்க நன்று தோழியாரே. உங்களைப்போல தமிழ் முதிர்ச்சி உடைய ஒரு மாமியார் வாய்த்தால் எனக்கு கசக்குமா என்ன?
கண்ணன், தஞ்சையிலிருந்து.
மிக நல்ல முயற்சி.. நல்ல பதங்களை அறிமுகம் செய்யுங்கள். தெரிஞ்சிக்கிறோம்...
ReplyDeleteஅன்புடையீர்,
ReplyDeleteவணக்கம்.
இன்று நம் தெய்வீகப்பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் தன்னுடைய வெற்றிகரமான 900th POST ஐ, வெளியிட்டுள்ளார்கள்.
தலைப்பு:
”ஸ்வர்ண குண்டல அனுமன்”
இணைப்பு:
http://jaghamani.blogspot.com/2013/05/blog-post_4256.html
தாங்கள் மேற்படி வலைத்தள இணைப்புக்கு அன்புடன் வருகை தந்து, அவர்களை வாழ்த்தி சிறப்பிக்க வேண்டுமாய், அன்புடன் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.
மிக்க நன்றி,
இப்படிக்குத்தங்கள்,
வை. கோபாலகிருஷ்ணன்
gopu1949.blogspot.in
அருமையான பதிவு.
ReplyDeleteநன்றி.
எளிமையான தமிழ்ச் சொற்கள் கூட இப்போது பழக்கத்தில் இல்லை.
ReplyDeleteஞிமிறென இன்புறு என்பதில் வரும் ஞிமிறு பற்றி புதிதாக இன்று அறிந்து கொண்டேன்.”இளைத்தல் இகழ்ச்சி” பற்றியும் சொன்னால் இன்னும் கொஞ்சம் அறிந்து கொள்வேன்.:)
ReplyDeleteஞிமிறு என்பது தேனீ என்று சொன்னவுடன் எனக்கு ஒரு பழைய சினிமாப்பாடல் நினைவுக்கு வந்தது.”தேசுலாவுதே தேன்மலராலே...” இதில் வரும் தேசு என்பதும் தேனியை அல்லது வண்டினைக் குறிக்கிறது என்பது என் அனுமானம்.
பிள்ளைகளுக்கு நாம் பாடங்களைச் சொல்லிக் கொடுக்கின்ற போது அவர்களுக்கு நவீன தொழில் நுட்பங்களையும் இவ்வாறு உள்ள சொற்தொகுதி வருகின்ற பாடல்களை அல்லது பாடல்காட்சிகளைக் காட்டி விளங்கப்படுத்துகின்ற போது அது அவர்களை இன்னும் இலகுவாகவும் விருப்பமாகவும் விடயங்களை விளங்கிக் கொள்ள வழிவகை செய்யும் என்பது என் தாழ்மையான எண்ணம்.
நவீன பாடல்கள் எவ்வளவுக்கு இத்தகைய தகுதியைக் கொண்டிருக்கிறது என்பது கேள்விக்குரியதாகத் தான் இருக்கின்றது.
புலத்தில் பாடவிதானங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கற்பிப்பதாகவே இருக்கிறது.புலத்தில் தமிழ் கற்கின்ற பிள்ளைகளுக்கும் அவ்வாறு தான் பாடவிதானங்கள் வடிவமைக்கப்படுகின்றன.
அண்மையில் 9ம்10ம் வகுப்பில் தமிழ் கற்கின்ற மானவர்களுக்கு (13,14 வயது)இருந்த பாடப்பகுதி துன்பம் நேர்கையில் என்ற பாரதி தாசனின் பாடல். இப்பாடல் பகுதிக்கான தயார் படுத்தலின் போது 15 நிமிடத்தை உரையாடலுக்கு ஒதுக்கிக் கொண்டேன். அது உங்களுக்கு துன்பம் அல்லது மனநெருக்கடி வருகின்ற போது என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு அவர்கள் விடை சொல்ல வேண்டி இருந்தது. அது ஒரு சுதந்திரமான கலந்துரையாடல்.அது அவர்களுக்கு விருப்பமான உரையாடலாகவும் பல விடயங்களைத் தொட்டுச் செல்வதாகவும் அவர்களின் உலகத்தை நாம் அறிந்து கொள்ள உதவுவதாகவும் இருப்பது அதன் மூலமான மேலதிகமான பயன்பாடு.(நாம் நினைத்திராத பல உண்மைகள் கூட வந்தன.)
பிறகு இந்தப்புலவருக்கு எது துன்பத்தை நீக்கும் மார்க்கமாக இருந்திருக்கிறது என்று பார்ப்போம் என்று கூறி பாடல்பகுதி படித்து பொருள் விளக்கம் கண்டார்கள். அது முடிய பலவிதமான அபிப்பிராயங்களை அவர்கள் ஆர்வத்தோடு வெளியிட்டார்கள். தாங்கள் படிக்கின்ற இசை நாட்டியம் பற்றியதாக எல்லாம் அது விரிந்தது.
அதன் பின் சினிமாவில் இடம் பெற்ற இதே பழைய பாடலை இணைய வழி அவர்களுக்கு பாடல்காட்சியோடு போட்டுக்காட்டி பாடலைக் கேட்டார்கள். அதில் ஒரு மானவி தமிழிசை படிக்கிறாள். இப்பாடலை இசையோடு அவர் அடுத்த வார வகுப்பில் வகுப்பறையில் எல்லோருக்கும் பாடிக்காட்ட வேண்டும் என்பது எல்லோரும் வைத்த விண்ணப்பமாக இருக்க அவள் இணங்கினாள்.
பின்னர் கொடுக்கப்பட்ட வினாக்களுக்கு எல்லோரும் சிறப்பாக விடையளித்தார்கள். இங்குள்ள பாடத்திட்டங்கள் இவ்வாறுதான் வடிவமைக்கப்படுகின்றன.
இது எவ்வளவு தூரத்துக்கு தாய் தேசங்களுக்கு ஏற்புடயதாக இருக்கும் என்ரு தெரியவில்லை. ஆனாலும் நன்றி நிலா.நல்லதொரு பகிர்வுக்கு. பலரும் நல்லாயிருக்கிறது என்பதோடு மட்டும் நின்று விடாமல் ஐடியாக்களையும் சொன்னால் நமக்கும் பயனுடயதாக இருக்கும்.
மணிமேகலாவின் முயற்சிக்குப் பாராட்டுக்கள். எனக்கென்னவோ இது தமிழ்நாட்டில் நடந்திருக்காது என்று (வருத்தத்துடன்) எண்ண வைக்கிறது.
ReplyDeleteநாய் என்பதன் எளிமை ஞமலியில் இல்லை. நாய் என்பது மிக எளிமையான எதுகையாக அமைவதால் நாயின் இலக்கியப் பிரபலம் ஞமலிக்கில்லை.
ReplyDeleteஞமலி, ஞிமிறு போன்ற சொற்கள் பொதுச்சொற்கள் என்பதும் காரணமாகத் தோன்றுகிறது. ஞமலி என்றால் மயில் என்றும் பொருள். கொஞ்சம் யோசித்தால் ஞமலி நாயை விட மயிலுக்கு அருகாமையில் இருப்பது போல் தோன்றுகிறது.
'ஞ' சிரமமான தமிழெழுத்துக்களில் இரண்டாவது. ஞாயிறு என்பதே மிகவும் கடினமான சொல்லாகப் பட்டது (ஆறாம் வகுப்பில் தான் முதல் முதலாகத் தமிழ் கற்றேன் - ஒன்றாம் வகுப்பில் கற்றாலும் அப்படித்தான் இருந்திருக்கும்). ஞாயிறு என்ற சொல் இல்லையெனில் (விடுமுறை நாளைக் குறிப்பது - சூரியனைச் சொல்லவில்லை) தமிழில் ஞகரம் என்றைக்கோ ஒழிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.
இதையெல்லாம் சொல்லிக் கொடுக்கச் சொன்னவர் உங்க நண்பர் தானே?
ஞாயிறு என்றால் மனதில் என்ன தோன்றுகிறது என்று தமிழ்நாட்டுப் பதின்மர்களைக் கேட்டுப்பாருங்கள். பத்தில் எட்டு பேர் sunday என்பார்கள்.
ReplyDelete