|
வந்ததும், சென்றதும்...
28.6.1916--23.11.1985 |
எனது தலைஎழுத்தை உருவாக்கியவரின் கையெழுத்து இது. ஒரு சகாப்தமாய் வாழ்ந்தவரின் சித்திரமாய் என் பொக்கிஷ இருப்பு.
தன் பெண்டு, தன் பிள்ளை, தன் சுகமே பிரதானம் என்று பெரும்பாலோர் வாழ்ந்திருக்க, ஊர் உலக நலனுக்கும் உழைத்துக்
களைத்த உத்தம வாழ்வை கண்டு வளர்ந்த எங்களுள்ளும் செழித்திருக்கிறது சமூகத்தின் மீதும் சக உயிர்கள் மீதும் நேசமிக்க காருண்யம்!
அப்பா...! எங்களுள் நீங்கள் விதைத்துச் சென்ற நற்சிந்தனைகளும், நல்லொழுக்கமும் கிளைத்துப் பரவி எம் சந்ததிகளுக்கும் நிழலாய்... உங்கள் ஜீவ அணுக்கள் உட்பொதிந்து வளர்ந்து பிரகாசிக்கும் எங்கள் வாரிசுகளை ஆசீர்வதியுங்கள்!!
மருமகளை தனது மூன்றாவது மகளாகவே பாவித்த இவர் எனது மாண்பு மிகு மாமனார்! பதின்ம வயதில் தந்தையைத் தக்க வைத்துக் கொள்ளாமல் யமனுக்கு வாரி வழங்கிய வள்ளல் நான்!! புதுப்பித்துக் கொண்டேன் இவரிடம் என் தந்தையின் மறு உருவை... ஈடில்லா பாசத்தை.... இறை மேல் எனக்கிருந்த புகார் மறைந்தது இவரால்.
உழைப்பும் நேர்மையும் இவரது இரு கண்கள். சிக்கனமும் சேமிப்பும் இவருக்குக் கைவந்த கலை. பேச்சில் கோபமிருக்கும் சமயங்களில். தன் பேரன்பின் பெருவெளியால் அனைத்தையும் சமன் செய்திடும் சூத்திரம் கற்றவர்.இவரது பெருஞ்சினத்தின் ஆர்பாட்டங்களைப் பிறகு நினைத்து நினைத்துப் பேசிச் சிரிப்போம் நாங்கள். தானும் சேர்ந்து கொள்வார் சிரிப்பில். பேரப் பிள்ளைகளிடம் இவரது குழைவும் நெகிழ்வும் உறவுப் பிரசித்தம்.
எங்கள் குழந்தைகளுக்கு தாத்தா பாசத்தைத் திகட்டத் திகட்ட ஊட்டியவர். அவர்களின் சந்தோஷத்துக்காக எதையும் செய்யக்கூடிய அலாதி அன்புக்காரர். அவர்களின் மகிழ்வை அள்ளியள்ளிப் பருகிய அந்தக் கண்கள் மட்டும் இன்னும் உயிர்த்திருக்கிறது எங்கோ...என்பது தான் ஆறுதலளிக்குமொரு விஷயம் எங்களுக்கு.
கழியும் தினங்களில் சில தினங்கள் மறக்கவியலா வல்லமை பொருந்தியிருக்கும் நம் நினைவில்.
இந்த நாள், எங்களின் துரதிருஷ்டத்தைப் பறை சாற்றும் நாள்.
ஈடு இணையற்ற மாபெரும் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர்(1861), இறைத் தத்துவத்தின் மேன்மையை ஆராதனை செய்த கவிதாஞ்சலியாம் கீதாஞ்சலியை 1910-இல் வங்க மொழியில் வெளியிட்டு, 1912-ல் அதிலிருந்து 103 தத்துவங்களை ஆங்கில மொழிபெயர்ப்பாக அளித்தார். 1913-ல், ஆசியாவிலேயே முதன் முறையாக இலக்கியத்துக்கான நோபல் பரிசை இந்நூல் இவருக்குப் பெற்றுத் தந்தது.
இலக்கியக் கூட்டமொன்று...
சிறப்புப் பேச்சாளரின்
ஓங்கிய குரலில்
வெள்ளமெனப் பெருகியது தமிழமுது
கட்டுண்டது காற்றும்...
விட்டுவர ஆளற்ற
தம்பதியருடன் வந்த சிறுபிள்ளை
காற்றுக்கு மாற்றாய்
என் வாழ்வைக் கனிய வைத்தமைக்காக
நான் நன்றி சொன்னேன் மரத்திற்கு-
ஆனால்
என் வாழ்வை எப்போதும்
அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்