தாகூரின் மின்மினிகள் (Fire Flies)

என் வாழ்வைக் கனிய வைத்தமைக்காக
நான் நன்றி சொன்னேன் மரத்திற்கு-
ஆனால்
என் வாழ்வை எப்போதும்
 பசுமையாக வைத்திருந்த புற்களை
நினைவுபடுத்த மறந்து போனேன்.
-----------------------------------------

கிளைகள் ஆடும் நடனத்தில்
புயலின் விடுதலையும்,
தண்டின் வலிமையும்
கைகோர்த்துக் கொண்டிருக்கின்றன.
----------------------------------------

குன்றின் அடியில்
ஏரி தாழ்ந்து கிடக்கிறது
நெகிழாதவன் காலடியில்
கண்ணீருடன் மன்றாடுகிறது அன்பு.
-----------------------------------------

காற்று, புயலால்
தீச்சுடரைச் சிறைபிடிக்க
கடுமையாக வீசுகிறது
அதனால்
தீச்சுடரை
ஊதியணைக்க மட்டுமே முடிகிறது.
----------------------------------------

சுற்றித் திரியும் ஒளி
தன் உள்ளத்திற்குத் திரும்புமென
அமைதியாகக் காத்திருக்கும்
திரையிடப்பட்ட மணப்பெண்ணே இருள்.
----------------------------------------

என்னைப் பார்த்து
நான் சிரித்திடும்போது
அகச்சுமை குறைகிறது.
----------------------------------------

நன்மை செய்பவன்
கோயில் வாயில் வரை வருகிறான்
அன்பைப் பொழிபவன்
கடவுளின் இடத்தை அடைகிறான்
----------------------------------------

சோம்பல் புழுதியில் கிடக்கும்
இறகுகள்
தங்கள் வானத்தை மறந்து கிடக்கின்றன.
--------------------------------------

செருக்கு தன் சினத்தைக்
கற்களில் பதிக்கிறது
அன்பு
தன்னைப் பூக்களுக்கு ஒப்படைக்கிறது.
--------------------------------------

தாமரையைக் காதலிக்க
வண்ணத்துப் பூச்சிக்கு
நேரமுண்டு.
தேனீக்கள் ஓய்வின்றி
தேனைச் சேகரிக்கின்றன.
-------------------------------------

முகில்களிடையே இருக்கும் வானவில்
சிறப்பெனலாம். ஆனால்
புதர்களிடையேயிருக்கும்
சின்ன வண்ணத்துப் பூச்சி
அதைவிடச் சிறப்பானது.
-------------------------------------

பெயர் தெரியாத ஒளிக்காகப்
புல்லின் கூர்மையான ஓரங்களில்
வாழ்க்கை
தன் மென்மையான வாழ்த்துப் பாடலை
மேலனுப்புகிறது.
-------------------------------------

உண்மையான இறுதி
இலக்கை அடைவதிலில்லை
ஆனால், முழுமையடைவதில் உள்ளது
அது எல்லையற்றது.
-------------------------------------

‘ஒன்றுமில்லாமல் திடீரென மேலெழும்பும் பகட்டு' என
வானவில்லைப் பார்த்துச் சிரித்தது முகில்
‘நான் கதிரைப் போல் தவிர்க்க முடியாத உண்மை' என
அமைதியாக விடையளித்தது வானவில்.
----------------------------------------------------

முட்கள் அதிகமென்பதற்காக
ஒற்றை மலர்
பொறாமைப் படத் தேவையில்லை
----------------------------------------------------

மின்மினிகள் (Fire Flies)

மூலம்        - இரவீந்திரநாத் தாகூர்
தமிழில்      - புதுவை யுகபாரதி
வெளியீடு - நண்பர்கள் தோட்டம்,
                       46, மாரியம்மன் கோயில் வீதி,
                       ஜீவானந்தபுரம், புதுச்சேரி- 605 008
                       கைபேசி- 9994455959.
விலை         - ரூ.90/-
10 கருத்துரைகள்
  1. வணக்கம் நிலாமகள். தாகூரின் மொழிப்பெயர்ப்பு ஆக்கமுடைய செயல். புதுவை யுகபாரதிக்கு என் பாராட்டுக்கள். உங்களின் இந்த முயற்ச்சிக்கும் பாராட்டுக்கள். தாகூரின் ஆழமான கவிதையில் நாள் முழுக்க மனம் இலயித்த நாட்கள் அருமை...ம்ம்ம்..வந்துட்டுப் போங்க..

    ReplyDelete
  2. நல்லதோர் நூல் அறிமுகம். நன்றி சகோ.

    ReplyDelete
  3. அருமையான நூல் அறிமுகத்துக்காக பாராட்டுகிறேன் தோழி.

    ReplyDelete
  4. ஆஹா..அருமை !!


    ஆர்.அர்.ஆர்.
    http://keerthananjali.blogspot.com/

    ReplyDelete
  5. சிறந்த தெரிவுகள்.மிக அழகான தொகுப்பு.மென்மையான உண்மை!!

    நன்றி.யுகபாரதிக்கும் உங்களுக்கும்.

    ReplyDelete
  6. ஜீவனுள்ள மொழிபெயர்ப்பு..

    ReplyDelete
  7. தாகூரின் கூரிய‌ பார்வையில்,
    தோன்றிய‌ க‌விதை
    யுவ‌பார‌தியின் வேர்வையில்,
    தேன்த‌மிழாய் மாறி
    நிலாம‌க‌ளின் தேர்வில் ப‌திவாகி,
    ப‌ர‌வ‌ச‌மூட்டுகிற‌து.

    ReplyDelete
  8. தமிழ்க்காதலன்....
    வெங்கட் நாகராஜ்...
    கோவை 2 டெல்லி ...
    ஆர் . ராமமூர்த்தி...
    மணிமேகலா ...
    ரிஷபன்...
    அனைவரது ஊக்குவிப்பும் என்னை மகிழச் செய்கிறது... மிக்க நன்றி!!!

    வாசன் ஐயா...
    மூவரையும் கோர்வையாய் சிலாகித்ததில் தெரிகிறது தங்கள் சீர்மை!

    ReplyDelete
  9. தாகூரின் மொழி எப்பொழுதுமே ரொமாண்டிக்கானதுதான்.இந்தக் கவிதைகளின் மொழிபெயர்ப்பும் மூலத்தின் ஜீவனோடு இருப்பதும் உங்கள் பார்வையில் அது பட்டதும் எங்களின் அதிர்ஷ்ட்டம். நன்றி நிலாமகள்-யுகபாரதி-தாகூர்-இதே வரிசையில்.

    ReplyDelete
  10. எவ்வளவு அருமை. தேர்வுக்கு,பதிவுக்கு நன்றி. தாகூரை எடுக்கப் போகிறேன்.

    ReplyDelete