கொடைக்கானலின் லேக்குக்கும் பார்க்குக்கும் இடையில் வரிசை வரிசையான கடைகள் மட்டுமின்றி மசாலா சுண்டல், மாங்காய் பத்தை, சோளக் கதிர், பஞ்சு மிட்டாய், ஐஸ் க்ரீம் என தள்ளுவண்டிகள் நிறுத்தப்பட்டு கனஜோராய் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. மலர்க் கண்காட்சி மற்றும் அக்னி நட்சத்திரம் காரணமாய் மக்கள் கூட்டம் வெகு அதிகம்! அந்தி சாயும் நேரம். மதியம் அடித்த மிதமான வெயில் சரிந்து குளிர் தழுவி வீசியது மென்காற்று.
“அம்மாம்மா... இங்க பாரேன்... இந்த சின்னப் பையன் பஞ்சுமிட்டாய் செய்யும் லாவகத்தை...!” சிபி என்னைச் சுரண்டினான். “இப்பதான் வாங்கி சாப்பிட்டோம்” உப தகவல் வேறு! அரை மணி நேரமாய் என் கணவரும் நாத்தனார் மகனும் சிபியும் போட்டிங் போய்விட்டு ஷாப்பிங் சென்றிருந்த எங்களுக்காகக் காத்திருந்தனர் அங்கு. என் கணவரும் மகளும் பர்ச்சேஸில் விடுபட்ட ஸ்வெட்டர் வாங்கச் சென்றனர். மரத்தடியிலிருந்த சிமெண்ட் கட்டையில் அமர்ந்திருந்த நாங்கள் அருகிலிருந்த தள்ளுவண்டியில் ஒரு கல் மேல் ஏறி நின்று குனிந்தவாகில் மும்முரமாயிருந்த அப்பையனைப் பார்த்தோம்.