1. கடவுள் இருக்கிறாரென்றால், எங்கு, எப்படி இருக்கிறார்? என்ன செய்கிறார்?
2. அவர்தான் நம்மைப் படைத்தாரா? நிற வேறுபாடு, தோற்ற வேறுபாடு, பொருளாதார வேறுபாடுகளுடன் படைத்தது ஏன்?
3. அவருக்கு மாபெரும் சக்தி உண்டென்றால் இவ்வேறுபாடுகளை சரிசெய்ய முடியாதா?
4.அர்ச்சனை, அபிசேகம், ஹோமம், மணியடித்தல், மந்திரஜபம், ... இப்படியான வழிபாடுகள் துவங்கிய காரணம்?
5. விரதம், தீ மிதித்தல், அலகு குத்துதல், முள் செருப்பு அணிதல், அங்கப் பிரதட்சிணம், அடிப்பிரதட்சிணம், மண் சோறு சாப்பிடுதல், கையில் சூடம் ஏற்றுதல் போன்றவற்றுள் சில நம் உடல்நலத்துக்கானது என்றால் இவற்றை கடவுள் பெயர் சொல்லி செய்வதுதான் உண்மையான பக்தியா?
6. இவ்வளவு செய்தும் வேண்டியது கிடைக்காமல் போவது ஏன்?
7. கடவுள் உண்டென்பதற்கும் இல்லையென்பதற்கும் ஆதாரம்?
8. மோட்சம் அடைய வேண்டுமென்பது கட்டாயமா? அடையாவிட்டால் என்ன ஆகும்?
9. மோட்சம், ஞானம் அடைய தங்கள் வாழ்நாளைச் செலவழித்த பலர் அவற்றை அடைந்து விட்டனரா?
10. பாவம், புண்ணியம்; சொர்க்கம், நரகம் இதெல்லாம் உண்டா?
11. நாம் இறந்தவுடன் நம் உயிர் எங்கு செல்லும்? அடுத்த இரண்டு மணி நேரத்தில் பிறக்கப் போகும் உடலிடம் போய்ச் சேரும் என்பது உண்மையா?
12. தப்பு செய்தால் பரிகாரம் செய்ய வேண்டுமா?
13. ஆத்மா சாந்தியடையாமல் செல்வது என்றால் என்ன? ஆவிகள் உண்டா?
14. எமன் என்றொருவன் உண்டா?
15. நம் வீடுகளில் தேவதைகள் ஒளிந்து கொண்டு ‘ததாஸ்து' என்று கூறுவது உண்மையா?
16. ஜன்மங்கள் உண்டா?
17. கருநாக்கு உள்ளவர்கள் என்ன சொன்னாலும் பலிக்குமா?
18. தீய சக்திகள், பேய் போன்றவை உண்டா?
19. அவற்றை எதிர்த்து நாம் முடிகயிறு அணிய வேண்டுமா?
20. ஜீஸஸ் தலைமுறை தொடர்வதை ஒப்புக்கொள்ளாத சமுதாயம், பிள்ளையாருக்கு அம்மா, அப்பா, தம்பி என உறவு உள்ளதை மறுப்பதில்லையே?
21. சாமி வருவது, சாமி ஆடுவது உண்மையா?
22. கல்லிலும் இருக்கும், கனியிலுமிருக்கும், நீரிலுமிருக்கும், பூவிலுமிருக்கும், நம்முள்ளிருக்கும் கடவுள் மொத்தத்தில் ஒன்றா? பலவா?
23. கடவுள் நல்லவர்களை மட்டும் அதிகம் சோதிப்பது ஏன்?
(ஒரு சிற்றிதழாளர் தன் நண்பரிடம் இதழில் புதிதாக துவங்க இருக்கும் கேள்வி-பதில் பகுதிக்கு அரசியல், அறிவியல் ஆன்மீகம் எதுவாயினும் கேள்விகள் எழுதித் தரும்படி கேட்க, நண்பர், தன் மகளிடம் சொன்னார். ஆம். உங்க யூகம் போல் அச்சிற்றிதழில் கேள்வி-பதில் பகுதி நின்று விட்டது.)