பேராசிரியர் த. பழமலய் சொல்கிறார்... “மனித வரலாற்றில் மகாகவி, சாதனை என்றெல்லாம் ஒன்றும் இல்லை. சூழல், தொடர்ந்த பயிற்சி இவற்றின் தொடர்ச்சி தான் படைப்பாளி, படிப்பாளி எல்லாம்.
வாய் காய்ந்தவர்கள், தலைகாய்ந்தவர்கள் என்று ஏளனத்துக்கு உள்ளானாலும் மனம் காயாத பொட்டங்காட்டு மனிதர்களின் காய்ந்த கதைகள், காயாத கதைகளை எழுதியும் சொல்லியும் இவர்களுக்கிடையில் ஈரம் வளர்பவன் கண்மணி குணசேகரன். என்றுமுள்ள தெந்தமிழ் தன் மேனியில் ஆசையோடு குத்திக் கொள்ளும் பச்சையில் இவனுமொரு புள்ளி.”(கண்மணி குணசேகரனின் ‘தலைமுறைக் கோபம்' கவிதை நூலின் அணிந்துரையில்...)
புதுமைப் பித்தனும், ஜெய காந்தனும், இராமலிங்க அடிகளும், ராகவேந்திரரும் பிறந்த தென்னார்க்காடு மாவட்டத்தில் விருத்தாசலம் வட்டத்தின் மணிக்கொல்லை எனும் செம்மண் பூமி இவரைப் பெற்ற பேறு பெற்றது.