15 கருத்துரைகள்
  1. //திருச்சியிலிருந்து திக்கெட்டும் முழங்கும் ஓர் உரத்த ஒலியாக கவிஞர் தனலட்சுமி பாஸ்கரனின் இரண்டாம் கவிதைத் தொகுப்பு "பறையொலி" நூல் வெளியீடு சேலத்தில் நிகழவிருக்கிறது.//

    எங்கள் ஊராம் திருச்சியைச் சேர்ந்தவரும், என் நட்பு வட்டத்தில் இன்றும் உள்ளவருமான கவிதாயினி திருமதி தனலக்ஷ்மி பாஸ்கரன் அவர்களுக்கு என் அன்பான பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிவிட்டு தகவல் கொடுத்துள்ள தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    [அவர்கள் வெளியிட்ட முதல் கவிதைத்தொகுப்பு நூல் என் கையில் இப்போது இருக்கிறது.]

    ReplyDelete
  2. வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள். அவரது கவிதைகள் இரண்டைப் பதிவில் போடுங்களேன்.. நாங்களும் அனுபவிக்கிறோம்?

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் இன்னும் பல நூல்களை எழுதவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. எங்கள் வாழ்த்துகளும் :)

    ReplyDelete
  5. நல்லதொரு நூலறிமுகமாக பறையொலியை எமக்கு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி நிலாமகள். கவிஞருக்கு மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும். அப்பாதுரை அவர்களின் வேண்டுகோள்படி அவரது கவிதைகள் சிலவற்றைப் பகிர்வதன்மூலம் அறியாத என்போன்றோர்க்கு அவ்வற்புதக் கவிஞரை அடையாளங்காட்டுங்களேன்.

    ReplyDelete
  6. இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. //அப்பாதுரை 24 May 2013 02:51
    அவரது கவிதைகள் இரண்டைப் பதிவில் போடுங்களேன்.. நாங்களும் அனுபவிக்கிறோம்?//

    அவர்கள் வெளியிட்ட முதல் கவிதைத்தொகுப்பு நூல்:

    “அம்மா ... உன் உலகம்”.

    அதிலிருந்து நான் மிகவும் ரஸித்த 4-5 படைப்புகள் இதோ தங்களின் பார்வைக்காக:

    1] அம்மா உன் உலகம்.
    ====================

    அபூர்வமாய் அம்மா முகத்தில் சந்தோஷப் பிரவாகம் ...!

    பால்ய தோழிகள் புடைசூழ்ந்திருக்க நாசூக்காய் அகல்கிறேன் நான்.

    சிரிப்பு, அழுகை, மெளனம் அடையாளம் காட்டின

    இதுவரை நாங்கள் அறிந்திராத அம்மாவின் உலகத்தை.....

    2] உறவு பேதம்
    ===============

    என் புடவைகட்டி அழகு பார்த்துக்கொள்ளும் செல்ல மகளிடம் எப்படிச்சொல்வேன்?

    பொழுதுகளில் கண் மறைக்கும் போதையுடன் வருபவனுக்கு உறவுபேதம் விளங்காது என்ற உண்மையை, சூசகமாய்....

    3] கனவுச் சுமை
    ===============

    புத்தகப்பையுடன் சுமக்கிறாள் கனவுகளையும்.

    பள்ளிவந்ததும் பையை வாங்கிக்கொண்டு
    ‘டாடா’ சொல்கிறான் எசமான் பிள்ளை

    4] ஈன்றவலி
    =============

    இட்டவலி தீரும்முன் முட்டைகளைச் சேகரிக்கும் மொத்த வியாபாரி

    பதறும் கோழிகளைப் பெருமூச்சுடன் பார்க்கும் வாடகைத்தாய்....

    5] கிழிசல்
    =========

    தாறுமாறாய் நீர்கிழித்து நீந்தும் மீன்கள் ....

    கால்களால் கிழிசல்கள் தைத்தபடி மிதக்கும் வாத்துக்கள்.

    ====================

    வெளியீடு [2010] By உலா பதிப்பகம், 30/23 ஜெ.எம்.வளாகம், சின்னக்கடை வீதி, திருச்சி 620 002 e-mail: lapathippagam@gmail.com

    ReplyDelete
  8. கவிதாயினி திருமதி தனலக்ஷ்மி பாஸ்கரன் அவர்களுக்கு என் வாழ்த்துகள். நிலாவின் புத்தக வெளியீடு எப்போது? தெருதெருவாய் கூவி விற்க மாட்டேனா?

    ReplyDelete
  9. அடடா, இரட்டித்தது எதிர்பாரா சந்தோஷம்.
    பறையொலி கேட்கட்டும் உலகத் தமிழன் செவிப்பறையெங்கும்.

    நன்றி நிலா.

    ReplyDelete
  10. எனக்கு தனலட்சுமி மேடம், என் நண்பர்களுக்கு தனலட்சுமி அம்மா, ஆர்ப்பாட்டமில்லாத, நேர்மையான எழுத்துக்கு சொந்தக்காரர், இவரின் பறையொலி அதிரட்டும் எட்டுத்திக்குக்குமான ஒலியாக, நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. எனக்கு தனலட்சுமி மேடம், என் நண்பர்களுக்கு தனலட்சுமி அம்மா, ஆர்ப்பாட்டமில்லாத, நேர்மையான எழுத்துக்கு சொந்தக்காரர், இவரின் பறையொலி அதிரட்டும் எட்டுத்திக்குக்குமான ஒலியாக, நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  13. அற்புதமான கவிதைகள். நன்றி வைகோ சார்.

    ReplyDelete
  14. //அப்பாதுரை
    1 June 2013 07:52

    அற்புதமான கவிதைகள். நன்றி வைகோ சார்.//

    மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

    ReplyDelete
  15. புத்தகங்கள் புதுய வாசல்களை மட்டுமல்லபுதிய உலைகையும் அறிமுகம் செய்து வைக்கிறது.

    ReplyDelete