உயிரின் உயிரே...






என் சுவாசக் காற்றிலும்

நான் பருகும் நீரிலும்

உலகை தினந்தினம்
ஒளியூட்டும் பகலவனிலும்

கண்ணுக்கெட்டா தொலைவிலிருந்தும்
காதுக்கெட்டும் கோயில் மணியின்
ஓம்கார ஒலியிலும்

பாதையெங்கும்
மிதிபடும் மண்ணிலும்

அணுத்தொகுப்பாய்

அடிமனசில் அருவுருவாய்

உயிர்த்திருக்கிறாய் அம்மா...

என்னுயிர் உள்ள மட்டும்
உயிர்த்திருப்பாய்!

பிறகும் என் வாரிசுகளுள்!!
***************************

படக் கலவைக்கு நன்றி:    S .சிபிக்குமார்


சிபியிடமிருந்து எனக்கு வந்த வாழ்த்துச் செய்தி இது!
மின்னஞ்சல் வாழ்த்துக்கு நன்றி மகனே...
 
7 கருத்துரைகள்
  1. சிறப்பு...

    அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அன்னையர் தின இனிய நல்வாழ்த்துக்கள்... ஆக்கம் அருமை.

    ReplyDelete
  3. அன்னையின் நினைவுகளால் நிறைந்திருக்கும் நெஞ்சத்திலிருந்து நெகிழ்த்தும் வரிகளின் வெளிப்பாடு. அருமை நிலாமகள். அன்னையர்தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அன்னையர் தின நல்வாழ்த்துகள்.

    சிறப்புக் கவிதை மிகச் சிறப்பாக இருக்கின்றது.... படமும் தான்!

    ReplyDelete
  5. அன்னை ஓர் ஆலயமே...... அன்னையைப்பைற்றிய எனது கவிதையை ''அன்னை'' என்ற தலைப்பில் எனது கவிதையை முடிந்தால் படியுங்கள்.
    Killergee
    www.killergee.blogspot.com

    ReplyDelete
  6. அன்னையர்தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
    படக்கலவை சொல் பிடித்திருக்கிறது, பயன் படுத்திகொள்கிறேனே?

    ReplyDelete