குறுங்கவிதைகள்

போகுமிடம்

பயணங்களில் பிரம்மிப்பூட்டும்
கட்டிடங்களின் கண்காட்சி!
ஆங்காங்கு அடக்கமாய்...
மயான கொட்டகைகள்.




தாயிழந்தவள்

தூங்கிக் கிடக்கிறேன்                   
கலைந்தெழ மனமின்றி...
கனவில்... அம்மா!



வாழ்க்கை

உலகச் சாலையில்
உயிர்ச் சக்கரத்துடன் ஓடும்
அச்சாணியற்ற வண்டி.

நிலையாமை   

காற்றில் பூவாசம்
நாசியில் மோதிட
கடந்த ஊர்தியில் சவம்.


பேரண்டத்தின் சிற்றணு நாம்...

பெருமலையின் சிறு உருவாய்  
அலைகடலின்
கரைநிரப்பிக் கிடக்குமிந்த
மணற்றுகள்கள்
தம்மை
தகர்த்தவர்க்கும்
சிதைத்தவர்க்கும்
மிதித்தவர்க்கும்
உறுதுணையாய்
இறுதிவரை.
8 கருத்துரைகள்
  1. /மயான கொட்டகைகள்./
    :) பல இடங்கள் இப்படி தான்.. மனசிலும்

    ReplyDelete
  2. நல்லயிருக்கு

    ReplyDelete
  3. இந்தத் தளத்தையெல்லாம் என்றோ நீங்கள் கடந்துவிட்டீர்கள் என்றல்லவா நான் நம்பிக் கொண்டிருந்தேன் நிலாமகள்?என்னாச்சு உங்கள் கவிதைகளுக்கு?

    ReplyDelete
  4. @வினோ...
    மிக்க நன்றி வினோ!

    @தியாவின் பேனா...
    வருகைக்கு நன்றி தியா!

    @சிவாஜி சங்கர் ...
    மிக்க நன்றி சிவாஜி...!

    ReplyDelete
  5. @சுந்தர்ஜி ...
    என் மேலான நம்பிக்கைக்கும், உயரிய நட்புடனான அறிவுறுத்தலுக்கும் தலைவணங்குகிறேன் ஜி! கடை போட்ட பின் ,தெரு வியாபாரி ஆக பின்னோக்கிப் போகும் அபத்தம் விளங்குகிறது. இனி கவனமாயிருப்பேன். உடனுக்குடன் பதிவிடும் பதற்றத்தால் வந்த வினை.

    ReplyDelete
  6. தாயிழந்த கவிதை - அருமை !

    பேரண்டத்தின் சிற்றணு நாம் - என்ன சொல்றதுன்னே தெரியலை இதான் பெஸ்ட்!

    மற்றவைகளும் நல்லாருக்கு!

    ReplyDelete
  7. @ப்ரியமுடன் வசந்த்...
    'தாயிழந்தவள்' எழுதி, வருடங்கள் கடந்தும் அச்சேறாத ஆதங்கத்தில் பதிந்தது.
    'பேரண்டத்தின் சிற்றணு நாம்' என்பதைக் கூட, 'மணலாய் இரு' என ஜென் தனமாய் தலைப்பிட்டிருக்கலாமோ ...
    தம்பி வர போக இருப்பது சந்தோஷமே எனக்கு.

    ReplyDelete