நீத்தார் நினைவு


கைத்தடி சின்ன மகனுக்கு
மூத்த பெண்ணுக்கு மூக்குக் கண்ணாடி
காவியேறி நைந்த வேட்டி ரெண்டும் கேட்பாரற்று
மேல் துண்டு சுருணையானது அடுக்களையில்
போகவர போடும் டெரிலின் சட்டை ரெண்டும்
பெரிய மனசோடு சின்ன தாத்தாவுக்கு
இவ்வளவும் அடக்கி இத்தனை காலமும்
கைத்தடியில் மாட்டிவந்த மஞ்சள் பை
காதறுந்து குப்பைத் தொட்டியில்
வருடங்கள் தேய்த்துக் கடந்த செருப்பும்
தொலைந்தது ஈமச் சடங்கன்று
ஆயிற்று-
தாத்தா செத்துப் பத்தே நாட்கள்!
5 கருத்துரைகள்
  1. நினைவுகள் மட்டும் அவரவர் எச்சத்துக்கேற்ப இன்னும் கூடுதலாய் சில நாட்கள்.அருமையான கவிதை நிலாமகள்.

    ReplyDelete
  2. உங்க கணிப்புக்கு உடன்படுகிறேன் ஜி! அவ்வளவு குறைந்தபட்ச ஆஸ்தியுடன் வாழ்ந்து முடிந்த தாத்தாக்கள் காலமெல்லாம் மலையேறிப் போச்சே!

    ReplyDelete
  3. தூக்கிப் போடுகிறது கவிதை படித்ததும்!

    ReplyDelete
  4. முதுமையை அலட்சியப் படுத்தி ஒதுக்கிப் பின் அடியோடு மறக்கும் போக்கு, பரவலாவதைக் காணும் போது பதைக்கிறது மனசு.

    ReplyDelete
  5. இதனைப் பார்த்ததும் பா.ரா. எழுதிய கவிதை ஒன்று ஞாபகம் வருகிறது.மனதில் அது இவ்வாறு பதிவாகியிருக்கிறது.

    பக் பக் என்றழைத்தால்
    தானியம் தரவென அறிகிறது கோழி.

    உதடு குவித்து பூஸ் என்றால்
    புரியும் றோசிப் பூனைக்கு.

    ச்சு ச்சு ச்சு என
    மேலண்ணத்தில் தட்டினால்
    வாலாட்டி ஓடி வரும் ஜிம்மி.

    'ந்தா'என்றதும் தட்டெடுப்பார்
    திரவியம் என்றழைக்கப் பட்ட தாத்தா!!


    தாத்தாமார் இப்போது மனதில் வாழ்கிறார்கள்!

    ReplyDelete