செடி காப்பாத்திடுச்சு...!!

அனைவருக்குமான கொண்டாட்டமாக ஆங்கிலப் புத்தாண்டு துவக்கம்! ஆன்மீக அன்பர்களுக்கோ வைகுண்ட ஏகாதசி! எங்க வீடருகே கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீநிவாசப் பெருமாள் வெகு உற்சாகமாக இருக்கிறார். புல் டோசர் வைத்து நிரவப்பட்ட தெருவின் புதுப் பொலிவு. புது வண்ணத்தில் கோயில் சுவர். தெரு வியாபாரிகள் காலையில் இருந்தே தத்தமது...

'விளையும் பயிர்'

சமீபத்தில் ஊருக்குப் போயிருந்தேன். ஊரென்றால் பிறந்த ஊர். குறியாமங்கலம். அரசர்கள் காலத்தில் அந்தணர்களுக்கு தானமளிக்கப்பட்ட வகையில் (சதுர்வேதி மங்கலம்) 'குறிக்கப் படாமலே விடப்பட்ட ஊர்' என்ற பொருள் பொதிந்ததோ பெயர்க்காரணம்.... தெரியவில்லை. புவனகிரியிலிருந்து ஐயப்பன் கோயிலை வளைந்து நெளிந்து சென்றால் இடைப்படும் பெரிய வாய்க்காலைப் பிடித்துக்...

பொரி

ஒவ்வொரு பண்டிகைக்கும் நிவேதனம் செய்து உண்ண வேண்டியவை என்றொரு பட்டியல் நம்மிடம் உண்டு. இன்றைய கார்த்திகை தீபத் திருவிழாவில் பிரதான இடம் வகிக்கிறது அவல் பொரி. அகல் விளக்குகளும் வண்ணக் கோல மாவுப் பொடிகளும் தெருவெங்கும் கூவிச் செல்லும் சிறு தெருவியாபாரிகள் ஓய்வெடுக்க இரவாகிவிடும். கையிருப்பை...

வினவு

புரியாததை புரிந்து கொள்ளவும் தெரியாததை தெரிந்து கொள்ளவும் கேள்வி கேட்பது வாடிக்கை. முதலில் நம் ஐயத்தை தெளிவாக கேட்கத் தெரிய வேண்டும். யாரிடம் கேட்கிறோம் என்பது முக்கியம். ...

அப்புறம் என்னாச்சு?

'கிரகச்சாரம்' தொடர்ச்சி....         இரவு வீடு வந்ததே இரண்டு மணிக்கு மேல். எஞ்சிய பொழுது எளிதாக இல்லை. கடத்தினேன் கடத்தினேன்... ஒவ்வொரு வலிக்குமான இடைவெளியை கண்களை மூடி, வலிக்குமிடத்தில் மனதை நிறுத்தி, வலி பரவுவதை வேடிக்கை பார்த்து...      ...

கிரகச்சாரம்

        கடந்த வாரம் ஒருநாள்  இரவு மணி 11.30. படிக்கும் போது படுத்துக் கொள்வதும் (ஒய்வு+வாசிப்பு ) படுக்கும்  போது படிப்பதும் எனக்கிருக்கும் கெட்ட பழக்கங்களில் ஒன்று.          மழைக் காலங்களில் இரவில் விளக்கொளிக்கு சிறு பூச்சி...

இரட்டைக் கொலை

வாகனக் கொட்டகை கதவை விரித்து வைத்து ஒதுங்கி நின்றேன் பின்னோட்டமாக நகரத் தொடங்கியது வண்டி ஒன்றின் மேல் ஒன்றாக ஒட்டிக் கொண்டு விறுவிறுவென வந்த மழைக் காலக் கருப்பு மரவட்டைகளை கண்ட கணநேரத்தில் காலால் தள்ளியேனும் இருக்கலாம். சரேலென நசுக்கிக் கடந்தது வண்டிச் சக்கரம் இறுக...

பல் வலியா ?

நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் காரணம் என்ன? குறித்த கால கட்டத்தில் தானாக முளைத்து தானாக விழும்படி படைப்பின் சூட்சுமம் அமைந்திருந்ததெல்லாம் ஒருகாலம். காலத்தின்...

சாகசங்கள் மீதான பேராவல்

             குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில மாதங்கள் வயிறு நிறைந்தால் கண் செருகி தூங்கிவிடுகின்றன. சமயங்களில் தாலாட்டைக் கேட்டபடி.         கால் முளைத்து...

ஒலித்துக் கொண்டேயிருக்கும் 'அவர்களின்' குரல்....

      நேற்று (23.09.2014) கடலூர் அரசு காதுகேளாதோர்  வாய்பேசாதோர்  பள்ளி சென்றோம். (Cuddalore deaf and dumb school) தொடர்பு எண் : 04142-221744 ஆசிரியர் மாணவர்களுடன் என் மகளும் (தலைமை ஆசிரியை அருகில்) மதியம் அவர்களுக்கு உணவளித்து அவர்களோடு உண்டு, பேசி மகிழ்ந்து...

தோழமைக்காக ஒரு தொடர்பதிவு...

              சில நாட்களுக்கு முன் மனோ மேம் எனது பதிவிடுதலின் மந்தத் தன்மையை நீக்கும் விதமாக ஒரு தொடர்  பதிவுக்கு அழைத்தாங்க. ஓட முடியாதவன் ஊக்க மருந்து சாப்பிட்ட கதையா நானும் முயற்சி செய்தேன். இதில் கேள்வியும்...

வாழ்த்துங்கள்; வளர்கிறோம்!

இரண்டு நாட்களுக்கு முன் நண்பரின் மகள், செய்யுள் இலக்கணத்தில் அசைபிரித்து அலகிடுதல் பற்றி சொல்லித் தரச் சொன்னாள். பத்தாம் வகுப்பு பாடத்தில் மட்டுமே இன்னும் இருக்கக் கூடிய ஒரு பகுதி அது. 'நேர் நேர் தேமா; நிரை நேர் புளிமா ; .' என மனதில் அதற்கான...

சாதனைப் பெண்களின் கிரீடம் எதுவரை?

        (பதினைந்து நாட்களுக்கு முந்தைய தமிழ்ப் பதிப்பு 'தி இந்து' நாளிதழில் பெப்சி இந்திராநூயி பற்றி தாமரை ஒரு பத்தி எழுதி இருந்தார். அதுபற்றிய வாசகர்களின் கருத்துக்களை வரவேற்றது 'தி இந்து'.        நானும் பங்கேற்றேன். இன்றைய 'தி...

இன்றைய நிம்மதி எதில்?

       ‘சந்தால்' பழங்குடியினப் பெண் எழுதிய கவிதையொன்றை அம்பை மொழிபெயர்ப்பில் சமீபத்தில் வாசித்தேன். திருமண வயதை எட்டிய அப்பெண் தன் தந்தையிடம் எப்படிப்பட்ட மணமகனை தனக்காக தேட வேண்டும் என்று சொல்வதாக அமைந்திருக்கும் அந்தக் கவிதை. அம்பையின் வார்த்தைகளில் இதோ அந்தக் கவிதை......

உயிரின் உயிரே...

என் சுவாசக் காற்றிலும் நான் பருகும் நீரிலும் உலகை தினந்தினம் ஒளியூட்டும் பகலவனிலும் கண்ணுக்கெட்டா தொலைவிலிருந்தும் காதுக்கெட்டும் கோயில் மணியின் ஓம்கார ஒலியிலும் பாதையெங்கும் மிதிபடும் மண்ணிலும் அணுத்தொகுப்பாய் அடிமனசில் அருவுருவாய் உயிர்த்திருக்கிறாய் அம்மா... என்னுயிர் உள்ள மட்டும் உயிர்த்திருப்பாய்! பிறகும் என் வாரிசுகளுள்!! ***************************...

அன்றும் இன்றும் என்றும் ...

*மிகப் பெரியதாக வாய் திறக்கும் உயிரினம் நீர் யானை தான் என்கிறேன் நான். ஒப்புக் கொள்கிறீர்களா?         இல்லீங்க! தவளை மீன் (Frog Fish) என்றொரு வகை உண்டு. தன் வாயைப் பன்னிரண்டு மடங்கு அளவுக்குப் பெரிதாக்கிக் கொள்ளும். உயிரினங்களில் உலக ரெக்கார்ட் என்று சொல்லலாம்! வாயை...

ஒரு மின்னஞ்சல் அச்சேறியது ...

"சின்னசாமியின் கதை" (புதினம்) ஆசிரியர்: வளவ.துரையன் வெளியீடு: அனன்யா, தஞ்சாவூர் பக்கம்: 234 விலை: ரூ.200/-       சாமானிய மனிதனொருவனின் கதையிலும் அசாதாரண செயல்களும், எதிர்பாரா திருப்பங்களும், வாழ்வியல் கோட்பாடுகளை விளக்கும் தத்துவ நெறிகளும் பரிபூரண அன்பும் நட்பும் உறவும் அமைந்திட சாத்தியங்கள் உண்டென்பதை ‘சின்னசாமியின் கதை'...

வன்மம் தவிர்

தோலுரித்துத் தொங்கும்ஆடுகளை கோழிகளைகண்ணெடுத்துப் பார்க்க அஞ்சிஅந்தக் கடைகளின் தெருவையே தவிர்த்துச் செல்லும்கால்களும்கடிக்காத எறும்பைநசுக்க விரும்பாதகருணையும் இருந்துமென்ன...திறந்திருந்த உடற்பரப்பில்சுருக்கெனக் கடித்து-தன்விடமேற்றிய சிறுகுளவிபிடிபடாமல் பறந்ததுகடுகடுப்பே மனசிலும்...வலி மரக்க பற்பசைதடவிமனம் மறக்க வலை மேய்ந்தேன்கணினியில்...சிற்றசைவில் கண் திரும்பசுவர்ப்பல்லி வாயில் சிறுகுளவிஅதக்கி அதக்கிவிழுங்கிசப்பு கொட்டி நாசுழற்றிதிருப்தியான பல்லியை குரூரக் குதூகலிப்பு எழபார்க்கும்...

Health Is Wealth: ஆழ் மனதில் அற்புத சக்தி.

Health Is Wealth: ஆழ் மனதில் அற்புத சக்தி. ...

மகிழம் பூ ... மத்தாப்பு!

ஒரு ஊரில் ஒரு அம்மாவாம். ரெண்டாவது மூணாவது படிக்கிற தன் மகனையும் மகளையும் தினசரி பள்ளிக்கு கிளம்பி செல்லுமுன் பிரார்த்தனை செய்யச் சொல்வாங்க . மகன் சொல்வான்... அம்மா நல்லாயிருக்கணும்  அப்பா நல்லா இருக்கணும். அக்கா நல்லா இருக்கணும். தாத்தா நல்லா இருக்கணும். ஆத்தா நல்லா...

அற்புதம் அம்மா!!

உயிர்ச் சிறைக் கூடமாய் மனித உடம்பிருக்க கருவறை வெளிபோந்தும் மற்றுமொரு சிறைவாசம் சந்தர்ப்ப சூழலால்... வெகு தாமதமாகவேனும் கட்டறுத்தது காலக் கத்திரி வயிறு குளிர மனம் நெகிழ மறுபிரசவித்தாய் உன் மகனை. வாழிய! ...

செவிப்'பறை'

இணையுடனான காதல் கனிமொழியா? துணையற்ற முதுமையின் ஏக்கப் புலம்பலா? பகிர்ந்து மாளாத நட்பின் குதூகலமா? பேசி முடியாத பங்காளிச் சண்டையா? ...

ஒரு தூரிகையின் சிலிர்ப்பில் தெறித்த சில கவிதைகள்

நூல் பெயர்:எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை ஆசிரியர்:- ப. தியாகு (80123 30511) வெளியீடு: வெயில்நதி (99411 16068) பக்கங்கள்: 80 விலை: 70/-         “பார்த்ததில் பார்க்காததையும், கேட்டதில் கேட்காததையும் உணர வைப்பது கலையின் அடிப்படைச் செயல்பாடு” என அணிந்துரையில் இருவரியில் அடக்குகிறார்...

வீழ்ந்தவன்!

           “எம்மாம் நேரம் குந்தி கெடந்தாலும் இந்தாளு மனசு கசியப் போறதில்ல” ஜாங்கிரி உட்கார்ந்திருந்த மணல் திட்டிலிருந்து எட்டி காரி உமிழ்ந்தாள். சின்ன வயசில் கூட்டாளிகளால் வைத்த பட்டப் பெயர் இது. கொண்டவன் வீட்டிலும் நிலைத்து, இப்போது பஞ்சம் பிழைக்க...