செவிப்'பறை'


இணையுடனான
காதல் கனிமொழியா?

துணையற்ற முதுமையின்
ஏக்கப் புலம்பலா?

பகிர்ந்து மாளாத
நட்பின் குதூகலமா?

பேசி முடியாத
பங்காளிச் சண்டையா?

பிரம்ம முகூர்த்தத்திலொரு
இலக்கியப் பேருரையா?

பேராசிரியராயிருந்த
முன் ஜென்மப் பழம்நினைவா?

 அரசியல் கூட்டணி பற்றியா அல்லது
சமூக அவலங்கள் பற்றியா?

விலைவாசி பற்றியா அல்லது
வருமானத்துக்குப் புதுவழி பற்றியா?

கூட்டிலிருக்கும் சிறகு முளைக்காத தன்
அடித் தோன்றல்களுக்கு
புறப்படுமுன் புத்திமதியா?

குரல் வழி பிரத்யட்சமாகும்
கிளிகளின் தொடர் பேச்சு
இக்காலை வேளையில் 
எதைப்பற்றியதாய் இருக்கும்?!
8 கருத்துரைகள்
  1. வணக்கம்

    சிறப்பாக உள்ளது....
    வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. குரல் வழி பிரத்யட்சமாகும்
    கிளிகளின் தொடர் பேச்சு
    இக்காலை வேளையில்
    எதைப்பற்றியதாய் இருக்கும்?!


    ரசிக்கவைத்தது..!

    ReplyDelete
  3. முடிவிலும் ரசனை அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. போன வார புது சினிமா பற்றி இருக்குமோ?

    ReplyDelete
  5. அழகான கவிதை நிலா..
    உங்கள் நளினமான வார்த்தைகளின்
    கவனமான கோர்ப்பில்
    மனதை மயக்குகிறது கவிதை....

    ReplyDelete
  6. அருமையான அற்புதமான கற்பனை
    மனம் கவர்ந்த கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. சிறப்பான கவிதை.

    அவற்றுக்கும் பேச எத்தனையோ விஷயங்கள் இருக்குமோ..... நம்மைப் போல!

    ReplyDelete