வாழ்த்துங்கள்; வளர்கிறோம்!




இரண்டு நாட்களுக்கு முன் நண்பரின் மகள், செய்யுள் இலக்கணத்தில் அசைபிரித்து அலகிடுதல் பற்றி சொல்லித் தரச் சொன்னாள். பத்தாம் வகுப்பு பாடத்தில் மட்டுமே இன்னும் இருக்கக் கூடிய ஒரு பகுதி அது.

'நேர் நேர் தேமா; நிரை நேர் புளிமா ; .' என மனதில் அதற்கான வாய்ப்பாடுகள் எழும்பின. கூடவே அதைக் கற்பித்த ஆசிரியரும் நினைவில் பிரகாசித்தார்.

பத்தாம் வகுப்புத்  தமிழாசிரியர் கிருஷ்ண மூர்த்தி  சார்  ...

நாங்க பத்தாவது வந்தபோது பள்ளிக்கு புதிதாக மாற்றலில் வந்தவர். கண்ணியமான வேட்டி சட்டையில் கருத்த நெடிய உருவம். (தமிழாசிரியர்கள் வேட்டி  தான்  அணிந்தனர்.இன்றும்  எங்கள் குழந்தைகள் படித்த பள்ளியிலும்!) முகத்தில் எப்போதும் சிறு கண்டிப்பு தெரியும். கம்பீரமான விடுவிடுவென்ற நடை. (பின்னாளில் ஒரு சாலை விபத்தில் கால் அடிபட்டு  சாய்ந்த நிதான நடையில் அவரைப் பார்த்து கலங்கிப் போனோம்.)

தமிழ் மேல் சுவை கூட்டியவர்  அவர் தான். மனப்பாட செய்யுள் தவிர பிற பாடங்களை நாங்கள்  புரிந்து படிக்கவும் நினைவில் நிறுத்தவும் அவர் வெகுவாக பிரயாசைப் படுவார். எங்களின் தமிழ் மன்றத் தேர்வுச் சான்றிதழ்களெல்லாம்  அவரின் ஊக்குவிப்பே.

எங்கிருந்தாலும் நல்லாயிருப்பீங்க சார்... எங்க பிரார்த்தனைகளும் அதுதான்! உங்கள் நல்லாசியில் எங்கள் அறிவு துலங்கட்டும்!!

விரல் பிடித்து எழுதப் பழக்கிய முதல் ஆசிரியரிலிருந்து படிப்படியாக வாழ்வின் பாதையில் கற்பித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் அன்பும் நன்றியும்! 
5 கருத்துரைகள்
  1. ஆசிரியர் தின வாழ்த்துகள்

    ReplyDelete
  2. //விரல் பிடித்து எழுதப் பழக்கிய முதல் ஆசிரியரிலிருந்து படிப்படியாக வாழ்வின் பாதையில் கற்பித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் அன்பும் நன்றியும்! // :)

    அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. அருமை.

    அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. என்னை எழுதத் தூண்டிய என் தமிழாசிரியர்களுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  5. @ இராஜ இராஜேஸ்வரி...
    @வை.கோ. சார்...
    @வெங்கட் நாகராஜ்...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    @ சிவகுமாரன்...

    வாங்க சிவா. வெகு நாளாச்சு. வந்தது மகிழ்ச்சி.

    ReplyDelete