உயிர் விளையாட்டு

தான் பிடிக்கும் கரப்பானை மசாலா கூட்டுவதுமில்லை; வறுப்பதுமில்லை; வேக வைப்பதுமில்லை... உடனே தின்றுவிடுவதுமில்லை புஜ்ஜி. கவ்வலிலிருந்து விடுவிக்கும் எதிர்பாரா சுதந்திரத்தில் திகைத்து இலக்கின்றி ஓடும் கரப்பான் ஓரெல்லை வரை அனுமதித்து சட்டென்று கரப்பான் ஓட்டத்தை தன் முன்னிரு கைகளால் தடுத்தாட்கொள்ளும். உள்ளங்கையடியில் அதன் நெளிவின் குறுகுறுப்பை...

அறிதலின் இன்பம்

       ஒரு துணிக்கடை. பண்டிகைக்கு இன்னும் ஒருமாதம் இருக்கும் நேரம். இலேசான கூட்டம் கடையில்.  வெள்ளை கோட் தேடி வந்த மூவர், கடை சிப்பந்தி காண்பித்தவை திருப்தி படாததால் வெளியேறுகின்றனர். வழிமறித்த கடை முதலாளி என்ன தேடி வந்தீங்க? ஏன் எதுவும் வாங்காமல்...

‘புதியன விரும்பு'

மகிழ்வாயிருக்க பெரும்பணம் வேண்டியிருக்கு ‘போதுமென்ற மன'மற்ற நமக்கு சக மனிதர்களுள் புலம்பிக் கொள்ள இருப்பதைத் தாண்டி எவ்வளவோ உண்டு எட்டாத உயரம் ... இல்லாத வசதி,  இத்யாதி, இத்யாதி. கிடைத்ததைக் கொண்டு மகிழும் கலையை புஜ்ஜி போதிக்கிறது தன் விளையாட்டுப் பொருட்களால். பழசாகிப் போன ஹேண்ட்...

பதம்

       இந்த தடவை அதிரசத்துக்கு பாகு வைக்கும் போது  உடனிருந்த மகளிடம் பிசுக்கு பதம், கம்பி பதம், ரெண்டு கம்பி பதம்  எல்லாம் காட்டி, எது எதற்கு எப்படி பாகு வைக்க வேண்டுமென்று விளக்கம் சொன்னேன்.      தோழி தொலைபேசியில் தொடர்பு...

கசியும் விழிகள்

வீட்டினர் அனைவரிடமும் சமத்துவம் கொண்டாடும்  புஜ்ஜிக்கு கட்சியுமில்லை கூட்டணியுமில்லை வெறுப்பவரையும் சலிப்பவரையும் தன் பளபளக்கும் கண்களால் அண்ணாந்து  பார்த்து கருணை சம்பாதித்துவிடும். எல்லோர்  மனசிலும் தனக்கான கனிவை சுரக்கச் செய்யும் வலிமை பெற்ற ஈர விழிகள்! திட்டினாலும் விரட்டினாலும் உடனுக்குடன் மறந்து குழையவும் இழையவும் முடிகிறது...

பெயர் பிறந்த கதை

எங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்க்கப்படாமல் ஆதார் அடையாளம் தேவையற்று குட்டிப்பூனை வந்த மறுநாள் பெயர் சூட்டு வைபவம் கூப்பிட வசதியா பெயரொன்னு சொல்லும்மா என்றான் சிபி. ‘ஜுஜு'என்றேன் குத்துமதிப்பாக அரை மனசாய் ஏற்றான் மறுநாள் இவரிடம் ‘பெயரொன்னு சொல்லுங்க இதுக்கு' என்றேன் ‘புஸ்ஸி' என்றிருக்கட்டுமா?...

தூரத்து வெளிச்சம்

      கடந்த திங்கள் மாலை மகளின் விருப்பத்துக்காக 'மகளீர் மட்டும்' சென்றோம். அரங்கில் கீழ்த் தளம் (இரண்டாம் வகுப்பு) காற்றோட, மேல்தளம் (முதல் வகுப்பு) நிறைந்து வழிந்தது வியப்பு. இந்த செப்டம்பரிலும் குளிர்சாதன வசதியின்றி ஒரு மூன்று மணி நேரம் படம் பார்க்க...

ஆறு; தேறு; மாறு!

அவரவர் கவலை அவரவர் படட்டும் நமக்கெதற்கு? கிடைத்த வாழ்வை அனுபவி மனசே... அவரவர் சிக்கல் தீர்க்க அவரவர்க்கு விரலிருக்கு நமக்கென்ன? உள்நுழைந்து மாட்டாமல் ஒதுங்கியிரு மனசே... அவரவர் வருத்தம் அவரவர் தாண்டட்டும் கைதூக்குவதாய் நினைத்து குட்டையில் விழலாமா முட்டாள் மனசே... அவரவர் பிரச்சினை அவரவர் தலைவலி...

வெள்ளை நிறத்தொரு பூனை ...

         கடந்த இரு நாட்களாக சிபியிடம் அடைக்கலமாகி இருக்கிறது பிறந்து ஒருவாரம் கூட ஆகாத பூனைக்குட்டி ஒன்று. அதற்கும் இரு நாட்கள் முன்பிருந்தே கொல்லைப்புற சன் ஷேடில் விடாமல் கத்திக் கொண்டிருந்த குட்டிக்கு இரக்கப்பட எல்லோராலும் முடிந்தது. அம்மா பூனை வந்து...

இறைக்கொடை

     பொறுமை என்னும் அருங்குணம் ஓர் இறைநம்பிக்கையாளன் வாழ்வில் அடித்தளம் எனலாம்.  இதுவே  ஒவ்வொரு நம்பிக்கையாளனின் இம்மை, மறுமை எனப்படும் ஈருலக வாழ்விலும் வெற்றியைப் பெற்றுத் தருகிறது. அதனால், இறைநம்பிக்கையாளர்கள் தனது வாழ்வை முன்னெடுத்துச் செல்ல உதவும் நம்பிக்கை விளக்காக பொறுமையை எடுத்துக் கொள்ள...

கிருஷ்ணப்ரியா எனுமொரு எழுத்தாளி....

                      துளையிடப்பட்ட முத்து மணிகளை மாலையாக்கி மதிப்பு கூட்டுவது போல், கவிஞர் கிருஷ்ணப்ரியா, அவ்வப்போது கதைமொழியில் வெளிப்பட்ட தம் அனுபவங்களை அவற்றின் உணர்வுகளை வாசகருக்குக் கடத்தும் வகையில் 'நானும் என்னைப் போன்ற அவளும்' என்ற ஒரு தொகுப்பு நூலாக்கியது சிறப்பு. முன்னெடுத்த ஈழவாணிக்கும்...

ஆறாம் அறிவின் பாதகம்

நன்றி:http://venkatnagaraj.blogspot.com/2017/02/blog-post.html விதவிதமான வினாயகர் உருவங்கள் சிரிக்கும் புத்தர் சிலைகள் குபேர பொம்மைகள் கொஞ்சும் சதங்கைகள் வண்ணவண்ண மணித்திரள்கள் இலைகள், பூக்கள், கனிக்கூட்டங்கள் உலகின் ஒட்டுமொத்த போன்சாய் உருவங்களாக சாவிக்கொத்துகளின் ஆதிக்கங்கள். கோர்க்கப்படும் சாவிகளுக்கு அணைவாய் இருக்க போட்டா போட்டிகள் ஒவ்வொருவர் கையிருப்பிலும் அவரவர் ஆளுகைக்கு உட்பட்டவற்றின்...

சிருங்காரி

நன்றி: http://venkatnagaraj.blogspot.com/2017/02/blog-post.html தட்டுசுற்றா உடுத்தியிருக்கும்  செல்லம்மா-உன் தலைச்சுமையா இருப்பதுவும் என்னம்மா கோணக் கொண்டைக்காரி கொள்ளைச் சிரிப்புக்காரி கைவளை கலகலக்க கட்டுடல் பளபளக்க என் கண்ணைப் பறிக்குறடி கண்ணம்மா உன் காலுக்கு செருப்பா நான் வரட்டுமா? முதல் குண்டு கூழ்ப்பானை அதுக்கு மேல மோர்ப்பானை மூணாவதா நெல்லுச்சோறு...

பழமாகிறாய் நீ ... மரமாகிறேன் நான்!

விரிந்த தன் இலைகளில் பச்சையம் வற்றி செம்மைதூக்கலான மஞ்சள் நிறமடர்ந்த வாதாம் மரத்தின் திலக வடிவ இலைகள் தடக் தடக் என இரவும் பகலும் உதிர்ந்தபடி இருக்க மரத்தடியில் கிளைபடர்ந்த தூரம் வரை மண்மூடிக் கிடக்கும் இலைமெத்தையில் ஒய்யாரமாய் அமர்ந்து விருந்தாகிறாய் என் புகைப்படக் கருவிக்கு....

பேசி மாளாப் பொழுது

பட உதவி: http://venkatnagaraj.blogspot.com/ நூறுநாள் வேலையில் தூர்வாரிய ஏரி இது கிடக்கும் சொற்ப நீரை இயந்திரம் கொண்டு உறிஞ்சியே கருகும் பயிரைக் காப்பாற்றப் பார்க்கிறோம் அப்பன் பாட்டன் காலத்தில் முப்போக வெள்ளாமை. வண்டிமாடுகள் ஓய்ச்சலின்றி வீட்டுக்கும் வயலுக்குமாக நடைபோட்டபடி இருந்தன வாய்க்கால் பாசனமற்று வானமும் கருமியானதில் பஞ்சம்...

முகிலில் மறைந்த நிலா

பட உதவி: வெங்கட் நாகராஜ்  உடைக்குப் பொருத்தமாய் வளையல், நகப்பூச்சு, கொண்டையூசி எல்லாம் அழகுதான். உன் வெள்ளைப் பல்லிலும் பஞ்சு முட்டாய் தின்று படிந்த பக்கி ரோஸ் கலர் பிரமாதமென்றேன் நாணிக் கவிழ்கிறாய் தோழியின் தோளில்.   ...

அஞ்சும் மூணும் ...

எங்க பாட்டி சொல்வாங்க, (ஆமாப்பா... நமக்கும் வயசாகிப் போச்சு)‘அஞ்சும் மூணும் சரியா இருந்தா அறியாப் பிள்ளையும் கறி சமைக்கும்'. சொலவடைகளும் பழமொழிகளும் சரளமாக பேச்சிடையே சொல்வது அவரது பழக்கம். பலவற்றுக்கு விளக்கம் கிடைக்கும். ‘அப்படீன்னா?' அறியாப் பருவக் கேள்வி. ‘போடறத போட்டு செய்யற விதமா செஞ்சா...