கசியும் விழிகள்




வீட்டினர் அனைவரிடமும்
சமத்துவம் கொண்டாடும்  புஜ்ஜிக்கு
கட்சியுமில்லை கூட்டணியுமில்லை
வெறுப்பவரையும் சலிப்பவரையும்
தன் பளபளக்கும் கண்களால்
அண்ணாந்து  பார்த்து கருணை சம்பாதித்துவிடும்.
எல்லோர்  மனசிலும்
தனக்கான கனிவை சுரக்கச் செய்யும்
வலிமை பெற்ற ஈர விழிகள்!

திட்டினாலும் விரட்டினாலும்
உடனுக்குடன் மறந்து
குழையவும் இழையவும் முடிகிறது புஜ்ஜியால்
அவமதிப்போ சுடுசொல்லோ
வைத்து மறுக மனமற்றது.

எதிரியைக் கடித்துக் குதறவும்
அன்பை அறிவிக்க நம்மைக் கவ்வவுமாக
பற்களையும் நகங்களையும்
கையாளும் சாதுர்யம் 
படைப்பின் விந்தை !

2 கருத்துரைகள்
  1. திட்டினாலும் விரட்டினாலும்
    உடனுக்குடன் மறந்து
    குழையவும் இழையவும் முடிகிறது புஜ்ஜியால்//

    அருமை.

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் மகிழ்ச்சி சகோ...

    பல நேரம் மனமற்ற புஜ்ஜி போல் வாழத் தோன்றுகிறது.

    ReplyDelete