14 கருத்துரைகள்
  1. ‘அஞ்சும் மூணும் சரியா இருந்தா அறியாப் பெண்ணும் கறி சமைக்கும்'.

    நானும் இந்தப் பழமொழியைக் கேள்விப்பட்டுள்ளேன்.

    இருப்பினும், பொதுவாக அவ்வப்போது இதுபோலச் சொல்லப்படும் பழமொழிகளுக்கு, யாரிடமும் நான் விளக்கம் எதுவும் கேட்காமல், நானாகவே ஓர் ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்து என்னிடம் வைத்துக் கொள்வேன்.

    ஐந்து என்பது சமையலுக்கு அன்றாடம் மிக முக்கியமாகத் தேவைப்படும் பொருட்கள் உள்ள அஞ்சறைப்பெட்டியே தான்.

    >>>>>

    ReplyDelete
  2. ஐந்து + மூணு = எட்டு.

    மொத்தத்தில் எட்டு என்பது அஷ்ட லக்ஷ்மிகளைக்குறிக்கும் சொல்லாகவும் இருக்கலாம். அனைத்து ஐஸ்வர்யங்களையும் குறிப்பதாகவும் கொடுப்பதாகவும் இது சொல்வடையாக அல்லது பழமொழியாக சொல்லி வந்திருக்கப் பட்டிருக்கலாம்.

    அனைத்து ஐஸ்வர்யங்களும் வீட்டில் இருந்து, அன்பான கணவரும், அனுசரணையாக புகுந்த வீடும் அமைந்துவிட்டால் வேறு என்ன வேண்டும் ஒரு பெண்ணுக்கு?

    >>>>>

    ReplyDelete
  3. இந்த காலத்திற்குத் தகுந்தாற்போலச் சொல்வதானால் ........

    இப்போது அந்த ஐந்தில்

    (1) சமையலுக்குத் தேவையான அனைத்து மளிகை சாமான்கள் + காய்கறிகள் (காய்கறி நறுக்கித்தந்து உதவக்கூடிய கணவருடன்)

    (2) குக்கர், மிக்ஸி, கிரைண்டர் முதலான அனைத்துப் பாத்திரம் பண்டங்கள் (பாத்திரம் தேய்த்துத் தந்து உதவும் கணவருடன்)

    (3) கேஸ் அடுப்பு

    (4) கேஸ் நிறைந்த சிலிண்டர்

    (5) நல்ல சுத்தமான குடி தண்ணீர் கொட்டும் குழாயுடன் கூடிய நல்ல வெளிச்சமான பெரிய சமையல் அறை + சமையல் மேடை.

    இப்போது அந்த மூன்றில்

    (1) சமைப்பவளுக்கான சந்தோஷமான மன நிலை

    (2) ருசியாக சமைத்து அசத்த வேண்டும் என்ற ஆர்வமும், துடிப்பும்

    (3) சமைக்கும் போது ஏற்படக்கூடிய சிற்சில விபத்துக்களைத் தவிர்த்துக்கொள்ளக்கூடிய, படிப்பறிவுடன் கூடிய பாதுகாப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.

    எனவும் வைத்துக்கொள்ளலாமோ ? :)

    ReplyDelete
  4. @வை.கோபாலகிருஷ்ணன்

    சபாஷ் சார்! அருமையான கற்பனை.

    ReplyDelete
  5. @வை.கோபாலகிருஷ்ணன்

    காய்கறி நறுக்கித்தந்து உதவக்கூடிய கணவருடன்//
    பாத்திரம் தேய்த்துத் தந்து உதவும் கணவருடன்//

    கடையில் வாங்க முடியாது. ஜென்ம புண்ணியம் இருக்கணும்.



    ReplyDelete
  6. @ வை. கோ. சார்...
    ஐந்து + மூணு = எட்டு//

    கூடவே, 5:3, 5X3 எல்லாம் கூட பொருள்படுமா என்று நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். :))

    ஐந்தின் சிறப்புகளும் மூன்றின் சிறப்புகளும் மனசின் ஒருபுறம் படமாக விரிந்து பொருத்திப் பார், பார் என்கிறது.

    ReplyDelete
  7. அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை என்று சொல்லியே, பல ஜோடிகள் இன்று சேர்க்கப்பட்டு வருகின்றன. அதுபோல பல விஷயங்கள் இன்று முடிவெடுக்கப்பட்டும் வருகின்றன.

    அஞ்சுக்கு ரெண்டைவிட, அஞ்சுக்கு மூணு என்பது இன்னும் பெட்டர்தான்.

    மேலும் மேலும் இதனை யோசித்து யோசித்துப் பாருங்கோ. புதுசுபுதுசாக பல விஷயங்கள் புலப்படலாம். :)))))

    அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. ஐந்தும் ஆறும் என்பதே
    அஞ்சறைப் பெட்டியென
    ஆனதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்

    இந்த ஐந்தும் மூணும்
    புதிதாகக் கேள்விப்பட்டுகிறேன்
    விளக்கம் சரியாகத்தான் படுகிறது
    கோபுசாரின் விளக்கமும்...

    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  9. @வை.கோபாலகிருஷ்ணன்
    தங்கள் வருகைகளும் கருத்துகளும் மகிழ்வைத் தருகின்றன சார். தனி ஆளா யோசிக்காம துணை இருக்கறது பலம் தானே. எட்டுக்கு நாலும் பெட்டர் தான் எனக்கு.

    ReplyDelete
  10. @Ramani S

    கூட்டணியில் தங்கள் வரவும் மகிழத் தக்கதே. நன்றி ஐயா.

    ReplyDelete
  11. //@வை.கோபாலகிருஷ்ணன் ... தங்கள் வருகைகளும் கருத்துகளும் மகிழ்வைத் தருகின்றன சார்.//

    அப்படியா, மிக்க மகிழ்ச்சி மேடம்.

    //தனி ஆளா யோசிக்காம துணை இருக்கறது பலம் தானே.//

    நிச்சயமாக.

    //எட்டுக்கு நாலும் பெட்டர் தான் எனக்கு.//

    2/5 என்பது 40% ; 3/5 என்பது 60%

    தாங்கள் சொல்லும் புதிய 4/8 என்பது 50% ஆகும்.

    ஏதோ இந்த 50% ஆவது பெட்டர் ஆக இருப்பதில் திருப்தி பட்டுக்கொள்ளுங்கோ.

    ReplyDelete
  12. //விளக்கம் சரியாகத்தான் படுகிறது
    கோபுசாரின் விளக்கமும்...//

    மிக்க நன்றி Mr. RAMANI Sir.

    ReplyDelete
  13. @வை.கோ.சார்...
    அண்டத்திலும் (நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்)
    பிண்டத்திலும் (மண்ணீரல், சிறுநீரகம், நுரையீரல், இதயம், கல்லீரல்) உள்ள பஞ்ச பூதங்களும், இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்று நாடிகளும் சரியா இருந்தா அறியா பிள்ளையும் கறி சமைக்கும் அதிசயம் நிகழும்...
    # திருமூலரைப் படித்தபோது தோன்றியது.

    ReplyDelete
  14. //நிலாமகள் 10 February 2017 at 20:09
    @வை.கோ.சார்...
    அண்டத்திலும் (நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்)
    பிண்டத்திலும் (மண்ணீரல், சிறுநீரகம், நுரையீரல், இதயம், கல்லீரல்) உள்ள பஞ்ச பூதங்களும், இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்று நாடிகளும் சரியா இருந்தா அறியா பிள்ளையும் கறி சமைக்கும் அதிசயம் நிகழும்...
    # திருமூலரைப் படித்தபோது தோன்றியது.//

    திருமூலரைப் படித்தபோது தங்களுக்குத் தோன்றியதாகச் சொல்லும் இந்தப் புதிய விளக்கமும் ஜோர் ஜோர் ! :)

    மென்மேலும் இது சம்பந்தமாக வேறு எதையாவது படித்துக்கொண்டே இருங்கோ .... விடாதீங்கோ, ப்ளீஸ்.

    ReplyDelete