9 கருத்துரைகள்
  1. ஒவ்வொரு வரிகளிலும் இன்றைய விவசாயிகளின் வேதனைகள் யாவும் .... நிலத்தினில் நீர் இன்றி ஏற்பட்டுவரும் வெடிப்புகள் போல கூறப்பட்டுள்ளன.

    இறுதி வரிகள் இரண்டும் முத்திரை பதித்துள்ளன.

    இனியாவது ஓர் நல்லாட்சி அமைந்து, நல்ல காலம் பிறந்து, மாதம் மும்மாரி பொழியட்டும்.

    யோசிக்க வைக்கும் ஆக்கத்திற்குப் பாராட்டுகள் + நன்றிகள்.

    ReplyDelete
  2. நீர் காட்டியுள்ள படத்திலாவது
    நீர்-ஐக்காண என் கண்களில் ஆனந்தக் கண்-
    நீர் வந்தது.

    ReplyDelete
  3. வேதனை தீர்க்கவில்லை என்றால் அனைவருக்குமே வேதனை தான்...

    ReplyDelete
  4. வாய்க்கால் பாசனமற்று வானமும் கருமியானதில்//
    அருமையான சொல் .வானம் கருமியாக இல்லாமல் வள்ளலாக மழையை பொழிந்தால் எல்லா உயிர்களும் வாழும்.

    ReplyDelete
  5. இப்படி தனியாக நின்ற வண்டியைப் பார்த்தபோது மனதுக்குள் ஒரு வலி. என்னால் மறக்க முடியாத படம் இது.

    நான் எடுத்த படங்களுள் எனக்குப் பிடித்த இப்படத்திற்கு நீங்கள் எழுதிய கவிதை மிகப் பொருத்தம். நன்றி சகோ.

    ReplyDelete
  6. @வை.கோபாலகிருஷ்ணன்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
    நிலக்கரி நிறுவனத்தின் ஊழியத்தில் இன்றைய எம் பெருவாழ்விருந்தாலும் அடிப்படையில் விவசாயக் குடும்பம் நாங்கள்.

    தோண்டத் தோண்டக் கரி வழங்கும் இப்பூமியிலும் ஒருகாலத்தில் உழுது பயிர் விளைத்த மக்கள் வெளியேற்றப் பட்டு நினைவில் சுமக்கிறார்கள் தம் ஊரை.

    //இனியாவது ஓர் நல்லாட்சி//

    கனவிலும் காண்போமா???!

    ReplyDelete
  7. @திண்டுக்கல் தனபாலன்

    ஆம் சகோ...
    கண்ணை விற்று சித்திரம் வாங்குபவன் சாமர்த்தியசாலியா என்ன?

    ReplyDelete
  8. @கோமதி அரசு

    வானம் வாரி வழங்கினாலும் பொது அறம் துளியுமற்ற மனிதர்களின் எதேச்சாதிகாரம் ஒட்டு மொத்த அழிவினை நோக்கிச் செலுத்தியபடி இருக்கிறதே... நாம் பிரார்த்திப்போம்... வாழ்த்துவோம்... இவர்களுக்கு நல்ல புத்தி வர.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ...

    ReplyDelete
  9. @வெங்கட் நாகராஜ்

    அத்துவான வெளியில் ஒற்றையாய் நிற்கும் இவ்வண்டி, பார்த்த எனக்குள்ளும் பெரும் சோகத்தையே விதைத்தது சகோ.

    நம் உணர்வுகளைப் பிரதிபளித்ததென்றால் புகைப்படமும் கவிதையும் நன்றாகவே இருக்கும். நன்றி சகோ... நீண்ட நாள் அடைபட்டிருந்த என் பேனாவை உயிர்ப்பித்தமைக்கு.

    ReplyDelete