கடந்த திங்கள் மாலை மகளின் விருப்பத்துக்காக 'மகளீர் மட்டும்' சென்றோம். அரங்கில் கீழ்த் தளம் (இரண்டாம் வகுப்பு) காற்றோட, மேல்தளம் (முதல் வகுப்பு) நிறைந்து வழிந்தது வியப்பு. இந்த செப்டம்பரிலும் குளிர்சாதன வசதியின்றி ஒரு மூன்று மணி நேரம் படம் பார்க்க முடியாத சொகுசுக்காரர்களாகி விட்டோம்!
தொடக்கத்தில் ஊர்வசியின் மலரும் நினைவுகளின் நடிப்பின் வீர்யம், நாளை முதல் வேலையாக தொடர்பறுந்த சினேகிதங்களை உயிர்ப்பிக்க வேண்டுமென்ற சங்கல்பம் தந்தது மனசில். இதோ அதோ என்று நாட்களுடன் தேய்ந்தது அதுவும். நிமிர்த்த முடியாத நாய் வால் ஒத்தது நம் புத்தி என நிரூபித்த படி. படத்துக்கான விமர்சனமல்ல இப்பதிவு. அது பற்றிய எனக்குள்ளான ஒரு தாக்கத்தின் பதிவே இது.
பல இடங்களில் நான் சிரித்து, ரசித்து, கசிந்து, மகிழ்ந்ததாக மகள் சொன்னாள். இவள் படத்தைப் பார்க்க வந்தாளா, அல்லது என்னையா? உடன் வந்த தன் பாட்டியிடமும் படம் பற்றிய கருத்தை விசாரித்தாள்.
கடத்தப்பட்ட பானுப்பிரியாவிடம் போனில் பேசும் பேத்தி , 'நீ இனி இங்க வரமாட்டியா? தப்பிச்சுட்டதா அம்மா சொல்றாங்க...' என்ற போது, உரத்து சிரித்தது மட்டும் நினைவிருக்கிறது.
தப்பிக்குமளவு படுத்துகிறதா இல்லறம்... இன்னும் பல பெண்களுக்கு?! யோசித்தால், பாட்டி தப்பிச்சுட்டதா சொன்ன அம்மாவும் தப்பிக்க முடியாது, பேசும் பேத்தியும் நாளை தப்பிக்கப் போவதில்லை...
அழ வேண்டிய இடமல்லவா... சிரித்து தான் ஆற்றுகிறோமோ சிலதை....!

:) இந்த இல்லறம் என்பது மிகப் பழைய சமூக நிறுவனம் நிலா....
ReplyDeleteஆணுக்கும் சிறை பெண்ணுக்கும் சிறை. போதாததற்கு சமூகத்தின் அழுங்குப் பிடி வேறு...
தேவை கொஞ்சம் renovation....
வெளி நாடுகளில் இந்த திருமணம் என்ற நிறுவனத்தின் பின்னால் நம்முடயது போல அத்தனை இறுக்கம் இல்லை. ஆண், பெண் பாலாரிடம் ஓரளவு புரிந்துணர்வும் சம உரிமையும் கூட ஓரளவு உண்டு. அரசாங்களும் ஓரளவு பெண்களுக்கு சார்பாக சிந்திக்கிறது கொஞ்சம் ஆறுதல். ஆனால் அது பல ஆண்களுக்கு கடுப்பைக் கிளப்பும் அம்சமாகவும் இருக்கிறது....
பெண்கள் தம் திறமையை குடும்பத்துக்குள் முடக்கி விடக் கூடாது... அது ஒரு கதவு மாதிரி, காற்று வர வெளிச்சம் வர தேவைப்பட்டால் புறப்பட ஒரு வழி இருக்கிறது என நம்பிக்கை கொள்ள என பலவற்றுக்கும் இந்தக் ‘கதவு’ பெண்களுக்கு வேண்டும். குறிப்பாக தமிழ் பண்பாட்டில்..