அவரவர் கவலை
அவரவர் படட்டும்
நமக்கெதற்கு?
கிடைத்த வாழ்வை அனுபவி மனசே...
அவரவர் சிக்கல் தீர்க்க
அவரவர்க்கு விரலிருக்கு
நமக்கென்ன?
உள்நுழைந்து மாட்டாமல்
ஒதுங்கியிரு மனசே...
அவரவர் வருத்தம்
அவரவர் தாண்டட்டும்
கைதூக்குவதாய் நினைத்து
குட்டையில் விழலாமா
முட்டாள் மனசே...
அவரவர் பிரச்சினை
அவரவர் தலைவலி
நம் தலை பத்திரம்
நகர்ந்திடு மனசே...
அவரவர் பொறுப்பை
அவரவர் உணரட்டும்
நமக்கானதைப் பார்த்திட
நகரும் பொழுதைப் பிடித்திடு மனசே...
அவரவர் வலிகள்
அவரவர் வினைவழி
கூட்டவும் வேண்டாம்; குறைக்கவும் வேண்டாம்
மரம்போலிருக்கப் பழகிடு மனசே.
பாத்திரம் அறிஞ்சு பிச்சை போடணும்மா.....
ReplyDelete:)
கன நாளைக்குப் பிறகு....நல்வரவு!எளிமையான கவிதை!!கடுகு மாதிரி தலைப்பு ... கருத்துச் செறிவுள்ள அழகாகப் பொருந்திப் போகும் சின்னச் சொற்கள்....
@மணிமேகலா
ReplyDeleteகன நாள் கழித்து தங்கள் வரவில் மகிழ்ந்தேன் தோழி... குறள் போல் சிலது குறுகி இருந்தாலும் விரிக்க வெகுவாய் விரியுமன்றோ...
நேரமே போறலை எனும் புலம்பலின் நுனி தேடிக் கிளம்பிய விளைவு கவிதை ஆனது. நன்றி.