விஷ்ணுபுரமும் சாகித்ய அகாதெமியும்...

நான் இன்று ஒரு சுடுமண் இருக்காஞ் சட்டி விளக்கு. நான் இன்று காய்த்துப் போன உள்ளங்கையுடன் ஒரு ஆதி மனுஷி  திரித்த இலவம் பஞ்சுத் திரி. நான் இன்று துயரிடைக் கசிந்த ஆனந்தத்தின் தைலம். நான் இன்று யாரின் அகல் தீயோ ஏற்றிய சுடர். நான் இன்று...

எப்படியிருக்கிறாய்?

தாம் உதிர்த்த மலர்கள் சூழ நிற்கும் மரம்போல என் ஞாபகப் பரப்பெங்கும் உனது வாசனையே கூழாங்கல்லின் மழமழப்பும் பூவிதழின் மெதுமெதுப்புமாக சிலிர்க்கச் செய்கிறதென்னை உன் கைவிரல் நுனி தொடல். தன்னை அறியப் பிரயத்தனப்படும் ஒவ்வொருவருக்கும் தனித்தனி தெளிவு தரும் ஜென் கவிதை நீயென்பேன்... எளிதாய் யாரும்...

என்று தணியும்?

நடுத்தட்டு மக்கள்  இரவுபகலாக  நடுத் தெருவில் ... கோடிகளில் வரி ஏய்க்கும் கொம்பன்கள்  கதகதப்பாய் பஞ்சணையில். **************** பாடுபட்டுத் தேடிவந்த  நூறு ரூபாய் நோட்டுகளை 'படக்'கென்று கிழித்துப் போட்ட  ரெண்டு வயசு மகனின்  முதுகு பழுத்தது முதன்முறையாக. **************** தன் சேமிப்பின் கதியறிய  கேட்கிறான் சிறு...

அடி பொலி!

இருக்கையில் அமர்ந்திருந்த கொசு திடுமென்ற மின்விசிறி சுழற்சியால் எழுந்து படபடத்து சுழல்கிறது மறுபடி நினைவூட்டப்பட்ட மறந்துபோனதொரு வலிமிகு பொழுதைப் போல ரீங்காரமிட்டபடி ரத்தம் முழுக்க உறிஞ்சியெடுக்கும் தீராக்குரோதமுடன் சுழலும் இக்கொசுவுக்கு சற்றும் சளைத்ததில்லை அந்நினைவுகளின் கொக்கரிப்பு நசுக்கியெறி உன் வலிக்கொசுவை. மகிழ்ச்சி! ...

எல்லா மரமும் போதிமரமாக...

புத்தரின் புன்னகையும் அவர் பெற்ற ஞானமும் அவரை அறிந்தவர்களுக்கொரு பிரமிப்பைத் தரத்தக்கது. மூடிய கண்களின் தியான அமைதியும் விரிந்த இதழ்களின் ஓரப் புள்ளி கிளர்த்தும் தத்துவ விசாரமும் விசாலமான அறிவின் அறிவிப்பாக தொங்கிய காதுகளும் ஆயிரம் இதழ்கொண்ட தாமரையாக விரிந்த சகஸ்ரகாரச் சக்கரத்தின் புற அடையாளம்...

நாவில் நிலைத்திடும் ருசி

               பல்வேறு சமையல் குறிப்புகளையும் வீட்டுப் பராமரிப்பு முறைகளையும் மாத சஞ்சிகைகளில் எனது திருமண வாழ்வின் 23 ஆண்டுகாலமாக ஒரு பார்வையில் கடந்ததுண்டு. கண்ணில் பட்டதில் கருத்தில் நின்றது அடுத்த தடவை அப்பதார்த்தங்கள் செய்யும் போது நினைவில் மின்னிக் கையாண்டு பார்த்ததும் உண்டு. இணையத்தின் வலைப்பூ...

பல் 'ஆண்டு' வாழ்க!

      சில நாட்களுக்கு முன் ஏதோ சாப்பிடும் போது வலது மேல் கடைவாய்ப் பல் ஒரு மூலையில் மளுக் என உடைந்தது. இரு ஆண்டுகளுக்கு முன்பே இடது மேல் வரிசையில் ஒரு பல்லுக்கு வேர் சிகிச்சையளித்த பல் மருத்துவர் அப்போதே எச்சரித்திருந்தார். கடைவாய்ப்...

ஊஞ்சல் நேரங்கள்

       நேத்து கனவில் அப்பா வந்தாருங்க... என்றேன் இவரிடம். இவருக்கு அப்பா. எனக்கும் அப்பாவாக இருந்தவர் தானே...        உடலற்றுப் போன அவரை, கனவில் உடம்பும் உசிருமான இருப்பில் பார்த்த நெகிழ்வில் மனசெங்கும் ஒரு பரவசம். காலைமுதலே அவரைப் பற்றிய...

மறத்தலும் மன்னித்தலும்....

 1.      திருப்பனந்தாள் - ஆடுதுறை வழியில் முட்டகுடி அருகில் திருவெள்ளியக்குடி கோலவில்லி ராமர் கோயிலுக்கு  சென்றோம். அன்று ஸ்ரீ ராம நவமி. காலை வேளையில் வாசலில் ஓரிருவர் வரவும் போகவுமாக இலேசான சந்தடி.       கோபுர நுழைவாயிலில் ஒரு எளியவர்...