சில நாட்களுக்கு முன் ஏதோ சாப்பிடும் போது வலது மேல் கடைவாய்ப் பல் ஒரு மூலையில் மளுக் என உடைந்தது. இரு ஆண்டுகளுக்கு முன்பே இடது மேல் வரிசையில் ஒரு பல்லுக்கு வேர் சிகிச்சையளித்த பல் மருத்துவர் அப்போதே எச்சரித்திருந்தார். கடைவாய்ப் பல்லில் சொத்தை வந்திருக்கிறது. சில நாட்கள் கழித்து வாங்க, எடுத்திடலாம் என்று.
தொல்லை எதுவுமில்லாமலிருக்க எடுப்பானேன் என நாட்கள் கடத்த இப்போது பொக்கையாகி வாயை மூடினாலே கீழ்த் தாடையில் உராய்ந்து வலியும் எரிச்சலும் தரத் தொடங்கியது. தானாக மழுங்கிவிடுமென்ற நப்பாசையில் பத்து நாட்கள் கடந்தது. வலது கீழ்த்தாடையோரம் மேல் பல் குத்திக் குத்தி கட்டிபோலாகி வலி கூடியதால் வேறு வழியின்றி அதே பல் மருத்துவமனை வாசலில் ஒரு அந்திமாலை இரண்டு மணி நேரம் காத்திருந்து உள் சென்றோம்.
வெளியில் காத்திருந்தபோது பல்லை எடுக்கச் சொன்னால் மருந்து மாத்திரை மட்டும் வாங்கிக் கொண்டு வந்துவிடலாமென கணவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். “ஏன்னா, கூர் மழுங்கியிருக்கு. கீழ்த்தாடைக் கட்டி, வலி சரியானால் போதும்” என்றேன் ஜம்பமாக தலையாட்டிக் கொண்டார் இவர்.
பரிசோதித்த மருத்துவர் எடுத்துடுவோமா? என்றதும் வேகவேகமாக சரியெனத் தலையாட்டினேன். கணவர் புன்னகைத்துக் கொண்டார். மருத்துவர் எடுக்கப் போகும் பல்லருகே மரத்துப் போக ஊசி மூலம் மருந்தேற்றி காத்திருக்கச் சொன்னார்.
ஒரு பத்து நிமிடம் கழித்து, கூப்பிடவும் போய் அமர்ந்தேன். மரத்திருக்கா? ம்ம்ம்...
ஒரே நிமிடம் தான்... அவர் கொறடாவில் என் பல். எலுமிச்சையளவு உருண்டிய பஞ்சை கடைவாயில் திணித்து, முகத்தருகே கொறடாவை ஆட்டி ஆட்டிக் கேட்கிறார் “வேணுமா? தூக்கிப் போடவா?” அடப் போடுங்கப்பா...
தம் இருக்கையில் வந்தமர்ந்த மருத்துவர், “நான் பார்த்த நிறைய வாய்ப்புற்று கேஸ்களில் இந்தக் கடைவாய்ப் பல் கூர்ப்பு குத்தியதுதான் தொடக்கமாயிருந்திருக்கு. உடைஞ்ச கடைவாய்ப் பல்லை எடுக்கறது தான் வரப் போகும் புற்றைத் தவிர்க்க நல்ல வழி” என்கிறார்!
படம் உதவி: கூகுள் |
“கட்டி சரியாக ஏதாவது மாத்திரை”?
“எடுத்தாச்சுல்ல... அது தன்னாலே ஆறிடும் பாருங்க. இப்ப பல் எடுத்த இடத்துல புண் வலி தெரியாம ஆற மட்டும் மாத்திரை தர்றேன்” என்றபடி வலி மாத்திரை இரண்டு நாளைக்கு எழுதினார். (நான் எடுத்துக் கொண்டது இரண்டு வேளை மட்டுமே) சீட்டை தருமுன் அவசரமாக பல்லிடுக்கில் கேட்டேன்.
“இந்த ஈறு, நாக்கில் கொப்புளம் வந்தால் ஒரு ஆயின்மெண்ட் தடவத் தருவீங்களே, அதையும் கொஞ்சம் எழுதித் தாங்க. பையனுக்கு அடிக்கடி வருது.”
இது அல்லது அது என ஒன்றுக்கு இரண்டாக மருந்துச் சீட்டின் பின் பக்கம் எழுதித் தந்தார். “காலை மாலை இரண்டு வேளை தடவணுமா?” என் அடுத்த கேள்வி. “பல் பிடுங்கிய ஈறில் கொட்டுற ரத்தத்தோட என்ன பேச்சு உனக்கு?” என்பது போல் கணவர் என்னைப் பார்க்கிறார்.
“ம்ம்ம்... ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை கூட தடவலாம். வலி தெரியாம இருக்கத் தான் மருந்து. மத்தபடி கொப்புளம் ஆற ஒரு வாரமாவது ஆகும்.”
(ஆமாமாமாம்... சூட்டுக் கொப்புளமாயிருக்கலாம், தொற்று ஏதேனுமிருக்கலாம், காரம் அதிகம் சாப்பிட்டிருக்கலாம், நொறுக்குத் தீனி அதிகம் சாப்பிட்டிருக்கலாம்... காரணம் புரிந்து சரிசெய்தாலொழிய மருந்து மட்டும் சரியாக்கிவிடுமா என்ன?)
மனசுக்குள் மருத்துவரின் நேர்மையைப் பாராட்டிக் கொள்கிறேன்.
பிறகென்ன? ஆங்கில மருத்துவர்களும் நோயாளர் கேட்கும் பட்சத்தில் நல்ல விளக்கங்களையே தருகின்றனர். பல வியாதிகளில் மருந்து என்பது பிணிபொறுக்கவே. குணமாவது மருந்தினால் மட்டுமல்ல என்பதை மறைப்பதில்லை.
பல் ஈருகளுக்கு கீழே வலி இருந்தோ இல்லையோ கட்டிகள் இருந்தால் அதை மேலும் பயாப்சி மூலம் பரிசோதனை செய்வது நல்லது.
ReplyDeleteஎதிராதக்க்காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்.
நிற்க.ஒரு ஆபரேஷன் அல்லது ப்ரோஜீஜருக்குப் பின்னே ஆண்டி பயாடிக் வேண்டுமா என்பதை நிர்ணயிப்பது பல .
ஒன்று அந்த நபரின் இப்போதைய உடல் நிலை. கடந்த உடல் மெடிகல் ஹிஸ்டரி. இப்போது அவர் எடுத்துக்கொள்ளும் ஹைஜீன்.
நமது நாட்டில் பரவலாக போல்யுஷன் இருப்பதால் எந்த ஒரு சர்ஜரிக்கு முன்னாலும் பின்னாலும் ஆண்டி பயாடிக் மாத்திரைகள் தருகிறார்கள். இதில் தவறு இல்லை.
இதுவே வெளி நாடுகளில் குறிப்பாக, அமெரிக்காவில் நீங்கள் சொல்வது போல வெறும் வலி குறைக்க, வீக்கம் குறைய ப்ரூபென் மாதிரி ஆண்டி இன்ப்லமேடறி மட்டுமே தருகிறார்கள்.
அங்கு டெட்டனஸ் கிடையாது என்கிறார்கள். ஹாஸ்பிடல் இன்பாக்ஷன் வருவது சாத்தியம்மில்லை. இங்கு அப்படியில்லையே.
எத்தனை பல் டாக்டர்கள், தனது கொரடை ஒரு பேஷண்டுக்கு பல் தட்டி பார்த்த உடன் ஸ்டெரிலைஸ் செய்கிரார்கள் ?
சுப்பு தாத்தா.
www.Sury-healthiswealth.blogspot.com
பரவாயில்லை நிலா மேடம். இந்தியா நூறு மடங்கு தேவலாம். இங்கே பல்வலி என்று போனால் முதலில் பிடுங்கிவிட முயல்கிறார்கள். நண்பர்கள் இங்கே வேண்டாம் இந்தியாவுக்கு போய்விடுங்கள் என்கிறார்கள்.
ReplyDeleteஇப்போது வலி தேவலையா? அந்தப் பல்லை சேமித்து வைத்திருக்கலாமே? என்றோ ஒருநாள் நெய்வேலியும்கூட புத்தர் பல்லை சேமித்த இலங்கை நகர்போல் பேர் பெற்றிருக்குமே நிலா?
ReplyDelete@sury Siva
ReplyDeleteவாங்க சார்.
தற்காலிகக் கொப்புளங்களுக்கு பயாப்சி வரை போக வேண்டுமா என்ன?
ஆறாத ரணங்களுக்கும் கட்டிகளுக்கும் உடனடி தீவிர சிகிச்சை அவசியம் தான்.
நாங்கள் பார்த்த பல் மருத்துவர் நோயாளியை ஒவ்வொரு முறை தொடும் போதும் கையுறை அணிந்து உடனுக்குடன் அதை மாற்றிக் கொண்டார். உபகரணங்களையும் உடனுக்குடன் கொதிநீரில் போட்டு அடுத்ததை எடுத்துக் கையாண்டார்.
அவர் சொன்னதுபோலவே கட்டி கரைந்து விட்டதே.
@சிவகுமாரன்
ReplyDeleteவாங்க சிவா... நலம் தானே?
நீங்க சொல்வது போல் வெளி நாடுகளுக்கு இந்தியா எவ்வளவோ மேல். அவர்கள் முதலில் பிடுங்கிவிட நினைப்பது பல்லை மட்டுமல்ல நம் ஒட்டுமொத்த சொத்தையும் தான். கட்டணம் கருதியே நம் ஊருக்கு வருவது.
நம் ஊர் சாமானியர்களுக்கே அரசு பொது மருத்துவமனை தான் பலவற்றுக்கும் நெருங்கத் தக்கதாக உள்ளது.
@மோகன்ஜி
ReplyDeleteசின்ன வயசில் தானாக விழுந்த பல்லை வானத்துக்கு காட்டாமல் ஒளித்து மண்ணில் புதைத்த காலம் மனசில் சுவையாய்...
எங்க ஆசான் சொல்வார், இப்பல்லாம் யாருக்குமே பல் ஆடி தானா விழரதில்லேன்னு...
//ஒருநாள் நெய்வேலியும்கூட புத்தர் பல்லை சேமித்த இலங்கை நகர்போல் //
ஒரு பதிவு தேற்ற முடிந்தது என்றிருந்தால், உங்க கலாய்ப்பு வேறு....
ஒரே மாவட்டத்துக்காரங்க ஒருதாய்ப் பிள்ளைங்க போல... இல்ல ஜி...
வானம் பார்க்க க் கூடாது என விழுந்த பல்லை புதைப்பது, எனக்கும்ஒரு பால்ய நினைவு. என் கதை ஒன்றிலும் போகிறபோக்கில் சொல்லியதுண்டு(கல்யாணியை கடித்த கதை). நாமிருவரும் ஒருதாய் பிள்ளைகள் தான். சந்தேகமில்லை நிலா !
ReplyDeleteபல புதிய வசதிகளுடன், புதிய வேகத்துடன், புதிய தமிழன் திரட்டி சுலபமாக பதிவுகளை இணைக்கலாம் (http://www.tamin.in)
ReplyDelete