6 கருத்துரைகள்
  1. மறத்தலும் மன்னித்தலும்.... என்ற தலைப்பில் தாங்கள் எடுத்துக்காட்டியுள்ள இரு சம்பவங்களும் அருமை.

    எல்லோருமே எதற்கெடுத்தாலும் இப்போது "சாரிங்க...சாரி, சாரி....” எனச் சொல்வது கேட்க நல்லாத்தான் இருக்குது.

    {ஒருவேளை சுடிதாரிலிருந்து சாரிக்குத் திரும்பிட்டாங்களோ! எனவும் நினைக்க வைக்கிறது :) }

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. வெகுநாட்களுக்குப் பிறகான உங்கள் பதிவு மகிழ்வளிக்கிறது நிலாமகள். மன்னிப்பு கேட்கும் வழக்கம் மாறவில்லை என்றாலும் அது மொழிமாறிப்போய்விட்டது என்பது வருத்தமளிக்கிறது. மன்னிச்சிடுங்க என்ற சொல்லில் இருக்கும் உண்மையான வருத்தம் போகிற போக்கில் சாரி சொல்லிப் போகும்போது ஏற்படுவதில்லை என்பது என் எண்ணம்.

    ReplyDelete
  3. @வை.கோபாலகிருஷ்ணன்
    வாங்க சார். நலமா?

    //சுடிதாரிலிருந்து சாரிக்கு//

    நல்லாத்தான் இருக்கும்!

    வார்த்தைகளால் கேட்கும் மன்னிப்பு அவசரமாக 'வேலை முடிந்தால் சரி' என்பது போல் வந்து விடுகிறதோ...

    ReplyDelete
  4. @கீத மஞ்சரி

    வாங்க தோழி... நலம்தானே...

    தன் தவறை உணர்ந்து உண்மையில் வருந்தி மன்னிப்பு கேட்பவர் உத்தமரே. எல்லா மொழியிலும் அர்த்தப்படுவது அதுவே.

    சம்பிரதாய வார்த்தையாகிப் போகாமல் இருக்க வேண்டும். ஆங்கிலம் தான் நாகரீகம் என்ற மனப்பான்மை வேரோடிவிட்டது. சாரி, சுடிதார் ஆன கதையாய்.

    பல பெரிய மனிதர்கள் செய்யத் தகாதவற்றையே செய்தும் துளி குற்ற உணர்வுமற்று சஞ்சரிக்கும் இக்காலத்திலும் எளிய அம் மனிதர்களின் உடனடிப் பிரயோகம் வியப்பளித்தது.

    ReplyDelete
  5. 'சாரி' நிலா! இப்போதான் இந்தப் பதிவை பார்க்கிறேன். மன்னிப்பு கேட்பது மனுஷத்தனம்... மன்னிப்பதோ பெரிய மனுஷத்தனம்! எந்த மொழியில் கேட்டால் என்ன ? கேட்கும் மாண்பே பெரிதல்லவா? என் மனோவியல் பயிற்சி வகுப்புகளில் ஒரு சிக்கலான குழு விளையாட்டு நடத்துவேன். ஒருவரை ஒருவர் ஆக்கிரமிப்பதும், ஒதுக்கிவிட்டு முன்னேறுவதுமாய் அதிகாரிகள் செயல்பட நேரிடும். எத்தனை முறை எங்கெங்கெல்லாம், நன்றி சொல்வதும் மன்னிப்பு கோருவதும் செய்கிறார்கள் என்று கணக்கெடுக்கப் படும். ஆளுமை எப்படி உருவாகிறது என்று பின்னர் விளக்கப் படும். அது சரி !லேட்டா வந்ததுக்கு என்னை மன்னித்தீர்களா?

    ReplyDelete
  6. @மோகன்ஜி

    வாங்க ஜி. வரவேண்டிய இடத்துக்கு வந்துடுவீங்கன்னு தெரியும்.

    ஒரு நாளைக்கு எத்தனை தடவை please, sorry, thank you கேட்கிறோம் என்பதில் அடங்கி விடுகிறதே நம் சுபாவம்.

    மன்னிக்கும்படி எந்தவொரு தவறும் இல்லையே தங்களிடம்... முக்கியப் பட்டவங்க வரும்வரை பந்தி முடிவதில்லை.

    ReplyDelete