"மரம் மாதிரி நிக்கிறியே
மடப்பயலே..."
கோபம் வந்தால் அப்பாவின் வாயிலிருந்து
கட்டாயம் புறப்படும் வசை இது.
பல்லைக் கடித்து கண்களை உருட்டி
தலையில் தலையில் அடித்துக் கொள்வார்.
காலம் போன காலத்தில்
நோய் தின்றது அப்பாவின் வலதுகாலை...
முதலில் சுண்டுவிரல்
தொடர்ந்து
அடியடியாய் அடியடியாய்
அறுத்துதெறிந்து
முடிவில் முழுக்காலும் ஆனது
ஒரு கட்டைக் காலாக.
சிலகாலம் சென்று
உயிர் கழிந்த உடம்பும் கட்டையாக.
எரியூட்டித் திரும்பிய முன்னிரவில்
விளக்கு மாட ஒளியில்
துக்கம் தூண்டியது அனைவருக்கும் ...
அவரது எரியூட்டப்படாத கட்டைக் கால்.
கரும காரியம் முடிந்தவுடன்
கட்டைக் காலில் மண் நிரப்பி
ஒரு பூச்செடி நட்டான் மடப்பயல்
உயிர்த்துச் சிரித்தார் அப்பா.
மடப்பயலே..."
கோபம் வந்தால் அப்பாவின் வாயிலிருந்து
கட்டாயம் புறப்படும் வசை இது.
பல்லைக் கடித்து கண்களை உருட்டி
தலையில் தலையில் அடித்துக் கொள்வார்.
காலம் போன காலத்தில்
நோய் தின்றது அப்பாவின் வலதுகாலை...
முதலில் சுண்டுவிரல்
தொடர்ந்து
அடியடியாய் அடியடியாய்
அறுத்துதெறிந்து
முடிவில் முழுக்காலும் ஆனது
ஒரு கட்டைக் காலாக.
சிலகாலம் சென்று
உயிர் கழிந்த உடம்பும் கட்டையாக.
எரியூட்டித் திரும்பிய முன்னிரவில்
விளக்கு மாட ஒளியில்
துக்கம் தூண்டியது அனைவருக்கும் ...
அவரது எரியூட்டப்படாத கட்டைக் கால்.
கரும காரியம் முடிந்தவுடன்
கட்டைக் காலில் மண் நிரப்பி
ஒரு பூச்செடி நட்டான் மடப்பயல்
உயிர்த்துச் சிரித்தார் அப்பா.
என்றோ ஒரு நாள்
ReplyDeleteஎண்ணக்கூட இல்லாத நாளன்று
என்னிடமிருந்து சென்று விட்ட
என் அப்பா தனை
எனக்கு முன் கொண்டு வந்து நிறுத்தி
உனக்கும் இது மாதிரி நடக்க இருக்கும்போது நீ
உயிர்த்து எழுவாயோ என்ற சுப்பு
உரத்த குரலில்
உங்கள் கவிதை .
சுப்பு தாத்தா.
www.subbuthathacomments.blogspot.com
www.vazhvuneri.blogspot.com
www.subbuthatha72.blogspot.com
அருமை.
ReplyDeleteமனதைத் தொட்டது கவிதை.
என்றோ ஒரு நாள்
ReplyDeleteஎண்ணக்கூட இல்லாத நாளன்று
என்னிடமிருந்து சென்று விட்ட
என் அப்பா தனை
எனக்கு முன் கொண்டு வந்து நிறுத்தி
உனக்கும் இது மாதிரி நடக்க இருக்கும்போது நீ
உயிர்த்து எழுவாயோ என்ற
உரத்த குரலில்
உங்கள் கவிதை .
ஆயிரம் திட்டுக்கள் அவரிடம் கேட்டிருந்தாலும்
அப்பா போல் ஒரு
ஆசிரியர் காண்பேனோ ?
சுப்பு தாத்தா.
(duly corrected )
நிலா ! கட்டைக் காலில் ஒரு பூச்செடி.. மரணம் விதிர்த்த மனதிற்கு ஒரு ஆறுதல் தந்த கவிதைப் புள்ளி. நன்று நிலா..
ReplyDeleteதங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய
ReplyDeleteதீபாவளி வாழ்த்துகள்.
தோழியாரே,
ReplyDeleteநலமா?
ரொம்ப நாளுக்கு அப்புறம் உங்க பக்கத்துக்கு வந்தேன், கண்ணுல லேசா ஈரம் கசிய வச்சுட்டிங்க போங்க. சொன்னது, சொன்ன விதம் ரெண்டுமே யப்பா...
கலக்குங்க
தஞ்சை கண்ணன்
இருப்பதன் அருமை இழப்பிலே தெரியும்.
ReplyDeleteஇது போன்று எனது பதிவொன்று.
http://oomaikkanavugal.blogspot.com/2014/06/blog-post_23.html
நேரமிருக்கப் பாருங்கள்.
தொடர்கிறேன்.
நன்றி
நெய்வேலி நிலைமை பரவாயில்லையா??
ReplyDeleteஇந்தக் கவிதையின் உருவம் மிகவும் அருமை
ReplyDelete@sury Siva
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!
@வெங்கட் நாகராஜ்
ReplyDeleteநன்றி சகோ...
@மோகன்ஜி
ReplyDeleteஉற்சாகம் தரும் கருத்துக்கு நன்றி ஜி.
@மனோ சாமிநாதன்
ReplyDeleteமகிழ்வும் நன்றியும் சகோ...
@kannan
ReplyDeleteநலம்தானே சகோ...
ஆண்டுக்காண்டு வந்தாலும் அடுத்தடுத்த நாள் வந்தாலும் வருகை மகிழ்ச்சியே தரும்.
@ஊமைக் கனவுகள்
ReplyDeleteதாங்கள் குறித்த பக்கத்துக்கு சென்று மீண்டேன் சகோ...
பேச நாவெழவில்லை.
என் உறவு முறை சகோதரர் ஒருவரின் இறப்பு எனக்கொரு கவிதையானது இந்தப் பதிவில்.
என் தந்தையை இழந்த சமயம் கவியெழுதத் தெரியாத பேதை நான்.
தஞ்சை செளந்தர சுகன் தாய் இழப்பின் அஞ்சலிக் கூட்டத்தில் பங்கேற்ற அனுபவம் எனக்கொரு கவிதை எழுத வாய்த்தது.
தங்களுக்கு நேரம் வாய்க்கும் போது வாசிக்கவும்.
http://nilaamagal.blogspot.in/2010/07/blog-post.html#comments
@மோகன்ஜி
ReplyDeleteஇறைதுணை இன்னுமிருக்கிறது. விசாரிப்புக்கு நன்றி ஜி.
@Ajai Sunilkar
ReplyDeleteJoseph
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!