தாம் உதிர்த்த மலர்கள் சூழ
நிற்கும் மரம்போல
என் ஞாபகப் பரப்பெங்கும்
உனது வாசனையே
கூழாங்கல்லின் மழமழப்பும்
பூவிதழின் மெதுமெதுப்புமாக
சிலிர்க்கச் செய்கிறதென்னை
உன்
கைவிரல் நுனி தொடல்.
தன்னை அறியப் பிரயத்தனப்படும்
ஒவ்வொருவருக்கும்
தனித்தனி தெளிவு தரும்
ஜென் கவிதை நீயென்பேன்...
எளிதாய் யாரும் படித்திட உதவும்
கோனார் தமிழுரை நானென்கிறாய்!
”எப்படியிருக்கிறாய்?”
ReplyDeleteஎன்ற தலைப்பும்,
அதற்கான படத்தேர்வும்,
கவிதை வரிகளும்,
அதன் உள் அர்த்தமும்
நல்லாவே இருக்கிறார்கள் என்பதை
நயம்படச் சொல்லியுள்ளன.
படைப்புக்குப் பாராட்டுகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
தாம் உதிர்த்த மலர்கள் சூழ நிற்கும் மரம்,
ReplyDeleteகூழாங்கல்லின் மழமழப்பு தரும் ஒரு செய்தி,
பூவிதழின் மென்மையான் ஸ்பரிசம்.....
விருட்சத்தை அடக்கி வைத்திருக்கும் ஒரு விதையைபோல இருக்கும் ஜென்...
இவைகள் மட்டுமே சொல்லுமே ஒரு பெரிய பாடம்! மற்றும் படம்!
அழகிய காட்சிப்படிமங்கள் நிலா!
ஆகா.
ReplyDeleteதென்றலாய் தடவிச் செல்கிறது இக்கவிதை.