இரவுபகலாக
நடுத் தெருவில் ...
கோடிகளில் வரி ஏய்க்கும்
கொம்பன்கள்
கதகதப்பாய் பஞ்சணையில்.
****************
பாடுபட்டுத் தேடிவந்த
நூறு ரூபாய் நோட்டுகளை
'படக்'கென்று கிழித்துப் போட்ட
ரெண்டு வயசு மகனின்
முதுகு பழுத்தது முதன்முறையாக.
****************
தன் சேமிப்பின் கதியறிய
கேட்கிறான் சிறு பையன்...
"நூறு ரூபாய் நோட்டெல்லாம் செல்லும் தானே?"
'நாளைய செலவுக்கு உண்டியல் இருக்கு'
வரிசை விட்டு வெளியேறுகிறாள் அம்மா.
*******************
அலைந்து திரிந்து ஓய்ந்தவர்களும்
நின்று நின்று கால் கடுத்தவர்களும்
அடுத்த வேளை சோற்றுக்கு உதவாத
கற்றைப் பணத்தை விட்டெறிய முடியாமல்
பட்டினி வயிறு பற்றியெரிய
சட்டென சபிக்கிறார்கள்...
செல்லாக் காசாக தம்மை ஆக்கியவர்களை.
*******************
செல்லாத நோட்டுகள் பற்றி
ReplyDeleteசெல்லும் (சொல்லும்) வரிகள்
அருமை / உண்மை.
காலக் கொடுமை...
ReplyDelete@வை.கோபாலகிருஷ்ணன்
ReplyDeleteஉடனடி வருகை தரும் உற்சாகம்... நன்றி சார்.
@திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteஆம் சகோ. தென்னை மரத்தில் தேள் கொட்ட பனை மரத்துக்கு நெறி கட்டுவதுதான் வலிமிகு வேடிக்கை.
செல்லா காசும் சாமானிய குடிமகனும்
ReplyDeleteசெல்லா கதைகள்
@Manikandan Annamalai
ReplyDeleteவெந்ததைத் தின்று விதி வந்தால் மாள்வதும் சாமான்யனுக்கு விதி போலும்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மணி.
இதைச் சொன்னால் தேசத்துரோகி என்கிறார்கள்
ReplyDeleteஇதைச் சொன்னால் தேசத்துரோகி என்கிறார்கள்
ReplyDelete