குடிக்கலாம் வாங்க

பால் பானங்கள் சில... உறவினர்களோ நண்பர்களோ வீட்டுக்கு வந்தால் உடனடி உபசரிப்பு சூடான பாலில் காபி அல்லது தேநீர் மற்றும் பூஸ்ட் ஹார்லிக்ஸ் போன்ற தயாரிப்புகள். மாறுதலாக சில பானங்களைக் கொடுத்து உபசரிக்கவும், நாம் தினசரி பருகவும் சித்த மருத்துவ முறையில் சில பானங்களைத் தெரிந்து...

' யா தேவி சர்வ பூதேஷூ: சக்தி ரூபேண...

அம்மன் கோயில்கள் அநேக இடங்களில் அநேக சிறப்புகளோடு நீங்க பார்த்திருக்கலாம். முகப்பு வாயிலில் பாரத மாதா சிலையோடு கண்டதுண்டா? உலக மாதாவாகட்டும் பாரத மாதாவாகட்டும்... பராசக்தியின் வேறு உருவம் தானே...! தில்லை அம்பலராம் சிவகாமி சமேத நடராஜர் குடியிருக்கும் சிதம்பரம் நகரிலிருந்து கடலூர் செல்லும் பாதையில்...

சுழல்

       செண்பகவல்லி சீனிப்பயலுக்கு வாக்கப்பட்டு வருசம் ஆறாவுது. எதுக்கு இந்தக் கணக்கெல்லாம்? வானத்துப் பொறை வளர்றதும், தேயறதும் வழக்கம்தானே... ஒரே தினுசாவா இருக்கு மனுச வாழ்வு?! ஏத்தமும் எறக்கமும் எங்கேயும் உள்ளதுதானே... மேல் கீழாவும், கீழ் மேலாவும் ராட்டினம் சுத்துறாப்புல தானே நாம...

எண் சொன்னால் குறள் சொல்ல முடியுமா?

திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி - 2 நான்காம் படி:        தற்போது திருக்குறளின் அதிகாரத் தலைப்புகள் எண்ணுடன் தெரியும். திருக்குறள் முழுவதும் தெரியும். எண் சொன்னால் குறள் சொல்வதற்குரிய படியை இப்போது பார்க்கலாம். இதற்கு மீண்டும் அதிகாரத் தலைப்பு எண்களை எண்ணுடன் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்....

திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி

                 14.03.1948-ல் மயிலாப்பூரில் திருவள்ளுவர் கழகச் சார்பில் நடைபெற்ற திருவள்ளுவர் மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் பேசியதிலிருந்து ...        "100 ரூபாய்க்கும் 200 ரூபாய்க்கும் டெக்ஸ்ட் புத்தகங்கள் வாங்கிப் படித்து மடையர்களாவதை...

பறவை வடிவிலொரு பரமன்...

மனிதக் குரல்களால் சலிப்புறும்போது ஏதேனுமோர் பறவையின் மொழிதேடி உடல்தாண்டி நீளும் செவி தோட்டம் முழுக்க அலைகிறது கூர்மையேறிய அதன் புலனுணர்வில் கிறீச்சிடும் ஒலி கொண்டே பறவையை அனுமானிக்கும் நுட்பம் கைவரப்பெற்ற கர்வத்தை பங்கம் கொள்ள வைக்கிறது இதுவரை கேட்டறியாதொரு புதுப் புள்ளொலியின் குழைவு. செவி தொடர்ந்து வெளியேறிய உடம்பும் மனசும் தோட்டத்து மரக்கிளைகளை- செறிந்திருக்கும் இலைகளை- துழாவத் தொடங்கியது துள்ளலோடு. பரவசம்; பரமானந்தம்; பலநாள் புத்துணர்வூட்டுமாம் பரம்பொருளறிதல்! தான் கண்ட விரல் அகல முழம் நீள வெள்ளை வால் கருந்தலைக் குருவி எங்கிருந்து எங்கு போகிறதென இணையம் வழித் தேடித் தெளிந்த என் குதூகலமோ கடவுளைக் கண்டதைப் போல். இன்னும் இன்னும் எத்தனை பிரத்யட்சம் இருக்கிறதோ இறை வசம்!!...

மரபின் மைந்தன்: வங்கம் வழங்கிய ஞானஒளி

(ஜூலை-4 சுவாமி விவேகானந்தர் நினைவு நாள்) எல்லாத் திசைகளும் என்வீடு-எனஇங்கே வாழ்ந்தவர்யார்?நல்லார் அனைவரும் என்னோடு-எனநெஞ்சு நிமிர்ந்தவர்யார்?நில்லா நதிபோல் விசையோடு-அடநாளும் நடந்தவர் யார்?கல்லார் நாடெனும் கறையகற்ற-சுடர்க்கணையாய்ப் பாய்ந்தவர்யார் எங்கள் கிழக்கில் எழுந்தகதிர்-புகழ்ஏந்திடும் மேல்திசையில்பொங்கும் எரிமலை போலெழுந்தே-இருள்போக்கிடும் நம்முயிரில்வங்கம் வழங்கிய ஞானஒளி-நம்விவேகானந்த ஒளிசிங்கப் பிடரி சிலிர்த்தபடி-அவர்சென்றது ஞானவழி பூமியை உலுக்கும் புயலாக-அவர்புறப்பட்ட வேகமென்னசாமி உனக்குள்...