பூனைக்கு மணி கட்டு
பூனைக்கு மணி கட்ட
முதலில் அதை நேசிக்க வேண்டும்
அல்லது பாவனையாவது செய்யலாம்
இப்போது அது
பிராண்டுவது சீறுவதை விட்டு
வெதுவெதுப்பான உங்கள்
மடிசுகத்திலும் கைவருடலிலும்
சொக்கி கிறங்கியிருக்கும்
மணியைக் கோர்க்க
நீங்கள் தேர்ந்தெடுக்கும் கயிறு
மஞ்சள் வண்ணத்தில் இருப்பது நலம்
மணியின் அளவை
பூனையின் கழுத்தை விட
உலோகமும்
உங்கள் வாங்கும் சக்தியும்
தீர்மானிக்கும்
மணி கட்டப் பட்டதும்
தன் உடலை வளைத்தும் நெளிந்தும்
ஒவ்வொரு அசைவிற்கும்
ஒவ்வொரு விதமாய்
ஒலிக்கும் மணியோசையில்
மகிழ்கிறது பூனை.
-'தொடுவானமற்ற கடல்' சக்தி அருளானந்தம்
குறிப்பு:
இதில் பூனை என்றது பெண்ணை.... மணி என்றது அவளின் பொன்விலங்கை.
அருமை.
ReplyDeleteஇங்கு எல்லோருமே பூனைக்கு மணி கட்டிக் கொண்டே இருப்பார்கள். மணிக்கு ஏங்கும் பூனைகள் இருக்கும் வரை.
வருகைக்கு மகிழ்ச்சி சிவா...
Deleteகால் சங்கிலிக்கு கட்டுப்படும் யானைகள் போல் மணிக்கு ஏங்கும் பூனைகள் ... பழக்கத்துக்கு அடிமை! விட்டு விடுதலை ஆவது அவரவர் பாடு.
அடடா.... அருமையா இருக்கு கவிதை....பூனைக்குட்டிக்கும் அது என்ன அருமையா பொருந்திப் போகுது பாருக்களேன்....
ReplyDeleteநீங்கள் குறிப்பு போட்டிராவிட்டால் அது பெண்ணுக்கென்று சிந்தித்திருக்க மாட்டேன்...
ஒரு கல்லில இரண்டு மாங்காய்....
புதுவருஷ வாழ்த்துக்களும் நிலா....
கவிஞர் சக்தி அருளானந்தத்தின் குறியீடு பெண்ணென்பதாய் இருக்கும் என்பது என் புரிதல்.
Deleteவாழ்த்துக்கு நன்றி தோழி. தங்களுக்கும் மென்மேலும் மகிழ்வும் நலமும் பெருக எல்லாம் வல்ல இறையருள் துணை செய்யட்டும்!
பொன்விலங்கு.. அருமை.
ReplyDeleteபாரம்பர்யமான ஒன்றை நாசூக்காக நையாண்டி செய்திருக்கிறார் சக்தி .
Delete