பதம்



       இந்த தடவை அதிரசத்துக்கு பாகு வைக்கும் போது  உடனிருந்த மகளிடம் பிசுக்கு பதம், கம்பி பதம், ரெண்டு கம்பி பதம்  எல்லாம் காட்டி, எது எதற்கு எப்படி பாகு வைக்க வேண்டுமென்று விளக்கம் சொன்னேன்.
     தோழி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடையில் வாங்கிய அதிரச மாவு கெட்டியாக இருப்பதாகவும் எளிதாக தட்ட என்ன செய்யலாமென்றார்.             கொஞ்சம்  பால் தெளித்து பிசைந்து தட்டிப்  பாருங்க சரியா வரலைன்னா தோசை மாவு பதத்துக்கு கரைச்சு குழி பணியார சட்டியில் ஊற்றி அப்பம் போல் எடுத்திடலாம் என யோசனை சொன்னேன்.
      மறுநாள் பேசிய போது சொன்னார்...
     அதிரசமாவே தட்டிட்டேன்.
     ஆனா ... பதம் புரிபடும் போது மாவு தீர்ந்துடுச்சு.
அவ்வளவு தான் என்றார்.
      அதிரசம் செய்யப் பழக  இன்னொரு பாக்கெட் மாவு கிடைக்கும். நம் அந்திமத்தில் புரிபடும் வாழ்வை நீட்டிக்க ....?!





1 கருத்துரைகள்
  1. //அதிரசம் செய்யப் பழக இன்னொரு பாக்கெட் மாவு கிடைக்கும். நம் அந்திமத்தில் புரிபடும் வாழ்வை நீட்டிக்க ....?!//

    நல்ல கேள்வி.

    ReplyDelete