விஷ்ணுபுரமும் சாகித்ய அகாதெமியும்...

நான் இன்று ஒரு சுடுமண் இருக்காஞ் சட்டி விளக்கு.
நான் இன்று காய்த்துப் போன உள்ளங்கையுடன் ஒரு ஆதி மனுஷி 
திரித்த இலவம் பஞ்சுத் திரி.
நான் இன்று துயரிடைக் கசிந்த ஆனந்தத்தின் தைலம்.
நான் இன்று யாரின் அகல் தீயோ ஏற்றிய சுடர்.
நான் இன்று எல்லாச் சூறையையும் எதிர்கொண்ட ஒளித் தொடர்.
நான் இன்றைய கருக்கலில் எதிர்ப்படும் இன்னொரு திரியிடம் 
என்னை ஒப்படைத்து விடுவேன்.
******
என் தந்தை தச்சனில்லை.
எழுதுகிறவன்.
எனக்கு மரச்சிலுவை அல்ல
காகிதச் சிலுவை.
உயிர்த்தெழுதல் மூன்றாம் நாளல்ல
அன்றாடம்.
 - வண்ணதாசன் 
எனக்குத் தெரியும்...
இபபோதும்  எங்கோ, யாரோ 
வண்ணதாசனைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்கள்!
எம் ஆதர்ச எழுத்தாசானை  வாழ்த்துவதும் வணங்குவதும் இத்தருணப் பெருமிதம்! 
அவர் விருதுகள்  சூழ நிற்கும் இந்த டிசம்பர் உச்சி குளிர்விக்கிறது எம்மை! 
5 கருத்துரைகள்
  1. இந்த ஆண்டு 2016 சாஹித்ய அகாடமி விருதுக்குத் தேர்வாகியுள்ள அவருக்கு என் பாராட்டுகள் + வாழ்த்துகள்.

    இந்த மகிழ்ச்சியை இங்கு சற்றே வித்யாசமான பாணியில் பகிர்ந்து கொண்டுள்ள உங்களுக்கும் என் பாராட்டுகள் + வாழ்த்துகள் + நன்றிகள்.

    ReplyDelete
  2. நம் வாழ்வை தன் எழுத்தாலும் எண்ணங்களாலும் ரசனையாலும் வாழ்வியல் பாங்காலும் உயிர்ப்பிக்கும் வண்ணதாசன் ஐயா அவர்களுக்கு நம் மனங்கனிந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. ஆம். நாமே விருது வாங்கியதைப் போன்ற ஒரு சந்தோசம். அது தங்களிடம் அப்பட்டமாய் வெளிப்படுகிறது

    ReplyDelete