அடி பொலி!

இருக்கையில் அமர்ந்திருந்த கொசு திடுமென்ற மின்விசிறி சுழற்சியால் எழுந்து படபடத்து சுழல்கிறது மறுபடி நினைவூட்டப்பட்ட மறந்துபோனதொரு வலிமிகு பொழுதைப் போல ரீங்காரமிட்டபடி ரத்தம் முழுக்க உறிஞ்சியெடுக்கும் தீராக்குரோதமுடன் சுழலும் இக்கொசுவுக்கு சற்றும் சளைத்ததில்லை அந்நினைவுகளின் கொக்கரிப்பு நசுக்கியெறி உன் வலிக்கொசுவை. மகிழ்ச்சி! ...

எல்லா மரமும் போதிமரமாக...

புத்தரின் புன்னகையும் அவர் பெற்ற ஞானமும் அவரை அறிந்தவர்களுக்கொரு பிரமிப்பைத் தரத்தக்கது. மூடிய கண்களின் தியான அமைதியும் விரிந்த இதழ்களின் ஓரப் புள்ளி கிளர்த்தும் தத்துவ விசாரமும் விசாலமான அறிவின் அறிவிப்பாக தொங்கிய காதுகளும் ஆயிரம் இதழ்கொண்ட தாமரையாக விரிந்த சகஸ்ரகாரச் சக்கரத்தின் புற அடையாளம்...

நாவில் நிலைத்திடும் ருசி

               பல்வேறு சமையல் குறிப்புகளையும் வீட்டுப் பராமரிப்பு முறைகளையும் மாத சஞ்சிகைகளில் எனது திருமண வாழ்வின் 23 ஆண்டுகாலமாக ஒரு பார்வையில் கடந்ததுண்டு. கண்ணில் பட்டதில் கருத்தில் நின்றது அடுத்த தடவை அப்பதார்த்தங்கள் செய்யும் போது நினைவில் மின்னிக் கையாண்டு பார்த்ததும் உண்டு. இணையத்தின் வலைப்பூ...