செடி காப்பாத்திடுச்சு...!!

அனைவருக்குமான கொண்டாட்டமாக ஆங்கிலப் புத்தாண்டு துவக்கம்! ஆன்மீக அன்பர்களுக்கோ வைகுண்ட ஏகாதசி! எங்க வீடருகே கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீநிவாசப் பெருமாள் வெகு உற்சாகமாக இருக்கிறார். புல் டோசர் வைத்து நிரவப்பட்ட தெருவின் புதுப் பொலிவு. புது வண்ணத்தில் கோயில் சுவர். தெரு வியாபாரிகள் காலையில் இருந்தே தத்தமது...

'விளையும் பயிர்'

சமீபத்தில் ஊருக்குப் போயிருந்தேன். ஊரென்றால் பிறந்த ஊர். குறியாமங்கலம். அரசர்கள் காலத்தில் அந்தணர்களுக்கு தானமளிக்கப்பட்ட வகையில் (சதுர்வேதி மங்கலம்) 'குறிக்கப் படாமலே விடப்பட்ட ஊர்' என்ற பொருள் பொதிந்ததோ பெயர்க்காரணம்.... தெரியவில்லை. புவனகிரியிலிருந்து ஐயப்பன் கோயிலை வளைந்து நெளிந்து சென்றால் இடைப்படும் பெரிய வாய்க்காலைப் பிடித்துக்...

பொரி

ஒவ்வொரு பண்டிகைக்கும் நிவேதனம் செய்து உண்ண வேண்டியவை என்றொரு பட்டியல் நம்மிடம் உண்டு. இன்றைய கார்த்திகை தீபத் திருவிழாவில் பிரதான இடம் வகிக்கிறது அவல் பொரி. அகல் விளக்குகளும் வண்ணக் கோல மாவுப் பொடிகளும் தெருவெங்கும் கூவிச் செல்லும் சிறு தெருவியாபாரிகள் ஓய்வெடுக்க இரவாகிவிடும். கையிருப்பை...