மரம் வளர்த்த மனிதனின் கதை
என்ற தலைப்பில் நூலாக வெளியிடும் ஹாரிசன் மீடியா (4/1320, காந்தி நகர், தும்பல் (அஞ்சல்), சேலம்-636 114, தொடர்பு எண்: 9787143550, மின்னஞ்சல்: anto_slm@yahoo.com) பாராட்டுக்குரியது.
-வளரும்...
ழான் கியானோ எழுதிய இந்த பிரெஞ்சு சிறுகதை (நூல் வெளியீடு: 1953) அனிமேஷன் படமாக்கப் பட்டு உலகெங்கும் பார்க்கப் படுகிறது.
இந்த படத்தின் நாயகர் எல்சியர்டு பூபியர். ஒருவேளை கற்பனையாகப் படைக்கப்பட்ட பாத்திரமாகவுமிருக்கலாம். ஆனாலும் ஒரு உயிரோட்டமுள்ள பாத்திரப்படைப்பாக உருத்தெரிந்தது மரம் நட்டு வளர்ப்பதையே தம் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டதால் தான். கனடியன் ஒலிபரப்புக் கழகம் ‘சொசைட்டி ரேடியோ கனடா' என்ற அமைப்பின் கீழ் 1987-ம் ஆண்டு 30 நிமிடங்கள் ஓடத்தக்க அனிமேஷன் படமாக (The Man who Planted Trees) வெளியிட்டது.
வாசிப்பவர்களை யோசிக்கச் செய்யத் தக்க மனதுக்கு நெருக்கமான வார்த்தைகளுடன் இச்சிறுகதையை பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்தில்-ழான் ராபர்ட்ஸ் மொழிபெயர்க்க, ஆங்கிலத்திலிருந்து தமிழில்
மரம் வளர்த்த மனிதனின் கதை
என்ற தலைப்பில் நூலாக வெளியிடும் ஹாரிசன் மீடியா (4/1320, காந்தி நகர், தும்பல் (அஞ்சல்), சேலம்-636 114, தொடர்பு எண்: 9787143550, மின்னஞ்சல்: anto_slm@yahoo.com) பாராட்டுக்குரியது.
தமிழில் மொழிபெயர்த்த
திரு.இதயசீலன் மற்றும்
திரு.ஆண்ட்டோ
போற்றுதலுக்குரியோர்.
திரு.இதயசீலன் மற்றும்
திரு.ஆண்ட்டோ
போற்றுதலுக்குரியோர்.
இனி கதை...
பல ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை ஆல்ப்ஸ் மலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த அறிமுகமுமில்லாத ஒரு சிகரத்தில் நடையுலா சென்றேன். பழமையான சிகரங்கள் சரிந்து இறங்கும் பாறைகள் கொண்ட மலைப்பகுதிகள் அது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 முதல் 1300 மீட்டர்கள் உயரமுள்ளது. நீண்ட அடர்த்தியாக மானாவாரியாக வாசனைமிகு லாவண்டர் செடிகள் வளர்ந்து கிடந்த பகுதியது.
மூன்று நாள் மலையேற்றத்தின் பின் நான் ஒரு தரிசு நிலப் பகுதியில் நின்றேன். நான் நடந்து சென்ற அந்தப் பாதை மலைமேல் விரிந்து பர்ந்து கிடந்த ஒரு நிலப் பரப்பை நோக்கிச் சென்றது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலப்பகுதி அது.
அன்றைய இரவைக் கழிக்க நான் அங்கு கூடாரமிட்டுத் தங்கினேன். அதற்கு பக்கத்தில் தான் ஆள் அரவமற்ற கிராமமொன்று இருந்தது.
அன்றைய தினத்துக்கு முந்தைய நாள் என்னிடமிருந்த குடிநீர் தீர்ந்து போயிருந்தது. கொத்து கொத்தாக வீடுகள் இடிந்து போயிருந்தன. அவை பழைய குளவிக்கூட்டின் சாயலை ஒத்திருந்தன. அந்தப் பகுதியில் எங்காவது ஒரு நீரூற்றோ கிணறோ இருக்குமென்று நம்பினேன். நான் நினைத்தது போல் அங்கு ஒரு ஊற்று இருந்தது. ஆனால் நீர் தான் இல்லை.
கூரையில்லாத வீடுகள் காற்றாலும் மழையாலும் அழிக்கப்பட்டிருந்தன. மாதாக்கோயிலும் மணிக்கூண்டும் சிதிலமடைந்து கிடந்தன. அந்தப் பகுதி ஒரு காலத்தில் மனிதர்கள் வாழ்ந்த பகுதியாகக் காட்சியளித்தது. ஆனால் தற்போது உயிர் நடமாட்டம் ஏதுமில்லாமலிருந்தது.
அது ஒரு ஜுன் மாதத்தின் மேகமற்ற வெப்பமான நாள். உயர்ந்த காலியான அந்த மேட்டு நிலங்களில் தடையற்ற வேகமான காற்று காலியான வீடுகளின் உள் நுழைந்து, கடும் உறுமலுடன் வெளிவந்தது.
தான் வேட்டையாடிய உணவை தின்று கொண்டிருக்கையில் மற்றொரு மிருகம் பங்கு கேட்க வந்தால் எப்படி உறுமுமோ அப்படி உறுமியது காற்று. இதனால் என் கூடாரத்தை வேறிடத்துக்கு மாற்ற வேண்டியதாயிற்று.
மீண்டும் ஐந்து மணி நேரம் தொடர்ந்து நடந்தேன். இன்னும் குடிநீர் கிடைக்கவில்லை. எங்காவது கிடைக்கும் என்ற நம்பிக்கையுமில்லை. சென்ற எல்லா இடங்களிலும் அதே வறட்சி... தகிப்பு!
காய்ந்து சருகாகிப் போன புற்களும் புதர்களும் எங்கும் காணப்பட்டன.
அங்கு தொலைதூரத்தில் ஏதோ ஒன்று கண்ணில் தென்பட்டது. மெல்லியதான கருமையான மரக்குச்சி போல் ஒரு உருவம் நின்று கொண்டிருந்தது. அந்த உருவத்தை நெருங்கிச் சென்றேன். ஒரு இடையர் அவர்.
அவருக்கருகில் 30 செம்மறியாடுகள் வெக்கையான அந்த வெட்டவெளியில் படுத்துக் கிடந்தன. அவரை நெருங்கியதும் தன்னிடமிருந்த நீர்க்குடுவையை எனக்குக் குடிக்கக் கொடுத்தார். பின், தனது ஆட்டுப்பட்டிக்கு என்னை அழைத்துச் சென்றார்.
இயற்கையாக தோண்டப்பட்ட அங்கிருந்த கிணற்றிலிருந்து எனக்கும், ஆடுகளுக்கும் நீரை இறைத்துக் கொடுத்தார். அருமையான குளிர்ந்த குடிநீர். அவர் மிகவும் குறைவாகவே பேசினார்.
தன்னந்தனியாக வாழ்வோர் பலபேர் இப்படித்தான் கொஞ்சமாகப் பேசுவார்கள். தன்னிருப்பைப் பற்றிய நிச்சயத் தன்மையும் தன் வேலையைப் பற்றிய தெளிவும் அவரிடம் இருந்தன.
அந்த சிகரத்தின் வெட்ட வெளிகளில் கண்ணில் பட்டதெல்லாம் எனக்கு அதிசயமாகத் தோன்றியது.
அவர் குடிசையில் அல்ல. நல்ல வீட்டில் குடியிருந்தார். அது கற்களால் கட்டப்பட்ட செளகரியமான வீடு. அவர் கைப்படப் பார்த்துப் பார்த்துக் கட்டியிருந்தது தெரிந்தது.
ஒருமுறை இடிபாடுகளைச் சரிசெய்திருப்பதும் தெர்¢ந்தது. அவர் வீட்டுக் கூரை இறுக்கமாகவும் உறுதியாகவும் இருந்தது. அந்தக் கூரை மீது காற்று மோதும் போது கடற்கரையில் எழும் அலையின் ஓசையைப் போன்றிருந்தது.
வீட்டின் உள்ளே என்னை அழைத்துச் சென்றார். பாத்திரங்கள் கழுவப்பட்டு, தரை துடைக்கப்பட்டு திரி விளக்குகளில் எண்ணெய் நிரப்பப்பட்டு, தூய்மையும் ஒழுங்கும் ஒருசேர இருந்தன.
அவரது ‘சூப்' அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்தது.
அவரைக் கவனித்தேன். பிசிறில்லாமல் மழிக்கப்பட்ட முகம். ஆடைகள் தூய்மையாகவும், பொத்தான்கள் சரியாகத் தைக்கப் பட்டும் அவரது நாகரீக மேனியைப் பறைசாற்றின.
அவர் தனது சூப்பை என்னுடன் பகிர்ந்து கொண்டார். நான் அவரிடம் என் புகையிலைப் பையைக் கொடுத்தேன். தான் புகைப்பதில்லை என்று தவிர்த்து விட்டார்.
அவரது நாயும் அவரைப் போலவே அமைதியாக இருந்தது. என்னிடம் நட்பாகப் பழகியது. அன்றிரவு அவர் வீட்டில் நான் தங்குவதற்குச் சம்மதித்தார்.
அருகிலுள்ள கிராமம் இரண்டு நாள் நடைப் பயண தூரத்திலிருந்தது. அந்தப் பகுதியிலிருந்த கிராமங்கள் எண்ணிக்கையில் குறைவாகவும், தொலை தூரத்திலும் இடைவெளி விட்டும் இருந்தன.
அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை ஒருவாறு நான் புரிந்து கொண்டேன்.
நான்கு அல்லது ஐந்து குடும்பங்கள் அந்த மேட்டு நிலப்பகுதியின் சரிவுகளில் குடியிருந்தன.
அவர்களிடம் மரத்திலான தள்ளு வண்டி இர்ந்தது. அவர்கள் மரங்களை வெட்டி எரித்து கரித்துண்டுகள் தயாரிப்பவர்கள்.
ஆனாலும் வாழ்க்கையில் ஏழ்மை நிரம்பியவர்கள். கடும் கோடையிலும், மோசமான குளிரிலும் நெருக்கமாக அடைந்து கிடப்பார்கள். வாழ்க்கைக்கான போராட்டத்திலும் தனிமையாலும் முரடர்களாக மாறிப் போயிருந்தார்கள்.
எதிலும் நிறைவில்லை. நிம்மதியில்லை. இதிலிருந்து தப்பிக்க அவர்கள் ஏக்கத்துடன் முயற்சிப்பார்கள். அடைய முடியாத லட்சியம்; நிறைவேறாத கனவுகள்.
முடிவில்லாமல் அவர்கள் மரக்கரி மூட்டைகளுடன் நகருக்குச் சென்று விற்றுத் திரும்புவார்கள்.
தொடர்ச்சியான வறுமையின் தாக்கத்தால் மிகவும் நல்லொழுக்க சீலர்களிடம் கூட குணங்கள் விரிசல் கண்டுவிடும்.
உழைக்கும் பெண்கள் பல்வேறு பிரச்சினைகளால் நிம்மதியற்று குமைந்து கொண்டிருப்பார்கள்.
எதிலும் எல்லா இடங்களிலும் கோவிலில் கூட உட்கார அமர்விடங்களைப் பிடிப்பதில் போட்டி தான்.
நல்லவர்களாக இருப்பதிலும் கெட்டவர்களாக இருப்பதிலும் கடும் போட்டி இருக்கும். நல்லவை தீயவைக்கான பெரும் போர் இடைவிடாது தொடர்ந்தபடி இருக்கும்.
தற்கொலைகளும் மன நோய்களும் அதனால் கொலைகளும் நடந்தபடி இருக்கும்.
இவைகளின் இடையே தொடர்ந்து வீசும் அந்தக் காற்று நரம்புகளைச் சுண்டி இழுக்கும்.
புகைப்பிடிக்காத அந்த ஆட்டு இடையர் ஒரு துணிப்பையை எடுத்து வந்தார். மேசையில் வைத்து அதைப் பிரித்தார்.
-வளரும்...
'உலகம் நாளை
உடைந்து சிதறுமென
அறிய நேர்ந்தாலும் நடுவேன் என்
ஆப்பிள் மரத்தை.'
-Martin Luther
('Even if I knew that tomorrow the world would
go to pieces, I would still plant my apple tree.')
நன்றி: திரு கே.பி. ஜனா...http://kbjana.blogspot.com/2013/11/22.html
மிகவும் பயனுள்ள பதிவு. சுவாரஸ்யமாக உள்ளது. தொடரட்டும்.
ReplyDeleteஅவசியமான கருத்துடன்
ReplyDeleteஅற்புதமாகச் சொல்லிப்போகும் பதிவு
அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
கருத்துகள் மிகவும் அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteசுவாரஸ்யமான கதை ..!
ReplyDeleteமரம் வளர்த்த மனிதனின் கதை மிகவும் சுவாரசியம். யாருமற்ற மேட்டுநிலத்தில் தன்னந்தனியனாய் மாட்டிக்கொண்டவனின் அனுபவமும் எண்ணக்கோவைகளும் மனம் ஈர்க்கின்றன. ஏழ்மையின் சங்கிலி விளைவுகள் மனம் கனக்கச்செய்கின்றன. தொடரக் காத்திருக்கிறேன்.
ReplyDelete