படைத்தவனுக்கில்லை பாரபட்சம்

கோயில் கருவறையில்
தேய்த்தும் குறையாத
எண்ணெய் பிசுக்கு
பளபளக்க...

ஏழைக் கருவறையில்
வெளிவந்த பலருக்கு
வறண்டு சிக்கேறிய கேசம்.

பால், தயிர், பன்னீர், இளநீருடன்
தேன், பழங்கள், திரவியப் பொடியுடனும்
தடபுடலாய் அபிசேக ஆராதனைகள்
கோயில் சிலைகளுக்கு...

வாசலுக்கு வெளியே
வருவோரிடம் கையேந்தி
பிரசாதத்தில் உயிர் வளர்க்கும்
பல பிறவிகள்.

கைகூப்பி தொழுவோரிடம்
கணக்கற்ற பிரார்த்தனைகள்
இதைத் தந்தால்
இதைத் தருவேனென்ற
பலப்பல ஒப்பந்தங்கள்

எதைப் பெற்றும்
திருப்தியடையா
அரைகுறைகள்.

கால் வைக்கும் இடமெல்லாம்
பளிங்குக் கல் பதித்த கோயில்களை
மகிழுந்தில் சென்று தரிசிக்கும்
பயணங்களில்
இருக்கையில் இருந்தபடி
வணங்கிச் செல்பவருக்கும்
அபயமளிக்கும்
பாதையோர சிறுதெய்வங்கள்...

தலைச்சுமையை இறக்காமல்
தாடையில் போட்டுக் கொண்டு
‘காப்பாத்துடா என்னைய்யா'
என்றபடி கடக்கும்
அன்றாடங்காய்ச்சிகளையும்
கைவிடுவதேயில்லை.

ந‌ன்றி: 'காக்கை சிற‌கினிலே' மே'12
11 கருத்துரைகள்
  1. எப்பிடித்தான் சொன்னாலும் ....!

    ReplyDelete
  2. ஏழைக் கருவறையில்
    வெளிவந்த பலருக்கு
    வறண்டு சிக்கேறிய கேசம்.

    Nice.

    ReplyDelete
  3. எதைப் பெற்றும்
    திருப்தியடையா
    அரைகுறைகள்.
    .....SUOERB WORDS!

    ReplyDelete
  4. எதைப் பெற்றும்
    திருப்தியடையா
    அரைகுறைகள்.


    கடவுள் கைவிடுவதேயில்லை.

    ReplyDelete
  5. நல்ல கவிதை... காக்கைச்சிறகினிலே படித்த போதே உங்களைப் பாராட்டியிருக்க வேண்டும்.... பாராட்டுக்கள் நிலா.... ஆனாலும் எனக்கென்னவோ அத்தனை அபிசேகங்களையும் வாங்கிக் கொண்டு வெளியே நடக்கும் அநியாயங்களைக் கண்டும் காணாமலும் உள்ளேயே சொகுசாக அமர்ந்திருக்கும் கடவுள் மீது கோபமாய்த் தான் வருகிறது நிலா.....

    ReplyDelete
  6. \\எதைப் பெற்றும்
    திருப்தியடையா
    அரைகுறைகள்.\\
    ஆனாலும்
    கைவிடுவதேயில்லை.

    அருமை.

    ReplyDelete
  7. கிருஷ்ணப்ரியாவின் புகழ்ப் பெற்ற அபிசேக கவிதை ஞாபகம் வருகிறது.கோபம் எனக்கும் கடவுள்மேல்.

    ReplyDelete
  8. நல்ல கவிதை நிலா! 'திருப்தி அடையா அரைகுறைகள்' பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete