வாழ்த்தலாம் வாங்க!



அவர்களுடைய பணமும் ...

ஒட்டுத் துணியும் நழுவுகின்ற
சுரணையின்றிப்
பசியில் புலம்பியபடி
தெருவோரம் புரள்கிறாள்
உடல் முழுவதும்
புண்களைச் சுமந்த
மனநிலை தவறிய பெண்ணொருத்தி ....!

வீங்கிய சோகை முகத்திலும்
சின்னப் புன்னகை தேக்கி
வருவோர் போவோரிடம்
கையேந்துகிறாள்
இனிப்புக் கடை வாசலில்
அந்த முதியவள் ...!

தண்ணீரைக் குடித்தே
பெருத்த வயிற்றுடன்
பெரியவள் ஒருத்தியின்
இடுப்பில் அமர்ந்தபடி
அரை மயக்கத்திலேயே
அம்மா, அய்யா என்கிறது
ஓர் இளங்குருத்து ...!

எண்ணெய் காணாத
பரட்டைத் தலையும்
எங்கும் கிழிந்த
அழுக்குச் சட்டையுமாய்ப்
பசியோடு திரிகிறார்கள்
பால் மணம் மாறாத
பச்சிளம் பிள்ளைகள் ...!

இவர்களில்
யாருக்குமே தெரியவில்லை ....
ஆயிரம் இலட்சம் கோடிகளிலும்
அள்ளி வீசப்படும் இலவசங்களிலும்
தம் வாழ்நாள் பசிக்குமான
பணமும் சேர்ந்துதான் இருக்கிறதென்று...

                               -கிருஷ்ணப்ரியா
                               http://krishnapriyakavithai.blogspot.in/

கிருஷ்ணப்ரியாவின்

           "வெட்கத்தில் நனைகின்ற ..."

கவிதைத் தொகுப்பு வெளியீடு ...

05.05.2012- மாலை 6 மணிக்கு...

நிகழ்வு: சுகன் 300 வெள்ளி விழா

இடம்:

       ரெட் கிராஸ் கூட்ட அரங்கு
       மேம்பாலம் ,
       மருத்துவக் கல்லுரி சாலை ,
       தஞ்சாவூர் .

7 கருத்துரைகள்
  1. மனத்தை உலுக்கிய கவிதை. பகிர்வுக்கு நன்றி நிலாமகள்.

    தஞ்சை கவிதை கிருஷ்ணப்ரியாவுக்கு மனமார்ந்த வாழ்த்தும் பாராட்டும். கவிதைத் தொகுப்பு வெளியீடு சிறப்புற நடைபெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. கவிதைத் தொகுப்பு வெளியீடு ..சிறப்புற நடைபெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. கவிதைத் தொகுப்பு வெளியீடு ..சிறப்புற நடைபெற வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. கவிப் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    94 வது நண்பராக உங்களைத் தொடர்கிறேன்



    சென்னை சிங்காரச் சென்னை

    ReplyDelete
  5. அன்புள்ள நிலாமகள்...


    மே மாத காக்கைச்சிறகினிலே இதழில் கவிதைகள் வாசித்தேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளத்தில். மாறுபட்ட பொருண்மை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. கவிஞர் கிருஷ்ணப்பிரியாவிற்கு.. எதிர்காலத்தில கவிதையுலகில் நல்ல நம்பிக்கையுடனான சமுகவெளிப்பாட்டுடன் ஒரு வெளிச்சம் காத்துக்கிடக்கிறது. உங்கள் பதிவு வழியாகவும் கவிஞருக்கு வர்ழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. இங்கே தாமதமாக வர நேர்ந்ததற்கு வருத்தமாக இருக்கிறது.
    கவிதை மிக அருமை நிலாமகள்!
    கிருஷ்ணப்ரியாவின் கவிதை வெளியீட்டு விழா பற்றி அறிய மகிழ்வாக இருந்தது. அவருக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள். கவிதை வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தேறியிருக்குமென்று நினைக்கிறேன்.

    ReplyDelete