கேள்விகளால் சூழ்ந்தவன் பதிலற்று போனபோது...

‘தெய்வத்திண்டே கண்ணு' -என்.பி.முகமது

      குழந்தைமை நிறைந்த கேள்விகளும், அவற்றுக்கான தேடல்களுமாய் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன் அஹம்மது. எரியும் சருகுகளுக்கும், உதிரும் இலைகளுக்கும், அறுபடும் கோழிகளுக்கும், இரயில் கடக்கும் போது கடபட, தடபட என்று அழும் பாலத்துக்கும் இரக்கப்பட்டு உருகி நிற்பவன்.
      கோழிக்கோட்டிலிருந்து பரப்பனங்காடியிலிருக்கும் உறவினர் வீட்டில் வந்து தங்குகிறான். முன்பொரு முறை ஆயிசா மாமி இறந்தபோது அவனிங்கு வந்ததுண்டு. அச்சமயம் நல்ல மனநிலையிலிருந்த, தனக்கு மிட்டாயெல்லாம் வாங்கித் தந்து தோளில் தூக்கி வந்த, மொய்யம்மதாலி அண்ணன் ஆயிசா மாமி மகன். இப்போது சங்கிலியால் கட்டப்பட்டு நெடும்புரையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறான். பூதங்கள் விரும்பிய தோட்டத்துக் காளானைப் பறித்து உண்டு புத்தி பேதலித்ததால் அவனிப்படி ஆனதாக  தன்னொத்த விளையாட்டுத் தோழி, மரியம் மாமி மகள் உம்மு மூலம் அறிகிறான்.
மூதாதையர் புதைத்து வைத்த பெருஞ்செல்வத்துக்குக் காவலாய் நாரகம்புர தறவாட்டில்(அவனிருக்கும் வீடு) பூதங்களும் பாம்புகளும் உலவுவதாகவும் கேள்விப்படுகிறான். பின் அவ்வூரின் அரபி பாடசாலையில் சேர்க்கப்படுகிறான். நபிகள் பிறந்த ரபீஉல் அவ்வல் மாதத்தில் நேர்ச்சைக்காக மவுல்விகளுக்குத் தயாரான இரவுணவை கொட்டிக் கவிழ்த்த மொய்யம்மதாலியின் சேட்டையில் சினந்து பெரியப்பா அடித்த அடியில் மறுநாள் அவன் இறந்து போவதால் நெடும்புரை வெறிச்சோடிப்போகிறது. உம்மு திருமணமாகி கொச்சி சென்றுவிடுகிறாள்.
      மந்திர தந்திரங்களால் தறவாட்டினை சூழ்ந்திருக்கும் பூதங்களை விரட்டவும், புதையலை கைப்பற்றவும் பலவாறு முயற்சிக்கிறார் பெரியப்பா. இதற்காக வந்த பாணன் தாமி கேட்ட ஆந்தைக் கண்கள், 101 பறவைகளின் இறகுகள், 51 விதப் பூக்கள். அருதையிலை இடித்துப் பிழிந்த சாறு 16 குப்பி, கண்டி வெண்ணெய் (பிறந்தவுடன் இடும் குட்டியானை சாணம்) என யாவற்றையும் சேகரிக்க முடிந்த பெரியப்பாவுக்கு தங்கை மரியத்தின் பிரியத்தை சேகரிக்க முடியவில்லை. இவ்வேற்பாடுகளை அவள் வெறுக்கிறாள்; எதிர்க்கிறாள். இறுதியில் பாணன் தாமி கேட்பது அவ்வீட்டிலொரு இள வாரிசின் இரத்தம்  அல்லது அப்பூதங்கள் தங்க அவ்வீட்டிலொரு உயிருள்ள உடம்பு. அனைவரும் திகைக்க, அஹம்மதுவின் அம்மா ஆவேசமுடன் அரிவாளால் வெட்டி பாணன் தாமியை ஓடஓட விரட்டி தானும் செத்து மடிகிறாள். பக்குவப்படுத்தவும் பாதுகாக்கவும் தாயிழந்து, இன்னொரு மொய்யம்மதாலியாகிறான் அஹம்மது. நெடும்புரையும் சங்கிலியும் அவனுடையதாகிறது. இவையெல்லாம் பூதங்களின் ஆதிக்கமா? சூழலின் தாக்கமா? புரியாத புதிர்தான்!
      “இடி இடிக்கவும், நரகத்தையும் சொர்க்கத்தையும் காவல் செய்யவும், எல்லாவற்றிற்குமாக அல்லாஹ் மலக்குகளை ஏற்படுத்தியிருந்தான். அப்போது உலகத்தில் நடப்பதைப் பார்க்க சூரியனை... இறைவனுடைய கண் தான் சூரியன்! உன் இறைவன் யாரென்ற மலக்குகளின் கேள்விக்கு மொய்யம்மதாலி அண்ணன் என்ன பதில் சொல்வார்?” என்றெல்லாம் சிந்தித்த அஹம்மதுவுக்கு பிற்காலத்தில் அதே கேள்விக்கு என்ன பதிலிருக்கும்? மனப்பிறழ்வாளனின் மதமெது? குலமெது? இறைதான் எது? இது நாவல் நம்முள் ஏற்படுத்தும் தாக்கமாகிறது.
      கதை நெடுக நாவலாசிரியரின் கவித்துவ மனசும், இயற்கையின் நுட்ப அழகை நேசிக்கும் நெகிழ்வும், ஒரு சின்னஞ்சிறுவனின் பார்வையிலேயே மொத்த கதையையும் நகர்த்தும் இலாவகமும், ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் அபூர்வ ஒப்புமைகளும், உருவக அழகும் வாசிப்போரை புளங்ககிக்கச் செய்பவை. முதல், கரு, உரிப்பொருட்களின் சீரிய சேர்க்கை ஆசிரியரின் திறன்காட்டும் கண்ணாடி ஆகிறது.
      முகமதியர்களின் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகளைத் தேவையான இடங்களில் விலாவாரியாக காட்டிச் செல்கிறார் மூலநூலாசிரியர் என்.பி.முகமது. இவரது மொழிநடை எளிமையான, வசீகரமானதாயிருக்கிறது. சிறுகதை, கட்டுரை, குழந்தை இலக்கியம்,     நினைவுக் குறிப்பு, பயணக்கட்டுரையென எழுத்தின் பல படிகளைக் கடந்தவர். 1998-2003 வரை சாகித்ய அகாதெமியின் மலையாள ஆலோசனைக் குழுவின் தலைவராயிருந்தவர். ‘தெய்வத்திண்டே கண்ணு' என்ற இம்மலையாள நாவலுக்கு 1993-ம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது பெற்றார்.

      தமிழுக்கு கொணர்ந்த தோப்பில் முகமது மீரானும் 1997-ல் தனது ‘சாய்வு நாற்காலி' நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது பெற்றவர். இவரது ஐந்து நாவல்களும் ஆறு சிறுகதைத் தொகுப்புகளும் ஆங்கிலம் உட்பட இந்திய மொழிகளில் வெளிவந்துள்ளன. இவரது ‘கடலோர கிராமத்தின் கதை' நாவல் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட உள்ளது.


நூற்பெயர்: 'தெய்வத்தின் கண்'
மூலமொழி: மலையாளம்
ஆசிரியர்: என்.பி.முகமது
தமிழாக்கம்: தோப்பில் முகமது மீரான்
வெளியீடு: சாகித்ய அகாதெமி
விலை: ரூ. 100/-

20 கருத்துரைகள்
  1. முகம்மது மீரானின் அவர்களால்
    ஜெர்மனிய மொழியில் இருந்து மொழி பெயர்க்கப்பட இருக்கும் புதிய நாவல் பற்றிய மேலோட்டமான பார்வையுடன் கூடிய உங்களின் எண்ணக் கருத்துக்களை அறியத் தந்திருக்கிறீங்க.
    பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  2. @நிரூப‌ன்...
    //முகம்மது மீரானின் அவர்களால்
    ஜெர்மனிய மொழியில் இருந்து மொழி பெயர்க்கப்பட இருக்கும் புதிய நாவல் பற்றிய மேலோட்டமான பார்வையுடன் கூடிய உங்களின் எண்ணக் கருத்துக்களை அறியத் தந்திருக்கிறீங்க.//

    வ‌ண‌க்க‌ம் ச‌கோத‌ர‌ம்...

    'தெய்வ‌த்திண்டே க‌ண்ணு' என்ற‌ சாகித்ய‌ அகாடெமி விருது(1993)பெற்ற‌ ம‌லையாள‌ நாவ‌லை எழுதிய‌வ‌ர் ம‌லையாள‌ எழுத்தாள‌ர் என்.பி.முக‌ம‌து. அதை த‌மிழில் மொழியாக்கிய‌வ‌ர் தோப்பில் முக‌ம‌து மீரான். (க‌தை நாய‌க‌ன் பெய‌ர் அஹ‌ம்ம‌து! என்ன‌வொரு பெய‌ர்க்குழ‌ப்ப‌ம்!)நான் ப‌டித்த‌து த‌மிழ் மொழியாக்க‌ம். தோப்பில் முக‌ம‌து மீரானின் 'ஒரு க‌ட‌லோர‌ கிராம‌த்தின் க‌தை' நாவ‌ல் தான் ஜெர்ம‌னியில் மொழிபெய‌ர்க்க‌ப்ப‌ட‌ உள்ள‌து. 192 ப‌க்க‌ 'தெய்வ‌த்தின் க‌ண்' நூலின் சார‌மும், இரு ஆசிரிய‌ர்க‌ள் ப‌ற்றிய‌ குறிப்பும் தான் என‌து ப‌திவு. ஏப்ர‌ல்_ஜீன் 2011 'திசை எட்டும்' மொழியாக்க‌க் காலாண்டித‌ழில் இவ்விம‌ர்ச‌ன‌ம் பிர‌சுரிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து என்ப‌தும் த‌ங்க‌ளுக்கான‌ கூடுத‌ல் த‌க‌வ‌ல்.

    ஆழ்ந்த‌ வாசிப்பும் கூர்ந்த‌ பின்னூட்ட‌மும் த‌ங்க‌ளுடைய‌தாக‌ எங்கெங்கும் காண்ப‌தால் ப‌திவிலிருப்ப‌தை ம‌றுப‌டியும்
    க‌வ‌ன‌ப்ப‌டுத்துகிறேன்.

    ReplyDelete
  3. நல்ல பயனுள்ள பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. மனப்பிறழ்வானவனின் மதமென்ன குலமென்ன....உற்று யோசித்தால் வாழ்வின் மாயத்துக்குள் உழன்றுகொண்டிருக்கும் நாங்கள்தான் மனம்பிறழ்வானவர்கள் நிலா !

    ReplyDelete
  5. நல்லதொரு நாவலின் விமர்சனம் கிடைத்தது. பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  6. //ஏப்ர‌ல்_ஜீன் 2011 'திசை எட்டும்' மொழியாக்க‌க் காலாண்டித‌ழில் இவ்விம‌ர்ச‌ன‌ம் பிர‌சுரிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து// வாழ்த்துக்கள்! //மனப்பிறழ்வாளனின் மதமெது? குலமெது? இறைதான் எது?// இப்போது அவர்களே மாமனிதர்களாகிறார்கள் இல்லையா? நல்ல பதிவு தோழி.

    ReplyDelete
  7. வாசிப்பின் சுவாரசியம் புலப்படுத்தும் அறிமுகம்.

    ReplyDelete
  8. அற்புதமான சொல் நடையில் உங்களின் எழுத்துக்கள்
    தமிழால் தவழ்ந்து
    மனமெல்லாம் நிறைந்து
    மகிழச் செய்கிறது
    நல்லதொரு விமர்சனம்

    ReplyDelete
  9. நல்ல நூலுக்கான விமர்சனம்.
    மிக்க நன்றி

    ReplyDelete
  10. "சாய்வு நாற்காலி"யில் 'முக‌ம‌து மீரான் சார்' ப‌டிப்ப‌வ‌ர்க‌ளை அவ‌ர் ப‌க்கமாய் சாய்து விடுவார்.
    அப்ப‌ப்பா!! என்னே ந‌டை, ந‌க்க‌ல், காம‌ம், வ‌றுமை, வ‌ள‌ம், வீர‌மொன எல்லாத் திக்கும் திற‌க்கும் அது.

    ReplyDelete
  11. @வை.கோ.சார்...

    மிக்க‌ ந‌ன்றி ஐயா.

    @ஹேமா...

    ம‌ன‌தை வ‌லிக்க‌ச் செய்கிற‌து தோழி த‌ங்க‌ள் ஒப்பீடு.

    ReplyDelete
  12. @கோவை2டெல்லி...

    வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி ஆதி.

    @மிருணா...

    வாழ்த்துக்கு ந‌ன்றி மிருணா. வாழ்த‌லின் அவ‌ஸ்தைக‌ள் ம‌ன‌ம‌ற்றிருப்ப‌தே மேலென‌ எண்ண‌ச் செய்துவிடுகின்ற‌ன‌ இல்லையா...

    ReplyDelete
  13. @ரிஷ‌ப‌ன், ஏ.ஆர்.இராஜ‌கோபால‌ன்...

    மிக்க‌ ந‌ன்றி... த‌ங்க‌ள் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும்

    ReplyDelete
  14. @சிவ‌கும‌ர‌ன்...

    மிக்க‌ ந‌ன்றி சிவா.

    @வாச‌ன் ஐயா...

    விரைவில் சாய்வு நாற்காலி வாசித்து விடுகிறேன் ஐயா. வ‌ருகை என்னை உற்சாக‌ப்ப‌டுத்துகிற‌து. ந‌ன்றி.

    ReplyDelete
  15. அற்புதமான சொல் நடையில் உங்களின் எழுத்துக்கள்...

    ReplyDelete
  16. உங்கள் அருமையான மதிப்புரையில் ஒரு நல்ல நூல் பற்றிய அறிமுகம் கிடைத்தது. நன்றி நிலா....

    ReplyDelete
  17. நல்லதொரு பகிர்வு. பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete
  18. @மால‌தி...
    @ கிருஷ்ண‌ப்ரியா...
    @ச‌ந்ரு...

    வ‌ருகையும் வாழ்த்தும் ம‌கிழ்விக்கிற‌து என்னை.

    ReplyDelete
  19. இதை படிக்க வேண்டும் என்று நினைத்தேன்..இப்போது ‘திசை எட்டும்’ என் மேஜையில்...
    இரண்டு தடவை படித்து விட்டேன்,சகோ..இருந்தும் திகட்டவில்லை!!
    கூடுதல் மகிழ்ச்சி!!!

    ReplyDelete
  20. @ஆர்.ஆர்.ஆர். ...

    அப்பாடா...! 'மேட‌ம்' விட்டு 'ச‌கோ' வ‌ந்த‌து ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ம்!! நேற்று நினைத்துக் கொண்டிருந்தேன்... உங்க‌ளிட‌ம் சுட்டிக் காட்ட‌ வேண்டுமென‌. டெலிப‌தியில் உண‌ர்ந்தாற்போல் தாங்க‌ளே மாறி விட்டீர்க‌ள். மிக்க‌ ம‌கிழ்ச்சி ச‌கோத‌ர‌ரே!

    ReplyDelete