மரங்களில் மக(ரு)த்துவம் (1.எலுமிச்சை)

வெயிலுக்கு ஏற்ற ஒன்றல்லவா... பழத்தை வெட்டி உச்சியில் வைத்து தேய்க்க உன்மத்தம் கூட குறையுமென வேடிக்கையாகக் கூறிக் கேட்டதுண்டு. குளிர்ச்சி மற்றும் கண்ணோய்க்கு நிவாரணியாய் கண்ணில் பிழிந்து கொள்பவர்களைக் கண்டதுண்டு. நகசுற்றுக்கு எலுமிச்சை செறுகியதுண்டா... மகா அவஸ்தை அது!

எலுமிச்சையில் 60 வகைகள் உள்ளனவாம். நாம் அறிந்தது நாட்டு எலுமிச்சை மற்றும் கொடி எலுமிச்சை.

எலுமிச்சை இலையை அரைத்துப் பற்றுப் போட்டால் மூட்டுவலி, கெண்டைக்கால் வலி, தலைவலி ஆகியன குணமாகும்.

எலுமிச்சம் பூவை மைபோல அரைத்து, சிறிதளவு எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து, காலை மாலை இருவேளை சாப்பிட்டு வர, ஈறு சார்ந்த நோய்கள் குணமாகும்.

விதை முற்றாத எலுமிச்சை பிஞ்சு-மலச்சிக்கல், பித்தம் ஆகியவற்றை நீக்கும்; ரத்த மூலத்தைக் கட்டுப்படுத்தும்.

எலுமிச்சை ஊறுகாயை உணவோடு தினசரி சாப்பிட, பித்தம் நீங்கும்; அஜீரணம் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் அகலும்.

காலரா நோய் பாதிப்புள்ள இடங்களுக்குச் செல்ல நேரும்போது, இரண்டு எலுமிச்சை பழங்களைச் சாறு பிழிந்துவிட்டு சிறிது மென்று தின்றால், காலரா நோய் நம்மைத் தாக்காது. ஒருவேளை, காலரா நோயின் தாக்கம் தெரிந்தால், சிறிய வெங்காயம் ஒன்றின் சாறுடன் எலுமிச்சைச் சாற்றையும் சம அளவு கலந்து குடித்தால் வாந்தி பேதி நின்று உடல் குணமடையும்.

எலுமிச்சை பழச் சாறு குடல் புழுக்கள், மலச்சிக்கல், வாய்ப்புண், சீதபேதி, பித்த வாந்தி, குமட்டல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், மூலக் கடுப்பு, சாப்பிட்டதும் ஏற்படும் வயிற்று வலி, பல் ஆடுதல், வாய் துர்நாற்றம் ஆகிய குறைபாடுகளைப் போக்கும்.

ஆலமரத்தின் விழுதை அறுத்தெடுத்து அம்மியில் நன்றாக அரைத்து மாவாக்கி அதனுடன் எலுமிச்சை பழச் சாற்றைக் கலந்து தலையில் தேய்த்து, அரைமணி நேரம் கழித்துக் குளித்தால் தலைமுடி நன்கு வளரும்.

அரைத்த வெள்ளைப் பூண்டுடன், எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளித்தால் பேன் தொல்லை ஒழியும்.

எலுமிச்சை பழத் துண்டை இரண்டாக வெட்டி, தேள் கொட்டிய இடத்தில் அழுத்தித் தேய்த்தால் விஷம் நீங்கும். அஜீரண வாந்தி மற்றும் கருவுற்ற தாய்மார்களின் வாந்தியை எலுமிச்சை பழச் சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், சுகப் பிரசவம் நிச்சயம்.

புளி சேர்க்காத எலுமிச்சை ரசம், ரச வகைகளில் (தக்காளி ரசம், பருப்பு ரசம், புளி ரசம், முலாம் பழ ஓடு ரசம், மைசூர் ரசம், மிளகு ரசம், வெங்காய வெந்தய ரசம்,இத்யாதி இத்யாதி) தனி சுவை, தனி மணம்... இல்லையா?!

10 கருத்துரைகள்
  1. "எலுமிச்சை" ப‌திவினை ப‌டித்த‌பின், 'எழுமிச்சை'யை அட‌க்க‌, ஒரு முழு ப‌ழம் போட்ட‌ ந‌ன்னாரி ச‌ர்ப‌த் குடிக்க‌னும் போலிருக்கிற‌து.

    ReplyDelete
  2. கையை நீட்டுறீங்களா! சந்திப்பு மரியாதையாய் ஒரு எலுமிச்சை தரவேணும் நான்!

    ReplyDelete
  3. பிளாக்கரில் நடந்த தொழில்நுட்பக் கோளாறால் நேற்று (13/05/2011) முழுதும் இந்தப் பதிவும் அதற்கான கருத்துரைகளும் மாயமாகிவிட்டன. இன்று பதிவு மட்டும் தப்பி பிழைத்ததால் முந்தைய கருத்துகள் நான்கையும் இங்கு மறு பதிவு செய்கிறேன்.

    ReplyDelete
  4. "எலுமிச்சை" ப‌திவினை ப‌டித்த‌பின், 'எழுமிச்சை'யை அட‌க்க‌, ஒரு முழு ப‌ழம் போட்ட‌ ந‌ன்னாரி ச‌ர்ப‌த் குடிக்க‌னும் போலிருக்கிற‌து.

    ReplyDelete
  5. ரிஷபன்14 May 2011 at 04:55

    சீசனுக்கு ஏற்ற பதிவு.
    எனக்குப் பிடித்த ஜூஸ் எலுமிச்சை தான்.

    ReplyDelete
  6. எலுமிச்சை வாசனையே போதும்.அவ்ளோ பிடிக்கும் !

    ReplyDelete
  7. மோகன்ஜி14 May 2011 at 04:56

    கையை நீட்டுறீங்களா! சந்திப்பு மரியாதையாய் ஒரு எலுமிச்சை தரவேணும் நான்!

    ReplyDelete
  8. எலுமிச்சையின் மகத்துவத்தை தெரிந்து கொண்டேன். எலுமிச்சை ஜூஸ் குடித்தது போன்று இருந்தது.

    ReplyDelete
  9. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete