ஆறாம் அறிவின் பாதகம்

நன்றி:http://venkatnagaraj.blogspot.com/2017/02/blog-post.html விதவிதமான வினாயகர் உருவங்கள் சிரிக்கும் புத்தர் சிலைகள் குபேர பொம்மைகள் கொஞ்சும் சதங்கைகள் வண்ணவண்ண மணித்திரள்கள் இலைகள், பூக்கள், கனிக்கூட்டங்கள் உலகின் ஒட்டுமொத்த போன்சாய் உருவங்களாக சாவிக்கொத்துகளின் ஆதிக்கங்கள். கோர்க்கப்படும் சாவிகளுக்கு அணைவாய் இருக்க போட்டா போட்டிகள் ஒவ்வொருவர் கையிருப்பிலும் அவரவர் ஆளுகைக்கு உட்பட்டவற்றின்...

சிருங்காரி

நன்றி: http://venkatnagaraj.blogspot.com/2017/02/blog-post.html தட்டுசுற்றா உடுத்தியிருக்கும்  செல்லம்மா-உன் தலைச்சுமையா இருப்பதுவும் என்னம்மா கோணக் கொண்டைக்காரி கொள்ளைச் சிரிப்புக்காரி கைவளை கலகலக்க கட்டுடல் பளபளக்க என் கண்ணைப் பறிக்குறடி கண்ணம்மா உன் காலுக்கு செருப்பா நான் வரட்டுமா? முதல் குண்டு கூழ்ப்பானை அதுக்கு மேல மோர்ப்பானை மூணாவதா நெல்லுச்சோறு...

பழமாகிறாய் நீ ... மரமாகிறேன் நான்!

விரிந்த தன் இலைகளில் பச்சையம் வற்றி செம்மைதூக்கலான மஞ்சள் நிறமடர்ந்த வாதாம் மரத்தின் திலக வடிவ இலைகள் தடக் தடக் என இரவும் பகலும் உதிர்ந்தபடி இருக்க மரத்தடியில் கிளைபடர்ந்த தூரம் வரை மண்மூடிக் கிடக்கும் இலைமெத்தையில் ஒய்யாரமாய் அமர்ந்து விருந்தாகிறாய் என் புகைப்படக் கருவிக்கு....

பேசி மாளாப் பொழுது

பட உதவி: http://venkatnagaraj.blogspot.com/ நூறுநாள் வேலையில் தூர்வாரிய ஏரி இது கிடக்கும் சொற்ப நீரை இயந்திரம் கொண்டு உறிஞ்சியே கருகும் பயிரைக் காப்பாற்றப் பார்க்கிறோம் அப்பன் பாட்டன் காலத்தில் முப்போக வெள்ளாமை. வண்டிமாடுகள் ஓய்ச்சலின்றி வீட்டுக்கும் வயலுக்குமாக நடைபோட்டபடி இருந்தன வாய்க்கால் பாசனமற்று வானமும் கருமியானதில் பஞ்சம்...

முகிலில் மறைந்த நிலா

பட உதவி: வெங்கட் நாகராஜ்  உடைக்குப் பொருத்தமாய் வளையல், நகப்பூச்சு, கொண்டையூசி எல்லாம் அழகுதான். உன் வெள்ளைப் பல்லிலும் பஞ்சு முட்டாய் தின்று படிந்த பக்கி ரோஸ் கலர் பிரமாதமென்றேன் நாணிக் கவிழ்கிறாய் தோழியின் தோளில்.   ...

அஞ்சும் மூணும் ...

எங்க பாட்டி சொல்வாங்க, (ஆமாப்பா... நமக்கும் வயசாகிப் போச்சு)‘அஞ்சும் மூணும் சரியா இருந்தா அறியாப் பிள்ளையும் கறி சமைக்கும்'. சொலவடைகளும் பழமொழிகளும் சரளமாக பேச்சிடையே சொல்வது அவரது பழக்கம். பலவற்றுக்கு விளக்கம் கிடைக்கும். ‘அப்படீன்னா?' அறியாப் பருவக் கேள்வி. ‘போடறத போட்டு செய்யற விதமா செஞ்சா...