மதிப்புநிறை தோழர் அவர்களுக்கு,
வணக்கம்.
எனது ‘சுழல்' சிறுகதைத் தொகுப்பு கிருஷ்ணப்ரியா வழியாக ஒரு அருமையான வாசகரை எனக்கு கையளித்துள்ளது.
பசிக்குப் புசிப்பவராக மட்டுமின்றி ரசித்துப் புசிப்பவரென்பதையும் கண்டுகொண்டேன். (‘நெத்திலிக் கருவாட்டுக் குழம்பு') பாத்திரப் படைப்பின் காத்திரத்துக்காகவே கேள்விஞானத்தில் கருவாட்டுக் குழம்பைச் சேர்த்த சுத்த சைவம் நான் என்பதையும் அறியவும்.
//இந்தத் தொகுப்பு கதை எழுத மட்டும் நினைத்த நம் படைப்பாளியினுடையதல்ல//
எனது எழுத்தாசான் திரு.பாரதிக்குமாரின் தொடக்கப் பாடமே, ‘நம் படைப்பு சமூக உணர்வோடு, தனிமனித அறங்களை வலியுறுத்துவதாக அமைய வேண்டுமேயன்றி, வெற்றலங்கார ஒப்பனைகள், பயனற்ற சொல் விளையாட்டுகள், தேவையற்ற துதிபாடல்கள் ஆகியவற்றால் பத்தோடு பதினொன்றாக கலந்தழியக் கூடாது' என்பதே. பாடத்தை எந்தளவு என்னால் கைக்கொள்ள முடிந்திருக்கிறது என்பதை தங்களைப் போன்றோரின் கருத்துக்கள் காட்டி நிற்கின்றன.
//எல்லாக் கதைகளின் பாத்திரப் படைப்புகளும் ஒரு இலட்சியத்தோடு அல்லது ஆசையோடு//
இதற்கும் மேற்கண்ட பத்தியின் விளக்கம் பொருந்தும்.
//தாம் சந்தித்த அல்லது எதிர்ப்பட்ட சூழலில் பெண்கள் என்னவானார்கள்//
தொகுப்புக்கு இது... இதுதான் மிகப் பொருத்தமான ‘ஒற்றை வரி' கணிப்பு!
//‘செளம்யாம்மாதான் நிலாமகளா?'//
இதை விலாவாரியாக சொல்லியாக வேண்டும் நான். படைப்பாளியின் எந்தவொரு படைப்பிலும் அவன் ஏதேனுமோர் பாத்திரத்தில் அல்லது எல்லாப் பாத்திரங்களிலும் ஏதேனுமோர் இடத்தில் ஒளிந்து கொண்டிருப்பது தவிர்க்கவியலாதது. நான் என்னவாக இருக்கிறேனோ அவ்வாறே என் படைப்புகளும் அமைந்து விடுகின்றன. நான் பார்த்ததை, கேட்டதை, உணர்ந்ததை, எனதியல்பைத் தாண்டி எதை எழுதிவிட முடியும் என்னால்? குருடன் யானையைத் தடவியது போல் அவரவர் அறிவுக்கு எட்டியதைக் கொண்டே அடுத்தவருக்கு சுட்டும் நிலை.
மட்டுமின்றி, கதை சொல்லலில் படைப்பாளன் ‘தன்மை'யில் இருப்பது பாத்திரப் படைப்புக்கு பெயரிடும் வேலை குறைவதுடன், வாசிப்பவர் மனதில் ஒரு நம்பகத் தன்மையையும் தரவல்லதாய் பல நேரங்களில் அமைகிறது. இன்னார் கதை என்பதை விட கதையில் நானுமோர் பாத்திரமென்பது வாசிப்பை சுலபமாக்குவதுடன், படைப்பின் கனமும் அதிகரிக்கிறது. எழுதுபவன் நடிகனைப்போல் பாத்திரத்தில் ஒன்றி விடுவதும், பாத்திரமாகவே ஆகி விடுவதும் கதையின் வீரியத்தை வாசிப்பவருள் விதைக்க ஏதுவாகிறது என்று தோன்றுகிறது எனக்கு.
‘செளம்யாம்மா' கதை எனது முதல் கதையும் கூட. ‘யயாதியின் மகள்' கதையில் இருக்கும் சரள நடையும் சொற்செட்டும் தெளிவும் அலைக்கழிப்பற்ற கதைக்கருவும் கைவராத தொடக்க காலம். ‘பெண் எழுத்தாளர்களுக்கான' கோவை ஞானியின் போட்டிக்காக எழுதப்பட்டது. (பெண்ணிய சிந்தனை இருக்க வேண்டுமென்ற விதிமுறைக்கு உட்பட்டு)
திரு. பாரதிக்குமார் தூண்டுதலில் எழுதத் துவங்கிய காலம். மனதைப் பாதித்த, நெடுங்காலம் மனதில் தங்கிய ஒரு நிகழ்வை கதைக் கருவாக எடுத்துக் கொள்ளச் சொன்னார். என் நெருங்கிய தோழியொருத்தி பொறியியல் படித்தும் தன் குடும்பத்தோடு ஒரு தலைமுறைக் காலம் பேச்சுவார்த்தை நின்றுபோன அத்தை மகன் மேல் மையலாகி அவனை மணந்ததையே பெரும் சாதனையாக்கி, ஒரு பெண்குழந்தை பெற்று, மண்ணெண்ணெய் குளித்து மடிந்தும் போனாள்.
இதில் கல்யாணம் செய்தது வரை அறிந்த நான், ஊர்ப்பக்கம் போன ஒரு சமயம் அவளின் முடிவு கேள்விப்பட்டேன். அதிலிருந்து பல்லாயிரம் எண்ணச் சிதறல்கள் என் மனதைக் கூறு போட்டுக் கொண்டிருந்தன. அக்கதையில் இதுவொன்றே நிஜம். மீதியெல்லாம் சொந்தக் கற்பனையே. (2003ல் என் பெண்ணுக்கு 8 வயசு தான்.)
சுகுணாவைக் கடைசியாக ஒருமுறை பார்க்கக் கூட வாய்க்காமல் காலம் கடந்து கேள்விப்பட்ட எனக்கு கதையில் அவளுடம்பை கேட்டுக் காத்திருந்த ‘கற்பனைப் பொழுது' ஒரு பிராயச்சித்தம்.
எல்லாம் தாண்டி, படைப்பினுள் படைப்பாளியைத் தேடுதல் என்பது தேவையா? ‘பயபுள்ள, நல்லாத்தான் எழுதியிருக்கான், யாருலே இவன்?' எனத் தேடுதல் நன்றே. அப்படித்தான் எடுத்துக் கொண்டேன் உங்க தேடலையும் நான். சரிதானே...
//கதைகேட்ட கதையை முன்னோட்டமாக//
இவ்வரிகளும் நிறைவளித்தன. ஏனெனில் பெரும்பாலோர் முன்னுரையை எல்லாம் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. வண்ணதாசன் அடிப்பொடியான நாங்கள் நூல் தலைப்பிலிருந்து ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு எழுத்தும் கவனித்துப் படித்து பிறகே படைப்பினுள் நுழைவது. எங்கள் புத்தகங்களிலும் படைப்பின் மீதான கவனம் போன்றே முன்னுரைக்கும் மெனக்கிட்டு எழுதுவது. நம்ம சாப்பாட்டு மொழியில் சொல்வதானால், நல்ல starters / soup / sweet அல்லது பருப்பு நெய் சாதம் போல். மேலும், ‘பதனிட்டு' என்ற உங்க வார்த்தையையும் (ஒவ்வொன்றையும் நிதானமாகப் பார்த்து மதிப்பிட்டு, பதிவிட்டு, பதனிட்டு,) ஆழ்ந்து புரிந்து மகிழ்ந்தேன்.
//‘எலேய்... திருந்தவே மாட்டீங்களாடா'ன்னு//
ஆண்டுக்காண்டு பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பற்றிய கதைக்கரு தேடிய போது, அன்றும் இன்றும் என்றும் மாறா ஒரு சிக்கலாக திரும்பத் திரும்ப எதிர்கொள்ள வேண்டியதான தீராத தலைவலியாக முன் நின்றது. திருவள்ளுவரும் ‘பிறன்மனை விழையாமை' என்ற அதிகாரமெழுத அவசியமாயிருந்ததல்லவா. இராமரைப் புகழும் ஒருமொழியல்லவா ‘பிறன்மனை நோக்காப் பேராண்மை'? சிறகை விரிக்கும் கூட்டுப் புழுக்களில் தலைமுறைகள் இடைவெளியில் பெண்கள் எதிர்கொண்ட விதம் பற்றியும் எளியவர்கள் எதையும் எளிதில் கடந்து விட முடிகிறதென்பதையும் தொட முடிந்தது.
சரியோ, தவறோ... எப்படி நிகழ்கிறது என யோசிக்கும் போது துளித்துளியாக பெருகியதுதான் ‘சுழல்'. அடியில் சேறும் சகதியும் வெகு ஆழம் பரவியிருந்தாலும், மேலோட்டமாக ஒரு குமிழாய் சுழன்று கொண்டிருக்கும் இப் புதைசேற்றில் இழுபட்டவர்கள் காரண காரியங்களை சப்பைக் கட்டுகளாக சொல்லிக் கொண்டே அமிழ்ந்தே அதில் அழிந்தே போக வேண்டியாகிறது பல சமயங்களில். முதல் இழுப்பில் சுதாரிப்பவர்கள் இலட்சத்தில் ஒருவராகத் தப்பிக்க வாய்க்கிறது.
முக்கியமாக, எதையும் சரி தவறு என்று அறுதியிட்டுக் கூற யாருக்கும் அதிகாரமில்லை. அவரவர் சந்தர்ப்ப சூழல்களே அதைத் தீர்மானிக்கும் காரணியாகின்றன. சம்பந்தப்பட்டவர்களின் மன அவஸ்தைகளைச் சித்தரிப்பதாகவே தொடர்புடைய இரு கதைகளும் அமைகின்றன.
ஆண்மை என்பது இதிலல்ல என்ற பெரியார் கருத்து ஆணித்தரம். இதை அந்தஸ்தாக, சலுகையாகப் பார்த்த காலமெல்லாம் மலையேறிவிட்டது.
படைப்பாளியின் சிந்தனை வீச்சின் தூரப் பரவல் எவ்வளவாயினும், கதைக் களமும் கதை மாந்தரியல்பும் அவர்தம் அனுபவ அளவேயாகிறது தவிர்க்கவியலாத ஒன்று. வாழ்வியல் பாதையில் மனதை நெருடியவற்றையே படைப்பில் இறக்கி ஆசுவாசப் படுத்திக் கொள்ள முடிகிறது. தான் இருக்கும் பாத்திரத்தின் வடிவைப் பெறும் தண்ணீர் போல.
நாம் நேரில் ஆற அமர பேசும் வாய்ப்பினை எல்லாம் வல்ல பிரபஞ்சப் பேராற்றல் விரைவில் தந்தருள பெருவிருப்போடு இந்தத் தாமதக்காரி இப்போதைக்கு முடிக்கிறேன்.
நன்றி!

குப்பு.வீரமணியின் கடிதம் ஒரு அழகென்றால், அதற்கு நீங்கள் எழுதியிருக்கும் பதில் அதை விட ஓகோ....
ReplyDeleteஎன் தம்பி கண்ணன் சொல்லுவான், நிலாமகளின் எழுத்து நடையின் வசீகரத்திற்காகவே அவர்களது வலைப்பக்கம் போகிறேன் என்று...
உங்கள் மொழி வளம் எனக்கு பொறாமையுணர்வைத் தருகிறது நிலா...
வாழ்த்துக்கள்...
என் வலைத்தளத்துக்கு வர அழைக்கிறேன்
ReplyDelete@Manojkumar R
ReplyDeleteநீங்களெல்லாம் வலைப் பக்கம் வருவது எனக்கும் 'ஆஹாஹா...! நன்றிகள் பல!
நல்ல விளக்கம்.... படைப்பாளி /படைப்பு அவைபற்றிய உங்கள் விளக்கத்திற்கு த்த்வார்த்தமான எதிர்நிலை உண்டு. ஒரு நீண்ட பதிவுக்கான விஷயம். பாதகமில்லை.. நீங்கள் சொன்ன நிலைப்பாடு ஒரு வசதி.. ஆனாலும் எல்லைகளை குறுக்கிவிடும்.
ReplyDelete