சதுரங்களால் சூழப்பட்ட
நம் கிராமத்து இருப்பிடங்களில்
ஏதேனுமோர்
அல்லது எல்லா மூலைகளிலும்
எப்போதேனும் வேண்டியிருக்கும்
நமதுடைமைகள் நிரம்பிக் கிடக்க...
அவற்றை இடறாதபடி
எஞ்சிய இடத்தில்
நடமாடப் பழகின
நம் சிறுபிராயக் கால்கள்...
இரண்டு அறை, மூன்று அறை கொண்ட நம்
நகரத்து வசிப்பிடங்களில்
அறைதோறும் தலைக்குமேல்
சிமெண்ட் பரண்களில்
ஏறிக்கொண்டன
என்றேனும் உதவுமென ஏறக்கட்டியவை...
பேருந்து நிலையங்கள்
திரைப்பட அரங்குகள்
வழிபாட்டுத் தலங்கள்
இன்னபிற பொதுஇடங்களிலும்
எங்கேனுமோர்
நடமாட்டமற்ற மூலைகளில்
வீடற்ற வாழ்வுற்றோரின்
உடமைகள் இடம் பிடிக்க...
நம்
மனசின் ஒரு மூலையிலோ
வீட்டின் ஒரு முடுக்கிலோ
ஒடுங்க இடமற்ற
வயசாளிகள் புகல்வதால் பெருகும்
முதியோர் இல்லங்களின்
மூலைமுடுக்கெல்லாம்
வெறிச்சிட்டுக் கிடக்கின்றன
அவர்களின்
மனத்துயரைப் பறையறிவித்து.
//நம் மனசின் ஒரு மூலையிலோ
ReplyDeleteவீட்டின் ஒரு முடுக்கிலோ
ஒடுங்க இடமற்ற வயசாளிகள் புகல்வதால்
பெருகும் முதியோர் இல்லங்கள்//
நினைத்துப்பார்க்கவே மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது.
ஆதங்கக் கவிதை ஆக்கம் சிந்திக்க வைக்கிறது.
மனம் நெகிழ்த்தும் யதார்த்தத்தை முகத்திலறைந்தாற்போல் சொல்லிவிட்டீர்கள் நிலாமகள். மனவிடுக்கெங்கும் மறைந்துநிற்கிறது சுயநலம்.
ReplyDeleteநெகிழ்ந்தேன்...
ReplyDeleteபுகைப்படமும், எழுத்தும் மனதைக் கனமாக்குகின்றன.
ReplyDeleteமனதை கனமாக்கும் நிகழ்வுகள் நித்தமும் இது போல நிறைய .... உங்கள் எழுத்திலே இதைப் படிக்கையில் கண்ணில் பட்ட எத்தனையோ மரணங்கள் மனதில் வந்து போகின்றன.
ReplyDeleteஎங்கிருந்து எங்கு.... பாயும் மனவோட்டம்.... உண்மைகள் சுடுகின்றன. மனம் வெதும்பித் தவிக்கும் கவிதை... மௌனமாய் கூட நின்று தேம்பத் தோன்றும் இந்த ஏழை மனசு.
ReplyDeleteவானவில்லுக்கு வரக்கூடாது என்று ஏதும் விரதமா? நலம் தானே?
ReplyDeleteவானவில்லுக்கு வரக்கூடாது என்று ஏதும் விரதமா? நலம் தானே?
ReplyDelete