ஓணப் பூவில் எஞ்சிய நறுமணம்

பண்டிகைகளில் வாழ்த்துப் பரிமாற்றம் என்பது பழகிப் போனதொரு சம்பிரதாயம் ஆகிவிட்டது . கிருஷ்ண ஜெயந்திக்கும், விநாயக சதுர்த்திக்கும், விஜய தசமிக்கும் கூட வாழ்த்து சொல்லிக்கொள்ளும் கூத்தும் பார்க்க முடிகிறது.

சமீபத்திய ஓணத்துக்கு ஒருவாரம் முன்பிருந்தே 'சொல்லிடணும், சொல்லிடணும்' என்றிருந்தும் என்னால் ஓணம் முடிந்து மூன்று நாள் கடந்து தான் சொல்ல வாய்த்தது ஒருவருக்கு... அவர்... நம் கிருஷ்ணப்ரியா!!

தொலைபேசி மணி ஒலித்து தேய்ந்தது. சில மணித் துளிகளில் அவரே தொடர்புக்கு வந்தார். 
"ஒரு வாரமா உங்க நினைவுதான்... மகள் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம் பற்றி ... மலர்க் கோலமிடுதலில் அவங்க அணி வெற்றி பெற்றது பற்றி, சக தோழிகளின் 'திருவாதிரைக் களி' ஆட்டம் பற்றி எல்லாம் கேள்விப் பட்டபோது, உங்க நூல் வெளியீட்டு விழாவுக்காக உங்க வீட்டுக்கு வந்து தங்கியிருந்த போது உறவினர்களுடன் 'திருவாதிரைக் களி' பாடி ஆடிக் காண்பித்ததெல்லாம் நினைத்துக் கொண்டேன்... 
பண்டிகையெல்லாம் நல்லாப் போச்சா?"

"நீங்க லேட்டா சொல்றதுக்கு வருத்தப் பட வேண்டாம். ரெண்டு மாசத்துக்கு முன்பே சொந்த ஊருக்கு பண்டிகைக்குப் போக ட்ரெய்ன் டிக்கெட் புக் பண்ணியும் நான் மட்டும் நண்பர் ஜே.டி.ஆர். மகள் திருமணத்துக்காக சென்னையும், கணவர், மகன்கள் மட்டும் சொந்த ஊருக்கும் போகும்படி ஆச்சு."

"அடடா... பண்டிகையும் அதுவுமா குடும்பத்தோடு இல்லாம... ஓணச் சாப்பாட்டை வேற மிஸ் பண்ணியிருக்கீங்க "

"கல்யாணப் பொண்ணுக்கு ரொம்ப சந்தோஷம் ... அவ விருப்பத்தை தட்ட முடியாமத் தான், டிக்கெட் கேன்சல் பண்ணாம 'இன்னொரு நாள் கல்யாணம் விசாரிச்சுக்கலாம்' என்ற மனோஜ் கிட்ட 'நான் கல்யாணத்துக்கு போறேன்'ன்னு அறிவிச்சுட்டேன்." 

("தனக்கு சரியென்று பட்டதை சொல்லவும் செய்யவும்  தயங்காதவராச்சே நீங்க...!")

"காலைல கல்யாண வீட்டில் டிபன் சாப்பிட்டு பஸ் ஏறின நான், இரவு  வரை காய்ந்து வந்து சேர்ந்தேன் நிலா. வித்தியாசமான பண்டிகை அனுபவம் இந்தமுறை எனக்கு. ஆனா, வீட்டில் அம்மா எனக்காக அவியல், பாயாசம், மற்ற ஐட்டமெல்லாம் எடுத்து வைத்திருந்தாங்க. எடுத்துட்டு வந்து தனியா எங்க வீட்டில் உட்கார்ந்து இரவு சாப்பிட்டேன்."

"வருஷ பண்டிகை ஆச்சே... சார் சொன்ன மாதிரி சேர்ந்து கொண்டாடி இருக்கலாம் தானே...?"

"பண்டிகை அடுத்த வருஷமும் வரும்... அந்தப் பொண்ணு கல்யாணத்துல இப்பதானே கலந்துக்க முடியும்...?!" 

"அது சரி! உங்க தெளிவு எனக்கு ரொம்பப்  பிடிக்கும் ப்ரியா!"





ஆமா... இந்தப் படத்துல மனோஜ் எங்களுக்கு 'ஹாய்' சொல்றாரா? இல்லை... உங்களுக்கு கொம்பு வைக்கிறாரா?

 ரெண்டு பேரும் இந்தப் படத்தில் 8-10 வயசுக் குழந்தைகளாக இருக்கீங்க... அச்சு அசலா!

உங்க கவிழ்ந்த முகத்தில் இத்தனை வெட்கத்தை, உடல்மொழியின் பெருமிதத்தை ரசிக்கிறேன் ப்ரியா...
                                   


                                 வாழ்க! வளமுடன்.. நலமுடன்!! 
                             விஷ்ணு, விஜய் உடன்!!!

( ப்ரியா... நீங்க சொன்னமாதிரி ஒரு பதிவு தேத்திட்டேனா.... உங்க வீட்டுப் பசுவை எங்க தென்னை மரத்தில் கட்டியாச்சு. ஆனா, நம்ம உரையாடலில் ஒரு நல்ல கதைக்கரு இருக்குப்பா... அது உங்க சாய்ஸ்... ஓகே?!)
8 கருத்துரைகள்
  1. //பண்டிகைகளில் வாழ்த்துப் பரிமாற்றம் என்பது பழகிப் போனதொரு சம்பிரதாயம் ஆகிவிட்டது . கிருஷ்ண ஜெயந்திக்கும், விநாயக சதுர்த்திக்கும், விஜய தசமிக்கும் கூட வாழ்த்து சொல்லிக்கொள்ளும் கூத்தும் பார்க்க முடிகிறது.//

    அதுவும் பதிவுகளில் பின்னூட்டங்களில் தான் இவற்றை அதிகம் பார்க்க முடிகிறது.

    ஒருவர் எதைப்பற்றியாவது ஒரு பதிவு எழுதியிருப்பார். அது ஒரு ஆபாச சினிமா விமர்சனமாகக் கூட இருக்கலாம்.

    அதற்கு என்ன கமெண்ட் கொடுப்பது என்றே புரியாத இன்னொருவர் ’இனிய அசிரியர் தின நல்வாழ்த்துகள்’ என பின்னூட்டமிடுவார்.

    நீங்க சொல்வதுபோல இதெல்லாம் கூத்துகள் மட்டுமே.

    உரையாடலைப்பற்றிய பதிவு நல்லா இருக்கு.

    ReplyDelete
  2. உரையாடல் அசத்தல்... ஓகே... ஓகே...

    ReplyDelete
  3. ரொம்ப சுவாரசியமாக இருந்தது நிலா உங்களின் உரையாடல்! முதல் ப‌டத்தில் உன்மையிலேயே கிருஷ்ணப்ரியா மிக இளமையாக இருக்கிறார். இரண்டாவது படம் எந்தச் சூழலில் எடுத்தது?

    ReplyDelete
  4. @வை.கோ.சார்...
    @DD அண்ணா...

    தொடர்ந்த தங்கள் பின்னூட்டங்கள் எனக்கான ஊக்க பானம். நன்றி! நன்றி!!

    @ மனோ மேம்...

    மிக்க நன்றி சகோ... ப்ரியாவின் முகனூல் பக்கத்திலிருந்து சுட்டவை இப் படங்கள். குடும்பத்துடன் கேரளா பக்கம் சுற்றுலா போலும். மேற்கொண்டு விவரங்கள் அவரைத் தான் கேட்கணும். அவங்க அக்கா பொண்ணு மாலு மிகச் சிறந்த புகைப்பட நிபுணி. இரண்டையும் எடுத்தது மாலுதான் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  5. ஓணப் பூவில் எஞ்சிய நறுமணம் இனிமையாய் கமழ்கிறது..பாராட்டுக்கள்..!!

    ReplyDelete
  6. அன்பின் நிலா,

    வாழ்த்துச் செய்தி இப்படி ஒரு பதிவாய் மாறியிருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை......
    ஷர்மி கல்யாணத்திற்குச் சென்றதை எப்போதும் நான் மறக்க முடியாத படி செய்து விட்டீர்கள்....
    கதைக் கருக்கள் பலதும் மனதில் கிடக்கிறது, பத்தோடு பதினொன்றாய் இதுவும் கிடக்கப் போகிறது.... வேறென்ன..?
    மனோ மேடம் கேட்ட கேள்விக்கு பதில்
    முதல் படம் சென்னை எம்.ஜி.எம்மில் எடுத்தது ஜனவரி 2013
    இரண்டாவது படம் ஆலப்பி படகு வீட்டில் எடுத்தது ஏப்ரல் 2011....

    ReplyDelete
  7. bold எழுத்துக்களில் இருக்குதா கதை? புரிஞ்சாப்புல தலையாட்டிட்டுப் போக வேண்டியது தானா? :)

    ReplyDelete
  8. இப்படி கூட வாழ்த்து சொல்லமுடியுமா? நல்லாத்தான் இருக்கு!

    ReplyDelete