தொடக்கமும், முடிவும்...

http://nilaamagal.blogspot.in/2013/07/blog-post_10.html

http://nilaamagal.blogspot.in/2013/07/blog-post.html

திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி- 3

எட்டாம் படி:
உங்களுடைய திருக்குறள் கையேட்டில் திருக்குறள் முதற்சீரும் இறுதிச் சீரும் எழுதியுள்ளீர்கள். அவற்றிலிருந்து ‘அ' முதல் ஒவ்வொரு எழுத்திலும் தொடங்கும் குறட்பாக்கள் எத்தனை என தனித்தனியே கணக்கிடுங்கள். அவ்வாறே முடியும் எழுத்தையும் கணக்கிடுங்கள். தொடங்கும் எழுத்தும் முடியும் எழுத்தும் ஒன்றாகவே உள்ள குறட்பாக்கள் எத்தனையெனக் கணக்கிடுங்கள்.
திருக்குறள் நூலில் கொடுக்கப்பட்டுள்ள அகரவரிசையைப் பார்க்க வேண்டாம். நம் உழைப்பினால் பெறும் ஆற்றல் தான் எப்போதும் நிலைத்து நிற்கும். எழுத்தை வைத்துக் கணக்கிடுவது போல் சொல்லை வைத்துக் கணக்கிடுவதும் நமது நினைவாற்றலை மிகுதிப் படுத்தும். சான்றாக, ‘உலகு' என முடியும் குறட்பாக்கள், ‘படும்' என முடியும் குறட்பாக்கள் போன்று முடிகின்ற சொற்களை வைத்துக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

       1330 குறட்பாக்களும் 71 எழுத்துக்களில் தொடங்குகின்றன. 47 எழுத்துக்களில் முடிகின்றன.

திருக்குறட்பாக்கள் தொடங்கும் எழுத்துக்கள்: 

அ- 157, ஆ- 23, இ- 113, ஈ-8, உ- 81, ஊ- 21, எ- 45, ஏ- 9, ஐ- 4, ஒ-40, ஓ-6

க- 77, கா-28, கு-28, கூ-8, கெ-7, கே-7, கை-3, கொ-18, கோ-2

ச-3, சா-5, சி-18, சீ-4, சு-5, சூ-3, செ-37, சொ-7,

ஞா-1,

த-35, தா-9, தி- 6, தீ- 6, து-21, தூ-4, தெ-9, தே-5, தொ-10, தோ-1,

ந-54, நா-16, நி-18, நீ-4, நு-5, நூ-1, நெ-9, நோ-7,

ப-62, பா-3, பி-15, பீ-1, பு-20, பெ-19, பே-9, பொ-26, போ-1

ம-59, மா-4, மி-4, மு-20, மே-2, மை-1, மோ-1,

யா-10,

வ-28, வா-12, வி-28, வீ-6, வெ-4, வே-12, வை-2

மொத்தம்= 1330

திருக்குறட்பாக்கள் முடியும் எழுத்துக்கள்:

க-1, கு-97, கை-7,  சி-1, சு-20, சை-2,

ட-1, டி-6, டு-39, டை-27,  ணி-3, ணை-13, ண்-29,

தி-3, தீ-1, து-160, பு-58,  ம-1, ம்-181,  ய்-9,

ரா-2, ரி-3, ரு-6, ரை-2, ர்-127,

ல-2, லி-1, லை-25, ல்-152, வா-2, வி-1, வு-31, வை-4,

ழி-10, ழை-4, ழ்-6, ள-6, ளி-5, ளை-2, ள்-24,

ற-12, றி-3, று-101, றை-11, னி-1, னை-10, ன்-115

மொத்தம்=1330

ஒன்பதாம் படி:
இப்படியாக திருக்குறள் முழுவதையும் பல்வேறு வகைகளில் பகுத்து நினைவில் வைத்துக் கொண்டபின், திருக்குறள் வாழ்வியலுரையை அடிப்படையாகக் கொண்டு குறளுக்குரிய பொருளை ஒருமுறை படித்தாலே மனதில் பதிந்து விடும். குறளைக் கூறியவுடன் பொருள் தானே நினைவுக்கு வருமளவு பயிற்சி செய்ய வேண்டும். இப்பயிற்சியினால் பொருள் கூறினால் குறள் கூறவும், குறள் கூறினால் பொருள் கூறவும் இயலும்!

பத்தாம் படி:
பொருளுடன் திருக்குறள் முழுமையும் அறிந்தாயிற்று. இனி, திருக்குறளில் பயின்று வரும் உவமைகள் அணிகள் இவற்றையும் தெரிந்து வைத்திருந்தால் இலக்கண அடிப்படையில் கேட்டாலும் பதில் தரலாம். இதற்கு சென்னைப் பல்கலைக் கழக வெளியீடான “திருக்குறள் அணிநலம்” என்ற நூல் பயனாகும்.
இவ்வாறு பல்லாற்றானும் ஓதி உணர்ந்த திருக்குறள் நெறியை வாழ்வியல் நெறியாக ஏற்றுப் பின்பற்றுதல் மிக நன்று! சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லியை வள்ளுவர் வழியில் நீக்கலாம்! யாதொன்றும் தீமையில்லா வாய்மையினை பின்பற்றலாம்! கசடறக் கற்றபின் அதற்குத் தக நின்று மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழலாம்!

வயது ஒரு தடையில்லை:

        ஒவ்வொரு நாளும் காலை மாலை அரை மணி நேரம் ஒதுக்கினாலே போதும், முறையான பயனைப் பெறலாம். நம் பயண நேரங்களில் மனதுள் உருப்போட்டவற்றை நினைவூட்டி பயிற்சி பெறலாம். இளையோர் மட்டுமின்றி எவ்வயதினரும் முயன்றால் முடியாதது ஏது?!

இதனால் என்ன பயன்?

         வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களையெல்லாம் தீர்க்க திருவள்ளுவர் தோன்றாத் துணையாவார் நமக்கு. மன உறுதியும் நல்லியல்புகளும் வளரும். எத்தகைய கருத்துகளையும் நினைவில் இருத்தும் வலிமை வளர்கிறது. திருக்குறள் வழி நடக்க வேண்டுமென்ற உறுதி ஏற்பட்டு அவ்வாறே செயல்படவும் தூண்டுகிறது. பிற இலக்கியங்களை எளிதில் புரிந்து கொள்ளவும் நினைவில் இருத்திக் கொள்ளவும் துணை புரிகிறது.

(இன்னூலின் எஞ்சிய சிறப்புத் தகவல்கள் அடுத்த பதிவில்)

நூற் பெயர்: திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி
ஆசிரியர்:   அ. ஆறுமுகம்,

வெளியீடு: 
பாவேந்தர் பதிப்பகம், ‘சீரகம்', திருமழபாடி, திருச்சி-621 851.

4 கருத்துரைகள்
  1. அருமை... அருமை...

    தொடர்க.... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மிகவும் அருமையான தகவல்களைத் தேடிப்பிடித்துக் கொடுத்துள்ளீர்கள்.நினைவாற்றல் பயிற்சிக்கு நிச்சயமாக உதவும். பகிர்வுக்கு ந்ன்றிகள்.

    ReplyDelete
  3. வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களையெல்லாம் தீர்க்க திருவள்ளுவர் தோன்றாத் துணையாவார் நமக்கு. மன உறுதியும் நல்லியல்புகளும் வளரும். எத்தகைய கருத்துகளையும் நினைவில் இருத்தும் வலிமை வளர்கிறது. திருக்குறள் வழி நடக்க வேண்டுமென்ற உறுதி ஏற்பட்டு அவ்வாறே செயல்படவும் தூண்டுகிறது. பிற இலக்கியங்களை எளிதில் புரிந்து கொள்ளவும் நினைவில் இருத்திக் கொள்ளவும் துணை புரிகிறது.


    பயன் தரும் அருமையான தகவல்கள்..
    பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  4. வித்தியாசமான அணுகுமுறை என்றாலும் இந்த முறையைப் பயன்படுத்தி யாராவது திருக்குறளை நினைவில் வைத்திருக்கிறார்களா - அதைப் பற்றி ஏதாவது எழுதியிருக்கிறாரா?



    ReplyDelete