கள்ளம் பெரிதா? காப்பான் பெரிதா?

              மாலை நேரம். அதுவொரு செல்போன் கடை. பள்ளி, கல்லூரிகள் துவக்க நேரமென்பதால் கூட்டத்துக்கு குறைவில்லை. ஏகப்பட்ட மாடல்கள்... விலையைப் பற்றி யாருக்கு கவலை? பணம் கொடுக்கப் போகும் பெற்றோருக்கல்லவா...! பிள்ளைகளுக்கு எந்த மாடலில் எவ்வளவு வசதி என்பது பற்றியே பேச்சு. நம் உடல் பொருள் ஆவி அனைத்தும் 'பெற்றிருக்கும் ஒன்று ரெண்டு'க்காகத் தானே...

"நானெல்லாம் படிக்கிற காலத்தில்..." ஒவ்வொரு அப்பா அம்மாவுக்கும் மனசில் அவங்கவங்க அனுபவங்கள் ... ஒப்பீடுகள்... ஒரு hmt வாட்ச் தந்த குதூகலத்தை இன்றைய iphone கூட தருவதில்லை.

பெரிதினும் பெரிது கேட்கவும், கிடைத்தவுடன் அதற்கும் பெரிது தேடவுமாக... திருப்தியில்லாத இன்றைய தலைமுறை...

போன் கைக்கு வந்ததும், தயாராக வாங்கி வைத்திருந்த சிம் கார்டை  பொருத்தியபடி நண்பர்கள் புடைசூழ WiFi சிக்னல் கிடைக்கும் இடம் தேடி பறந்து விடுகிறார்கள் பலர்.

எந்த கடையில் எது நல்லதாகவும் விலை மலிவாகவும் கிடைக்கும் என்பது பெற்றவர்களின் விசாரிப்பு என்றால் எந்த வீட்டருகே WiFi சிக்னல் கிடைக்கிறது என்பது நண்பர்கள் மூலம் பசங்களுக்கு அத்துப்படி.

தங்களுக்கு செலவின்றி இலவசமாக டவுன்லோட் செய்வதற்கும் பேஸ்புக் பார்க்கவும் WiFi சிக்னல் கிடைக்கும் வீட்டின் அருகிலுள்ள மரத்தடியிலோ மதில் சுவரிலோ இடம் பிடித்துவிடுவார்கள்.

கல்வியால் பெற்ற அறிவை ஆக்கப் பூர்வமானவைக்கு மட்டும் உபயோகப் படுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும்...!

வீட்டில் இணைய இணைப்பு இருந்தும் சிலர் ஒரு த்ரில்லுக்காக இந்த வேலை செய்வதை  அறிந்த போது, திருட்டைக் கூட சாமர்த்தியம் என்று எண்ணத் துவங்கி விட்ட இளைஞர்களின் மனப்பாங்கை மாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் சமூகத்தால் அலட்சியப் படுத்தப் பட்டுவிட்டதை உணர முடிந்தது.

பெரிய கல்வி நிறுவனங்களின் வளாகங்களில், அலுவலகங்களில் WiFi வசதி இருக்கிறது இப்போதெல்லாம்.

BSNL நிறுவன மோடம்
வீட்டு உபயோகத்திற்காக இருக்கும் மோடம்களில் சிலதிலும் கூட இவ்வசதி இருக்கிறது. BSNL பிராட்பேண்ட் அலுவலகத்தில் இணைப்பின்போது WiFi வசதியுள்ள மோடம் / இல்லாத மோடம் என்று கேட்பார்கள். சில முறை நாம்  WiFi வசதி இல்லாத மோடம் கேட்டிருந்தாலும் 'ஸ்டாக்  இல்லை' என்று சொல்லி WiFi வசதியிருக்கும் மோடத்தை கொடுத்துவிடுவார்கள். இதனால் பலருக்கு இணைப்பு பெற்ற பிறகு தங்கள் மோடத்தில் WiFi வசதி இருப்பதை மறந்துவிடுவார்கள். பின்னர் ஒருநாள் தங்கள் மோடத்தில் ஆண்டெனா இருப்பதை பார்க்கும்போது பொறி தட்டும். ஆண்டெனா இல்லையென்றால் WiFi இல்லை என்று நினைத்துகொள்ள வேண்டாம். சில WiFi வசதியுள்ள மோடம்களில் ஆண்டெனா இருப்பதில்லை!!!

மார்கெட்டில் கிடைக்கும் பிற நிறுவன மோடம்
பிராட்பேண்ட் இணைப்பின்போது ஒருசில முறை அவர்களிடம் மோடம் எதுவுமே ஸ்டாக் இல்லை என்று கடையில் வாங்கிக்கொள்ள சொல்வார்கள். இவ்வாறு மார்கெட்டில் கிடைக்கும் மோடத்தில் WiFi on/off செய்வதற்கு தனியாக Button கொடுத்திருப்பார்கள்.அவ்வாறு Button இருக்கும் பட்சத்தில் உங்கள் உபயோகத்திற்கு பிறகு off செய்து கொள்ளலாம். BSNL நிறுவன மோடம்களில்  இவ்வசதி கிடையாது. அதற்காக பாஸ்வேர்ட் 'ஐ போட்டுவிட்டால் இதுபோன்ற நூதனத் திருட்டில் நம் போன் பில் எகிறாமல் பார்த்துக் கொள்ளலாம்.



இந்த மோடம் லாக் எப்படிப் போடுவதென எங்க வீட்டு கணினி நிபுணர் சிபி சொல்கிறார்...


உங்கள் Address Bar'ல் 192.168.1.1 என்பதை டைப் செய்து பிறகு 'Enter' கொடுங்க.

பிறகு வரும் Dialogue Box'ல் Username'க்கு நேராக admin என்று கொடுக்கவும். Password'-ம்  admin தான். பின் உள்நுழையவும்.

 (பி.எஸ்.என்.எல் பிராட்பேண்ட் அனைத்திற்கும் Username,  admin பொதுவானது.)

இப்போது வரும் பக்கத்தில் இடது ஓரத்தில் Wireless'ஐ கிளிக் செய்யவும்.

அடுத்து வருவதில்  Security'ஐ க்ளிக் செய்யவும்.

அதில் WEB  Encryption என்று உள்ள இடத்தில் Disabled என்றிருக்கும் பட்சத்தில் Enabled என்று மாற்றிக்கொள்ளவும்.

பிறகு Current Network Key என்ற இடத்தில் 1'ஐ தேர்வு செய்யவும்.

பிறகு Network Key 1 என்ற இடத்தில் தங்களுக்கு பிடித்தமான பாஸ்வேர்ட்'ஐ இடுங்கள்.  (நான்கிலும் வேறு வேறு பாஸ்வேர்ட் வைத்துக் கொண்டு Current Network Key 'ஐ மாற்றி மாற்றியும் பயன்படுத்திக் கொள்ளலாம்)

எல்லாம் முடிந்து Save/Apply என்பதை மறக்காமல் க்ளிக் செய்யவும்.

 *பி.எஸ்.என்.எல் நிறுவன மோடத்திற்கு மட்டுமே இது பொருந்தும்.


Step 1

Step 2

Step 3

Step 4

Step 5

Step 6

Step 7


உஸ்ஸ்... இவ்வளவு கஷ்டம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் புதிதாக இணைப்பு பெறும்போது WiFi வசதி வேண்டுமாயின் மோடத்தை கடையில் வாங்கிகொள்ளலாம். ஆனால் நெட் பிரச்னை என்று BSNL அதிகாரிகளை கூப்பிட்டால், 'உங்கள் மோடத்தில் தான் பிரச்னை.... எங்க மோடமாயிருந்தால் பிரச்சனையில்லை... நாங்களே சர்விஸ் செய்துவிடுவோம்' என்பார்கள்!!! 

கள்ளம் பெரிசா? காப்பான் பெரிசா? என்பார்கள் அந்த காலப் பெரியவர்கள். பூட்டு என்று ஒன்றிருந்தால் சாவியும், கள்ள சாவியும் இருக்கத் தானே செய்கிறது  என்கிறான் சிபி!




10 கருத்துரைகள்
  1. கல்வியால் பெற்ற அறிவை ஆக்கப் பூர்வமானவைக்கு மட்டும் உபயோகப் படுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும்...!

    ஒரு hmt வாட்ச் தந்த குதூகலத்தை இன்றைய iphone கூட தருவதில்லை.

    நியாயம் தான்..

    ReplyDelete
  2. பெரிதினும் பெரிது கேட்கவும், கிடைத்தவுடன் அதற்கும் பெரிது தேடவுமாக... திருப்தியில்லாத இன்றைய தலைமுறை...

    தகவல்களின் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. WiFi பற்றிய விபரங்களை இப்போதுதான் அறிந்துகொள்ளும் அளவுக்கு பின்தங்கியிருக்கிறேன் பாருங்கள்! :-) பயனுள்ள பகிர்வு. சிபிக்கு என் அன்பும் நன்றியும். :-)

    ReplyDelete
  4. புதிய விஷயம் . பயனுள்ள பகிர்வு ...!

    ReplyDelete
  5. பயனுள்ள பகிர்வு.....

    hmt வாட்ச் தந்த மகிழ்ச்சி.... உண்மை சகோ.

    ReplyDelete
  6. நல்ல பயனுள்ள பதிவு .

    நெட் பிரச்னை என்று BSNL அதிகாரிகளை கூப்பிட்டால், 'உங்கள் மோடத்தில் தான் பிரச்னை.... எங்க மோடமாயிருந்தால் பிரச்சனையில்லை... நாங்களே சர்விஸ் செய்துவிடுவோம்' என்பார்கள்!!! //

    நீங்கள் சொன்னது 100க்கு 100 உண்மை எனக்கு அந்த அனுபவம் இருக்கிறது.

    "நானெல்லாம் படிக்கிற காலத்தில்..." ஒவ்வொரு அப்பா அம்மாவுக்கும் மனசில் அவங்கவங்க அனுபவங்கள் ... ஒப்பீடுகள்...//

    நிச்சயம் ஒப்பீடுகள் உண்டு மனதில்.

    ReplyDelete
  7. அடடா! இப்பிடியெல்லாம் கூட இருக்கா நிலா?

    ReplyDelete
  8. தொழியாரே,
    நீங்கள் யார்? என்னவெல்லாம் எழுதுகிறீர்கள். கதை, கட்டுரை, கவிதை, மருத்துவம், இப்போது கணிணி மற்றும் வலைதள இணைப்பில் உள்ள நுனுக்கங்கள்.... யப்பப்பா... கலக்குறிங்க போங்க.
    நல்ல தகவல். பலருக்கும் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன். (சிபி உங்கள் வாரிசோ?)
    கண்ணன், தஞ்சையிலிருந்து.

    ReplyDelete
  9. ஒன்று புரிகிறது. எந்தக்காலத்தில் இந்தக்காலம் வந்தாலும் ஏதோ ஒரு அந்தக்காலம் புலம்பிக்கொண்டேயிருக்கிறது.

    கணினி விவரங்கள் தலைக்குமேலே.. உஷ்!

    ReplyDelete