(மயிலாடுதுறை-திருவாரூர் பேருந்தில் காலை 7.30 மணிக்குஒரு ஆசிரியர், மாணவரிடையேயான உரையாடல்)
இந்தக் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற ஒரு மாணவன் விடுமுறைக்கு தன் உறவினர் வீடு சென்று திரும்புகிறான் தன் சொந்த ஊருக்கு. ஏனெனில் அன்றுதான் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நாள். (21.06.2012)
மூவர் அமரும் இருக்கையின் சன்னலோர இருக்கையில் அவன் அமர்ந்திருக்க, அருகில் துணைக்கு வந்த உறவுப் பெண்மணி. பேருந்தில் கூட்டம் அதிகரிக்கவும், அருகில் நின்ற ஒருவர் இடம் மாறி அமருமாறு கேட்கிறார். பெண்மணி சன்னலோரம் நகர பையன் நடுவில் மாறுகிறான். உட்கார்ந்த மறுநிமிடம், அவர் பேச்சைத் துவக்குகிறார்.
பயணி: என்ன படிக்கிறே தம்பி?
பையன்: பத்தாவது பாஸ் பண்ணியிருக்கேன்.
பயணி: இந்த வருஷமா?
பையன்: ம்...
பயணி: என்ன மார்க்?
பையன்: (தயங்கி, சங்கடத்துடன்) 307 தான்....
பயணி: 500ல் மீதி எங்க போச்சு?
(பையன் குற்ற உணர்வில் நெளிய, “ப்ளஸ் டூ-வில் வாங்கிடுவான் நிறைய” என உறவுப் பெண்மணி சமாளிக்கிறார்.)
பயணி: நானும் திருக்கண்ணபுரத்தில் ஆசிரியரா தான் பணி செய்யறேன். மார்க் ஷீட் எழுதத் தான் இப்ப போய்கிட்டிருக்கேன். எல்லோருக்கும் பதிவு பண்ணி கொடுக்க எல்லாப் பள்ளிகளிலும் மதியம் ஆயிடும். வீட்டுக்குப் போயிட்டு நீங்க பொறுமையா பதினொரு பண்ணெண்டு மணிக்கு பள்ளிக்கூடம் போனாப் போதும்.
(தலையாட்டிய பையன் பேசாதிருக்க, பின் இருக்கையில் கல்லூரி மாணவர்களின் அலைபேசியில் சமீபத்திய காதல் பாடல்களின் ஆரவார இறைச்சல். ஆசிரியர் மீண்டும் பேச்சைத் துவங்குகிறார்.)
ஆசிரியர்: என்ன பிரிவு கேட்கலாம்ன்னு இருக்கே, மேற்கொண்டு படிக்க?
பையன்: சி. எஸ். தான்...
ஆசிரியர்: ம்ம்... தருவாங்களா இந்த மார்க்குக்கு? கேட்கணும், அப்பா அம்மாவை விட்டு தலைமையாசிரியர்கிட்ட விடாப்பிடியா... கேட்டு வாங்கினா மட்டும் போதாது. இன்னும் கடுமையா உழைச்சுப் படிக்கணும். ப்ளஸ் டூவில் 1200க்கு 1170க்கும் மேல மதிப்பெண் எடுக்கணும். வேலைக்குப் போகணும். கை நிறைய சம்பாதிச்சு பெரிய்ய ஆளாகணும். அப்பா, தாத்தாவை விட ...
பின்னாடி பையன்க பேசிக்கிறாங்க பாரு... ‘அந்த வாத்தி போடவே மாட்டாண்டா... இதுல இன்னும் 30 மார்க்கு எடுத்திருக்கனும்டா'ன்னு... தான் சரியா படிச்சு எழுதாததை மறைச்சு வாத்தியார் மேல குறை சொல்றான் பார். இவன் ஒழுங்கா எழுதியிருந்தா அவர் ஏன் குறைச்சிருக்கப் போறார்? அதனால தான் பி.இ. சேர முடியாம ஐ.டி.ஐ. சேர்ந்திருக்கானுங்க...
எங்க தலைமையாசிரியர் ஒருத்தர் ரொம்ப அழகாச் சொல்வார், ‘ஆடு மாடுங்களை அவுத்து விட்டா என்ன செய்யுது...? நேரா பச்சை தேடி மேயுது. இராத்திரி பூரா சுவாசிச்சிட்டிருக்கற மரமெல்லாம் சூரியன் உதிச்சதும் என்னா செய்யுது...? ம்... என்ன செய்யுது?
பையன்: ஒளிச்சேர்க்கை செய்யுது.
ஆசிரியர்: ஆங்... சூரியன் இருக்கற வரைக்கும் தனக்கான உணவு தயாரிக்குது. ஆனா மாணவப் பருவத்துல நாம என்ன செய்யறோம்...? டி.வி., கம்ப்யூட்டர், செல், கிரிக்கெட் இப்படி கவனத்தை பலதுலயும் சிதறடிக்கிறோம். அப்பறம் எப்படி அதிக மார்க் எடுக்க முடியும்?
இந்த ரெண்டு வருஷமும் நீயும் இதெல்லாம் குறைச்சுக்கணும். விளையாட்டு வேணும்தான்... ஒருமணி நேரம் விளையாண்டதும், நான் படிக்கணும் போறேண்டான்னு சினேகிதன் கிட்ட சொல்லிட்டு வீட்டுக்கு வந்துடணும்.
சி.எஸ். சேரணும்னியே... மேத்ஸ் வருமா உனக்கு?
பையன்: ம்ஹும்... அவ்வளவா வராது.
ஆசிரியர்: அப்புறம்? இப்ப மேத்ஸ்ல என்ன மார்க் எடுத்திருக்கே?
பையன்: 60 தான்...
ஆசிரியர்: 60 வாங்கியிருக்கியா! அப்புறம் வராதுன்னே... 35 வாங்கறவன் தான் வராதுன்னு சொல்லனும். 200க்கு 120 வாங்க முடியும் உன்னால. இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டு படிச்சா இன்னும் கூட வாங்கிடலாமே...
எம்பொண்ணு ப்ளஸ் டூவில 1164 மார்க்! நாகை மாவட்டத்திலேயே முதலா வந்தவ. பி.இ. முடிச்சிட்டு இப்ப 40,000 சம்பளம் வாங்கறா! பொம்பள புள்ள... அவளாலயே முடியுது... ஆம்பள புள்ள உன்னால முடியாதா?
(பூந்தோட்டம் வந்துவிட அப்பெண்மணியும் அப்பையனும் எழுந்து இறங்கினர். பெண்மணி இறங்குமுன் சொன்னார்... ‘உங்க வார்த்தைங்களை மனசில் ஏத்தி உணர்ந்தான்னா பின்னாள்ல பெரியாளா ஆகிடுவான் சார். நன்றி!' ‘எடுத்துச் சொல்லுங்கம்மா' என்றபடி அவர்கள் இறங்க கூட்டத்தை விலக்கி வழி ஏற்படுத்திக் கொடுத்தார் அம்மருத்துவர்.)
‘நோய்நாடி நோய்முதல் நாடிஅது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்'ன்னு வள்ளுவர் மருத்துவருக்கு மட்டுமா சொல்லிச் சென்றார்...?!
ஆச்சார்ய தேவோ பவ!!