பயணத் தடை

அம்மணிக் கெழவிக்கு எமன் ஓலையனுப்பி ஏழெட்டு நாளாச்சு கிளம்பற வழியாயில்ல கெழவி. ஊர் சுத்தி திரியிற ஒத்த மவன்... கண்ணாலம் கட்டாத கோயில் காளை கிழவி தலைமாட்டுல நிக்க அசலூரில் வாக்கப்பட்ட பெத்த மவள் சேதி கேட்டு ஓடி வந்து ஆச்சு மூணு நாளு கெடக்கற...

தடுத்தாட்கொண்ட மழை

வெயில் பூத்துக் கிடந்தவொருஅந்தி மாலை...திடுமென சூழ்ந்த மேகம்குளிர்ந்து மழை தருவித்தது. நனையாமல் பள்ளி விட்டு வரவேணும் குழந்தைகள் ... வழக்கமாய் கிறக்கம் தரும்மண் வாசமும் ஈரக் காற்றும்பாசப் பரிதவிப்பில்ஈர்ப்பற்றுப் போனது. மூடிய கதவும்திறந்த சாளரமும்சாரல் தடுக்கவும்சாலை தெரியவும்... சாளரம் தாண்டியசாத்துக்குடி மரத்தின்நனைந்து சொட்டும் இலைகளின்சிறு மறைப்பில்...

வாழ்த்தலாம் வாங்க!

அவர்களுடைய பணமும் ... ஒட்டுத் துணியும் நழுவுகின்ற சுரணையின்றிப் பசியில் புலம்பியபடி தெருவோரம் புரள்கிறாள் உடல் முழுவதும் புண்களைச் சுமந்த மனநிலை தவறிய பெண்ணொருத்தி ....! வீங்கிய சோகை முகத்திலும் சின்னப் புன்னகை தேக்கி வருவோர் போவோரிடம் கையேந்துகிறாள் இனிப்புக் கடை வாசலில் அந்த முதியவள் ...! தண்ணீரைக்...