தாத்தா வைத்தியம்!

     'வலி'யின் வேதனை மனிதர்களுக்கு சகிக்க முடியாத ஒன்றுதான். அதிலும் உடல் உபாதையால் ஒரு வலியென்றால் அந்நேரத்தில் அவ்வலி ஒன்றே உலகின் மிகக் கொடூரமானதாய் நமக்கு காட்சியளித்து நம்மை புலம்ப வைக்கும்.
     பல்வலியோடிருக்கும் ஒருவரிடம் கேட்டால் சொல்வார், 'பல்வலி தான் உலகத்திலேயே மிக மோசமானது' என்று.
     வயிற்றுவலிக்காரர் சொல்வார், 'இந்த பாட்டுக்கு தூக்கு போட்டு சாகலாம்' என்று!
     'மண்டையை பிளக்குது ' என்பவர்களும், 'உடைக்குது' என்பவர்களும் தலைவலிக்காரர்கள்.
     நெஞ்சு வலியா... கேட்கவே வேண்டாம். அடுத்த சிலநிமிடங்களில் இசிஜி நம் கையிலிருக்கும்.
     இன்றைய நம் பதிவின் நாயகிக்கு அதிகாலை மூன்று மணி முதலே அடிவயிற்றில் சக்கை வலி. நேரமாக நேரமாக வலி மேல் நோக்கி பரவி நெஞ்சுவரை அவஸ்த்தை . நான்கு மணிக்கு மேல் படுக்க சகிக்காமல் எழுந்து பாத் ரூம்  செல்கிறாள்.
     சற்று மட்டுப்பட்ட வலி சிறிது நேரம் கழித்து வேலையை காட்டுகிறது. மறுபடி பாத் ரூம்  ! நான்காவது தடவை  கணவரும் குழந்தைகளும் எழுந்தாச்சு. பரபரப்பாக ரெடியாகிறார் கணவர்... மருத்துவமனைக்கு.  இதற்குள் எண்ணிக்கை ஆறானது.
     வலியும் வேதனையும் வாட்டினாலும் மருத்துவமனை போக விரும்பவில்லை  நம் நாயகி.
      'வேறேன்னதாம்மா செய்யறது? பிடிவாதத்துக்கு இதுவா நேரம்? கிளம்பு' என்கிறார் கணவர்.
     'அதாங்க சொல்றேன். குதிகால் வலி வாதத்துக்கு போன வாரம் ஒரு தாத்தாவை பார்த்து மருந்து வாங்கி வந்தோமே ... அவருக்கு போன் செய்து 'இப்படியிருக்கு, என்ன செய்யலாம்னு கேளுங்க' சொல்லியபடி விட்டு விட்டு தாக்கும் வலியரக்கனோடு பாத் ரூம்க்கு பாய்ந்தாள்.
     தாத்தா நாலு தலைமுறை சித்த வைத்தியப் பரம்பரை. மத்திய அரசுப் பணி ஓய்வுக்குப் பின் வைத்தியம் பார்ப்பது முழு நேரப் பணியானது. நண்பர் ஒருவர் மூலம் மிகச் சமீப அறிமுகம். பதினைந்து நாட்களுக்கு மேலாய் படுத்தியெடுத்து  நொண்டியடிக்க வைத்த குதிகால் வாயுவெனும் இராட்சசனை நான்கைந்து நாட்களில் தன் மூலிகைப் பொடிகளால் 'ஏன்' என்று கேட்டவர்.
     "அரசமர இலைக் கொழுந்து கொஞ்சம் பறித்து அரைத்து காய்ச்சாத பாலுடன் சாப்பிட்டுப் பாருங்க" வைத்தியர் தாத்தா சர்வ சாதாரணமாய் சொன்னார்.
     சுறட்டு கழியோடு கிளம்பினார் கணவர் .
     எண்ணிக்கை எட்டை எட்டியது. நாயகிக்கு நம்பிக்கை தளரவில்லை.
     ஐயப்பன் புலிப்பாலாய்  அரசம்கொழுந்து வந்தாச்சு.
     அம்மியில் அரைத்து தந்தார் மாமியார்.
     மருந்து 'பட்'டென்று கேட்டது.
     பாரம்பர்யம் பாரம்பர்யம் தான்!!


23 கருத்துரைகள்
  1. நம் முன்னோர்களிடம் எத்தனை எத்தனை ரகசியங்கள்... அவர்களது கைவைத்தியம் பலிக்கத்தான் செய்கிறது. என் அம்மாவும் நிறைய வைத்தியம் சொல்வார்கள்...

    நல்ல பகிர்வு....

    உங்களுக்கு எனது தீப ஒளி நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. பல சமயம் நம்பிக்கை மட்டுமே, குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது...

    ReplyDelete
  3. முன்னோர் வைத்தியங்களை மெள்ள மறந்துகொண்டிருக்கும் வேளையில் நல்லதோர் பதிவு. வலி அப்போதைக்கு குணமானாலும் வலிக்கான மூல காரணத்தைக் கண்டுபிடித்து வைத்தியம் செய்துகொள்வது நல்லது.

    ReplyDelete
  4. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. தமிழ் மருத்துவத்தில் நிறைய இருக்கிறது.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. மருந்து 'பட்'டென்று கேட்டது.
    பாரம்பர்யம் பாரம்பர்யம் தான்!!

    ReplyDelete
  7. என்னதான் இருந்தாலும் நமது பராம்பரிய வைத்திய முறைகளுக்கு என்றுமே பெரிய மதிப்பு தான் இருக்கிறது. சிறு துளி தான் கதை. அதை மிக அழகிய நடையுடன் எழுதியிருக்கிறீர்கள்!!

    ReplyDelete
  8. @வெங்க‌ட் நாக‌ராஜ்...

    ஆம் ச‌கோ... அந்த‌ ர‌க‌சிய‌ங்க‌ளை அடுத்த‌ வாரிசுக‌ளுக்குக் க‌ட‌த்தி அழியாம‌ல் காக்கும் பாங்கும் முன்னோரை விய‌ந்து போற்ற‌ வேண்டிய‌ ஒன்றாகிற‌து. அம்மாவின் வைத்திய‌ங்க‌ளை, ப‌க்குவ‌ங்க‌ளை அவ்வ‌ப்போது ஆதியின் ப‌திவுக‌ளில் பார்த்து வைத்துக் கொள்ள‌வும் த‌வ‌றுவ‌தில்லை நான்.

    தீப‌ஒளித் திருநாள் அனைவ‌ருக்கும் பிர‌காச‌மான‌ ம‌கிழ்வை அளிப்ப‌தாயிருக்க‌ட்டும்! ச‌கோத‌ர‌ வாழ்த்து பிற‌ந்த‌ வீட்டு சீர் போல் ம‌ன‌தை நிறைக்கிற‌து.

    ReplyDelete
  9. suryajeeva said...:
    22 October 2011 13:33

    பல சமயம் நம்பிக்கை மட்டுமே, குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது...

    ப‌திவின் நாடிக‌ளுள் ஒன்றைக் க‌ண்டுபிடித்த‌மை பாராட்ட‌த் த‌க்க‌து.
    தொட‌ர்வ‌ருகையும் க‌ருத்தும் உற்சாக‌மூட்டுவ‌தாய் உள்ள‌து. ந‌ன்றி.

    ReplyDelete
  10. @ கீதா...

    //வலி அப்போதைக்கு குணமானாலும் வலிக்கான மூல காரணத்தைக் கண்டுபிடித்து வைத்தியம் செய்துகொள்வது நல்லது.//


    க‌வ‌ன‌த்தில் கொள்ள‌ப்ப‌ட‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம்தான். உபாதை அடிக்க‌டி வ‌ருமாயின், "நோய்முத‌ல் நாடி, அது த‌ணிக்கும் வாய்நாடுவ‌து" மிக‌ அவ‌சிய‌மே. ந‌ன்றி.

    ReplyDelete
  11. @ ர‌த்ன‌வேல் ஐயா...

    ம‌கிழ்வும் ந‌ன்றியும்!

    ReplyDelete
  12. shanmugavel said...:
    22 October 2011 19:23

    தமிழ் மருத்துவத்தில் நிறைய இருக்கிறது.//

    ஆம் ஐயா. ப‌ல‌ச‌ம‌ய‌ங்க‌ளில் நாம்தான் 'ந‌ம்' ப‌ல‌ம் உண‌ராதிருக்கிறோம்.

    ReplyDelete
  13. இராஜராஜேஸ்வரி said...:
    22 October 2011 23:33

    மருந்து 'பட்'டென்று கேட்டது.
    பாரம்பர்யம் பாரம்பர்யம் தான்!!

    ஆமோதிக்கும் கருத்துக்கு நன்றி சகோதரி.

    ReplyDelete
  14. மனோ சாமிநாதன் said...:
    23 October 2011 00:14

    என்னதான் இருந்தாலும் நமது பராம்பரிய வைத்திய முறைகளுக்கு என்றுமே பெரிய மதிப்பு தான் இருக்கிறது. சிறு துளி தான் கதை. அதை மிக அழகிய நடையுடன் எழுதியிருக்கிறீர்கள்!! //

    ச‌ரியான‌ அவ‌தானிப்பு. பாராட்டில் ம‌கிழ்கிறேன் ச‌கோத‌ரி.

    ReplyDelete
  15. இம்மாதிரி உடனடி எளிய வைத்தியங்கள் தெரிய வராமல் போவதால் ஆங்கில மருந்துகளும் அதன் பக்க விளைவுகளும் பணச்செலவும் அதிகரித்துக் கொண்டே போகின்றன..

    ReplyDelete
  16. வலிக்கு வழி சொல்லும் நல்ல பதிவு ...

    ReplyDelete
  17. @ ரிஷ‌ப‌ன்...

    க‌ரெக்ட் சார்.

    @அன‌ந்து...

    முத‌ல் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி!

    ReplyDelete
  18. பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்!

    விடியற்காலை வெறும்வயிற்றில் காய்ச்சாத பசும்பாலில்
    எலுமிச்சை பிழிந்து உடனே[பால்திரியுமுன்] குடித்தால் மூன்றுநாளில் மூலம் அறுவைச்சிகிச்சை இன்றி குணம்மாகும் என்று படித்திருக்கிறேன்.
    இதைப்பற்றி யாருக்காவது தெரியுமா?

    ReplyDelete
  19. தெரிந்து வைத்திருப்பது நமக்கும் நல்லது நிலா.நன்றி !

    ReplyDelete
  20. என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி தங்கள் பகிர்வுக்கு .......

    ReplyDelete
  21. தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. மரபு வைத்தியம் பற்றி எழுதவேண்டும் நிலாமகள். இது எந்தக் காலக் கட்டத்தையும் நிரப்பும் தேவையைக் கொண்டது. அருமை.

    ReplyDelete
  23. @ ல‌லிதா மிட்ட‌ல்...

    த‌ங்க‌ள் குறிப்பும் மிக‌ப் ப‌ய‌னுள்ள‌தாய் இருக்கும் போலிருக்கிற‌து. உபாதையுற்றோருக்கு அவ‌சிய‌ம் சொல்வேன். வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி!

    @ஹேமா...

    நிச்ச‌ய‌மாய்!

    @அம்பாள‌டியாள்...

    மிக்க‌ ந‌ன்றி!

    @ரெவ‌ரி...

    மிக்க‌ ந‌ன்றி!

    @ஹ‌ரிணி...

    ச‌ரியாக‌ச் சொன்னீர்க‌ள் ஐயா. தெரிந்த‌தைப் ப‌கிர்வோம்.

    ReplyDelete