
இன்னல்வந் துற்றிடும் போததற்கஞ்சோம்
ஏழையராகி யினிமண்ணிற் றுஞ்சோம்
தன்னலம் பேணி இழிதொழில்புரியோம்
தாய்த்திரு நாடெனி லினிக்கையைவிரியோம்
கன்னலுந் தேனும் கனியுமின்பாலும்
கதலியும் செந்நெல்லும் நல்குமெக்காலும்
உன்னத ஆரிய நாடெங்கள்நாடே
ஓதுவ மிஃதை யெமக்கிலையீடே
-மகாகவி பாரதியார்.
சிலிர்க்கவைக்கிறது பாரதியின் மொழி.
ReplyDeleteபொருத்தமான வரிகளை நினைவுறுத்திய உங்களுக்குப் பாராட்டுக்கள்.
ஜெய்ஹிந்த்.
குடியரசு தின நல்வாழ்த்துகள்
ReplyDeleteகுடியரசு தின வாழ்த்துக்களுடன்
ReplyDeleteநான்.
பாரதியின் கவிதை வரிகள் சொல்லி ஒரு குடியரசு தின வாழ்த்து. நன்றி சகோ.
ReplyDeleteபாரதி கவி கொண்டு வாழ்த்து சொன்ன உங்களுக்கு நன்றிகள் பல..
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDelete